காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட மத்திய நீர் வளத்துறை அமைச்சர், மேகதாதுவில் அணை கட்ட அனுமதி தரக்கூடாது. ஒரே கட்சியாக இருந்தாலும், கர்நாடக அரசின் இந்த முடிவை எதிர்த்து, ஆகஸ்ட் 5ல், தஞ்சாவூரில், என் தலைமையில், தமிழக பா.ஜ.க விவசாய அணி சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெறும்’ என, அண்ணாமலை அறிவித்துள்ளார். இதனை சற்றும் எதிர்பாராத எதிர்கட்சிகளிடையே இந்த அறிவிப்பு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனை மெய்ப்பிக்கும் விதமாக, போகாத ஊருக்கு அண்ணாலை வழி கூறுகிறார் என காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கூறியுள்ளார். காவிரி பிரச்னையில், பிரதமர் மோடி, ஜல் சக்தி அமைச்சகத்தைதான், தமிழகம் உள்ளிட்ட மாநிலங்கள் அணுக வேண்டும். அதை விடுத்து, தெளிந்த பார்வையின்றி அண்ணாலை போராட்டம் அறிவித்துள்ளார் என புரிந்துகொள்ளமுடியாத அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் மா.கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் கனகராஜ். இது தமிழக போராட்டக் களத்தை திசை திருப்பும் முயற்சி என கருத்து தெரிவித்துள்ள விவசாய சங்கத் தலைவர் பி.ஆர் பாண்டியன், அந்த கருத்தின் வாயிலாக கை நழுவும் தங்களின் அரசியல் பிடிப்பை வெளிச்சம்போட்டுக் காட்டிவிட்டார் என நெட்டிசன்கள் வலைத் தளங்களில் கருத்து பதிவு செய்துள்ளனர்.