சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் சமீபத்தில் தமிழகத்திற்கான பல்வேறு நலத்திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணிக்கும் விழாவில் பிரதமர் மோடி கலந்துகொண்டார். பின்னர் நிகழ்ச்சி முடிந்து டெல்லி புறப்பட்ட பிரதமரரை அல்லயன்ஸ் பதிப்பகத்தின் அல்லயன்ஸ் வி.சீனிவாசன் சந்தித்தார். அப்போது, பாரத மாதாவுக்கு பிரதமர் எழுதிய கடிதங்களின் தொகுப்புகள் அடங்கிய ‘அன்னையின் திருவடிகளுக்கு’ என்ற பெயரில் தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட புத்தகத்தை பிரதமரிடம் வழங்கினார். அந்த புத்தகத்தை பிரதமர் வெளியிட்டார். ‘பிரதமர் மோடி ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரகராக இருந்தபோது, நாட்டின் நிலை தொடர்பான தனது எண்ணங்களை பாரதமாதாவுக்கு கடிதமாக எழுதினார். அவர் எழுதிய சில கடிதங்கள் காணாமல் போய்விட்டன. அவரது நண்பர் ஒருவர், எஞ்சியுள்ள கடிதங்களை தொகுத்து வைத்தார். பின்னர், கடந்த 2019-ல் முதல்முறையாக, பிரதமர் மோடி எழுதிய கடிதங்கள் தொகுக்கப்பட்டு, குஜராத்தி மொழியிலும் ஆங்கிலத்திலும் புத்தகமாக வெளிவந்தது. பிறகு மோடியிடம் அனுமதி பெற்று, அந்த புத்தகத்தை ‘அன்னையின் திருவடிகளுக்கு’ என்ற பெயரில் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டது. அதைதான் பிரதமர் விமான நிலையத்தில் வெளியிட்டார்’ என அல்லயன்ஸ் வி.சீனிவாசன் தெரிவித்துள்ளார். கவைக்கு உதவாத சில புத்தகங்கங்களைகூட வெளியிடுவதற்கு சிலர், லட்சக்கணக்கில் செலவு செய்து வெட்டி விளம்பரம் செய்கையில், பிரதமர் நினைத்திருந்தால் தனது புத்தகத்தை ஒரு தனி விழா ஏற்பாடு செய்து வெளியிட்டிருக்கலாம் அல்லது அன்று நடந்த அரசு விழாமேடையிலேயே கூட தனது புத்தகத்தை வெளியிட்டிருக்கலாம். ஆனால், விளம்பரம் ஏதுமின்றி ஒரு சிறிய நிகழ்ச்சிகூட இன்றி பிரதமர் தனது புத்தகத்தை வெளியிட்டிருப்பது உண்மையிலேயே பாராட்டத்தக்கது.