அன்னபூரணி சிலை பிரதிஷ்டை

காசியில் உள்ள ஒரு கோயிலில் இருந்து அன்னபூரணி சிலை சுமார் 100 ஆண்டுகளுக்கு முன் திருடப்பட்டு, வெளிநாட்டுக்கு கடத்தப்பட்டது. கனடாவின் ரெஜினா பல்கலைக்கழகத்தில் கண்டறியப்பட்ட இச்சிலை மத்திய அரசின் தீவிர முயற்சியால் கடந்தஆண்டு நவம்பரில் இந்திய தொல்லியல் துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. இச்சிலை அண்மையில் பாரதம் வந்து சேர்ந்தது. டெல்லியில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் இச்சிலையை உத்தர பிரதேச அரசிடம் மத்திய கலாச்சாரத் துறை ஒப்படைத்தது. இந்த அன்னபூரணி சிலை அலிகர், கன்னோஜ், அயோத்தி வழியாக வாரணாசி கொண்டு செல்லப்பட்டு, வரும் திங்கட்கிழமை காசி விஸ்வநாதர் கோயிலில் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது. இதனால் வாரணாசி இப்போது விழாக்கோலம் பூண்டுள்ளது.