அஞ்சா சிங்கம் அஜித் தோவால்

இஸ்ரேலின் டேவிட் கீம்சி, எலி கோஹன் என தேர்ந்த உளவாளிகள் சரித்திரம் வாசிப்போர் மனதை உறைய வைக்கும் ரகம் அவ்வளவு சாகசம்

இன்னும் சில உளவாளிகள் அப்படி உலகில் உண்டு, பாரதத்தில் அந்த மிகசிலரில் இன்று உலகம் உற்று கவனிக்கும் ஒருவர் உண்டென்றால் அது அஜித்தோவால்

இன்று அமெரிக்காவின் மைக் பாம்பியோ போல ஆசியாவில் சக்திமிக்க நபர் என உலகம் அவரைத்தான் நோக்குகின்றது

அவர் உத்தர்காண்ட் மாநில பிறப்பு, படித்ததெல்லாம் ராணுவபள்ளி அதை தொடர்ந்து ஐபிஎஸ் முடித்து கேரளாவில் 70களில் பணிதொடங்கினார். அவரின் தந்தையும் ஒரு ராணுவத்தார்

1975க்கு பின் அவரின் சாகச வாழ்வு தொடங்கிற்று, எம்.கே நாராயணனின் சீடர் அவர்

1980களில் உளவாளியாக மிசோரம் மாநில சக்திகளுக்குள் ஊடுருவி அவர்களை நம்ப வைத்து, பர்மாவில் இருந்த அவர்கள் வேர்வரை கண்டறிந்து இந்திய அரசுக்கு தெரியபடுத்தி தப்பி வந்ததெல்லாம் மாபெரும் சாசகம், அதுவும் அவர்களுக்கு தன் பிராமண மனைவியினை பன்றிகறி வைத்து நம்பவைத்த சாகசமெல்லாம் தனிரகம்

அந்த மிசோர் எனும் தீவிரவாத இயக்கத்தில் ஊடுருவி அவர்களை குழப்பி அடித்து அவர்களை ஒழித்து கட்டியது இன்று உளவுதுறை பாலபாடம்

சிக்கிமினை கைபற்ற அமெரிக்காவும் சீனாவும் பல நாடகங்களை நடத்தியபொழுது தேர்ந்த ராஜதந்திரியாக செயல்பட்டு அதை இந்தியாவோடு இணைத்தவர், இந்திரா அந்த சாகசத்தில் தோவலுக்கு பெரும் இடம் கொடுத்தார்

பொற்கோவில் ஆப்பரேஷன்களிலும் பஞ்சாபின் தீவிரவாதத்தை கட்டுபடுத்தியதிலும் அவருக்கு பங்கு இருந்தது, இந்திரா அவரை பல ரகசிய ஆப்ரேஷன்களுக்கு பயன்படுத்தினார்

நமக்கெல்லாம் ஆப்பரேஷன் புளூஸ்டார் தெரியும், ஆப்பரேஷன் பிளாக் தண்டர் தெரியாது

அதாவது இந்திரா படுகொலைக்கு பின்னும் காலிஸ்தான் அடங்கவில்லை, 1986 மற்றும் 1988ல் பொற்கோவிலை கைபற்றி மறுபடியும் சவால் கொடுத்தார்கள், இந்திராவே இல்லா நிலையில் டெல்லி தலமை பீடம் அஞ்சியது

பொற்கோவிலுக்குள் என்ன நடக்கின்றது என தவியாய் ராணுவம் தவித்த நிலையில் களத்துக்கு வந்தார் தோவல்

ரிக்சாகாரன் வேடத்தில் சுற்றி காலிஸ்தான் இயக்கத்தில் தான் பாகிஸ்தான் உளவாளி என ஊடுருவி, அவர்கள் பஞ்சாப் கோவிலை முற்றுகையிட்டிருந்தபொழுது கோவிலுக்குள் சென்று உளவு பார்த்து இந்திய ராணுவத்துக்கு சொன்னதெல்லாம் மாபெரும் தேசிய சேவை, உள்ளே இருந்த 200 தீவிரவாதிகளை பார்த்து வந்தது அவர்தான்

அவர்களுக்கு நீரும் மின்சாரமும் கிடைக்கா வகையில் அவர்களை மடக்கி ஆப்ரேஷன் பிளாக் தண்டரை வெற்றிகரமாக நடத்தி கொடுத்தார், இந்தியா அவரை கொண்டாடியது, பாகிஸ்தான் வெறுப்பாக பார்த்தது

பின்னாளில் காலிஸ்தான் அவரை குறிவைத்து தேடியும் சிக்கவில்லை

பஞ்சாபுக்கு பின்பே காஷ்மீருக்கு வந்தார் தோவல், அங்கும் ஊடுருவி சில சில்லறை இயக்கங்களை நடத்தி பெரும் தகவலை கொண்டுவந்தார், இந்தியாவுக்கு காஷ்மீர் தீவிரவாதத்தை முழு வடிவமாக காட்டி கொடுத்தவர் அவரே

இன்னும் ஆழமாக உளவு பார்க்க பாகிஸ்தானில் 8 ஆண்டுகள் உளவாளியாக அவர் பணியாற்றியது இன்றும் பாகிஸ்தானியராலே ஜீரணிக்கமுடியா விஷயம்

ஆம் அவர் இஸ்லாமியராக மாறி, பாகிஸ்தானி பெண்ணையே மணமுடித்து மகா கில்லாடிதனமாக உளவுபார்த்து தகவல் சொன்னார்

ஆனாலும் காதில் இருந்த கம்மல் வடுவினை கண்டு சில பாகிஸ்தானியர் அவரை இந்து என அடையாளம் கண்டதும் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து மாற்றினார், பாகிஸ்தானின் உருது மொழியினை எல்லா ஸ்லாங்கிலும் பேசியது மகா ஆச்சரியம்

பாகிஸ்தானில் மாபெரும் உளவு வலையினை பின்னி வைத்தார் தோவல், அந்த வலை இன்றும் உண்டு, அஜித் தோவல் ஏற்படுத்தி வைத்ததே பலுசிஸ்தான் சிக்கல்

கிட்டதட்ட சிங்கம் பட சூர்யா போல பெரும் சாகசங்களை செய்தவர் அவர், அவராலே காலிஸ்தான் முதல் காஷ்மீரிய தீவிரவாதிகளின் விமானகடத்தல் பல முறியடிக்கபட்டன, பலமுறை தோற்று அவர்கள் கடைசியில் வென்ற இடம் காந்தகார் கடத்தல்

அது ஒன்றே தோவாலின் கரும்புள்ளி

அடிபட்ட சிங்கமாக அப்படியே ஓய்வுபெற்று 2005ல் குஜராத்தில் சில சேவைகளை செய்தபொழுதுதான் மோடி அஜித்தோவல் நட்பு உருவானது

இருவரும் நாட்டுபற்றை தவிர வேறு என்ன யோசிப்பார்கள், காலம் அவர்களுக்கு 2014ல் வாய்த்தது, தான் பிரதமரானதும் பாதுகாப்பு விஷயத்தில் தோவாலை தவிர யாரிடமும் ஆலோசனை கேட்டதில்லை

நாட்டின் தேசிய பாதுகாப்பு ஆலோசகரானார் தோவால்

அஜித்தோவாலின் வழிகாட்டலில்தான் இந்தியா காஷ்மீர் சிக்கலை தீர்த்தது, இன்னும் பல அதிரடிகளை செய்தது

நாட்டுக்காக உயிரை பணயம் வைத்து தான் செய்த மொத்த தியாகத்துக்கும் மதிப்பளித்து மோடி கொடுத்த வாய்ப்பினை இன்று மிக சிறப்பாக செய்கின்றார் தோவால்

ஒரு விஷயத்தில் நாம் மனம் நெகிழ்கின்றோம்

இன்று இத்தேசத்தின் நிஜபாதுகாப்பாளன் நாயகன் அஜித் தோவாலே, மோடி அவருக்கு முழு சுதந்திரம் கொடுத்திருக்கின்றார், மோடி என்பது முகமூடி என்றாலும் மிகையாகாது

தோவாலால் பலம் பெற்றது தேசம், தோவாலால் தீர்க்கமுடியா சிக்கல்களை தீர்த்தது தேசம்

மக்கள் தனக்கு தந்த ஆதரவை அப்படியே தோவலுக்கு கொடுத்து நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்த மோடியினை இந்த இடத்தில் வாழ்த்தியே தீரவேண்டும், அதில் அரசியல் இல்லை, வாக்கு அரசியல் இல்லை, புகழ் அரசியல் இல்லை

தேச நலன் ஒன்றே இலக்கு, இதனால்தான் மோடியினை நாம் வாழ்த்துகின்றோம்

அஜித் தோவாலின் சாதனைகளின் ஒரு துளியினைத்தான் நாம் சொன்னோம், இவை எல்லாம் சொற்பமாக வெளிவந்தவை, அஜித் தோவால் ரஷ்ய புட்டீன் போல தேர்ந்த உளவாளி என்பதால் பல கதைகள் வெளிவராது

ஆனால் 1980களில் இருந்து இத்தேசம் சாதித்த மாபெரும் பாதுகாப்பு மற்றும் உளவு விஷயங்களில் அவர் இருப்பார் அல்லது அவரின் நிழல் இருக்கும்

உளவாளியும் சாகசவீரனும் ஆட்சிக்கு வருவதெல்லாம் இஸ்ரேலில் மட்டும் சாத்தியம் என நினைத்த நிலையில் இந்தியாவில் அதை சாத்தியமாக்கினார் மோடி

ஜெய்சங்கர் , இந்த அஜித் தோவால் போன்ற மகா திறமையானவர்களை எப்படி பயன்படுத்த வேண்டுமோ அப்படி பயன்படுத்துகின்றார் மோடி

ஒரு காலம் வரும், அக்காலம் அந்த வரிசையில் இப்படி சொல்லும்

சாணக்கியன் சந்திர குப்தன் வரிசையில், வீரசிவாஜி காகபட்டர் வரிசையில், ஹரிகர புக்கர் வித்யாரண்யர் வரிசையில் மோடியும் அஜித்தோவாலும் நிச்சயம் வருவார்கள், வந்தே விட்டார்கள்

சுதந்திர் இந்தியாவின் ஒப்பற்ற உளவு தலைவனுக்கு, நாட்டுபற்று மிக்க சாகசகாரனுக்கு, உலமமகா ராஜதந்திர உளவாளிகளின் தலைமகனுக்கு இன்று பிறந்தநாள்

கண்ணன் உலாவிய மண் எக்காலமும் தலைசிறந்த உளவாளிகளை கொடுக்கும் என நிரூபித்த அந்த அஜித் தோவாலுக்கு பிறந்த நாள்

ஒரு நல்ல காவல் அதிகாரி எப்படி உளவாளியாக சாதிக்க முடியும் எப்படி எல்லாம் உயரமுடியும் என தன்வாழ்வினையே பாடமாக்கிய அந்த நாயகனுக்கு பிறந்தநாள்

வாழ்வின் ஒவ்வொரு நொடியினையும் மரணத்தின் வாசலில் இருந்து, நெருப்பை கடந்து, விஷத்தை ஜீரணித்து நாட்டிற்காக வாழும் நாயகன் அவர்

ஆம், கவலையாய் அதை சொல்லத்தான் வேண்டியிருக்கின்றது

வடகிழக்கு குழுக்கள், காலிஸ்தான், காஷ்மீரிய குழுக்கள், பாகிஸ்தான், ஈழம், ஆப்கன் என எல்லா நாட்டு தீவிரவாதிகளும் அவர் உயிருக்கு குறி வைத்திருக்கின்றனர்

அதாவது இந்நாட்டுக்கு எதிரான சக்திகளை அவர் உடைத்தெறிந்ததால் அனைத்து தேசவிரோத கண்களும் அவரை வெறிபார்வை பார்த்துகொண்டே இருக்கின்றது

ஆனால் இத்தேசம் உயரவும் வாழவும் நிலைக்கவும் வழிநடத்தும் தர்மத்தின் சக்தி தோவாலை இதுகாலமும் காத்து வருகின்றது

ஆலகால விஷத்தில் இருந்து உயிர்களை காக்க சிவன் அதை உண்டானாம், அப்படி இத்தேசத்தின் விஷங்களை தன்னில் எடுத்து உயிராபத்தில் இருக்கும் பரமசிவன் நம் நாயகன்

கங்கையின் பாய்ச்சலை சிவன் தலை தவிர யார் தலையும் தாங்காதாம், அப்படி 1980களின் பிரிவினைவாத பாய்ச்சலை தனியாக தன் தலையில் வாங்கியவன் அவன்

ஆனால் தர்மசக்தி அவனை காத்து நிற்கின்றது, அது எக்காலமும் தாங்கும், காக்கும்

இத்தேசத்தின் மாவீரனுக்கு, இந்தியாவின் காவலனுக்கு, நல்லோர் நாயகனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்

அவனுக்கெதிரான கனைகளும் திட்டங்களும் எக்காலம் போல் பொய்க்கட்டும், அந்த பெருமகனின் நுட்பமான திட்டத்தில் நாடு வாழட்டும்

நாம் கிருஷ்ண பரமாத்மாவின் வடிவமாகவே அவனை காண்கின்றோம், இந்த கண்ணனுக்கு மோடி எக்காலமும் துணையிருக்கட்டும், மோடிக்கு தேசம் எக்காலமும் பலமாய் இருக்கட்டும்

இந்த தேசத்தின் மொத்த மனமும், வாழ்ந்த ஆத்மாக்களும், வல்ல தெய்வங்களும் மூல பரம்பொருளும் அவனை வாழ்த்துகின்றது

வாழ்க நீ எம்மான் தேசம் வலுவுற வாழ்வதற்கே

ஜெய்ஹிந்த்