ஜெயிக்க வேண்டிய கட்சியின் பக்கமா? ஜெயிக்கக் கூடிய கட்சியின் பக்கமா?
ஒரு கதை. அண்ணன் தம்பி இரண்டே பேர். காடு. தெற்கு வடக்கு தெரியவில்லை. அண்ணன் மனைவியை காணோம். அடுத்த வேளை உணவு எங்கிருந்து என்று தெரியவில்லை. மனைவியை எப்படி கண்டுபிடிப்பது என்றும் தெரியவில்லை. இடைவிடாத தேடல்.
ஒரு மனிதன் எதையாவது செயவேண்டும் என்று வைராக்யத்தோடு இறங்கிவிட்டால் எல்லோரும் உதவிக்கு வருவார்கள். அவனை இவனை பிடித்து, தேடி, விசாரித்து மனைவி எங்கிருக்கிறாள் என்று கண்டுபிடித்து, சண்டைபோட்டு கூட்டி கொண்டுவந்து நல்லபடியாக குடும்பம் நடத்தினார்கள். எங்கிருக்கிறாள் என்று தெரியவில்லை. ஐயய்யோ என்று தலையில் கை வைத்துக்கொண்டு, இதெல்லாம் இருந்திருந்தால் நான் வெட்டி முறித்திருப்பேன். அவன் பெரிய ஆள். நான் சின்ன ஆள். என்று உட்காரவில்லை ராமன்.
துணைக்கு வந்தவர்களும் ‘யோவ், காணாம போனது உன் பொண்டாட்டி. இதுக்கு நாங்க எதுக்கு வரணும்? போயா, வேலைய பாத்துகிட்டு’ என்று சோல்லவில்லை. தங்களால் இயன்றதை செதார்கள். தூக்கிக்கொண்டு போனவன் பெரிய மன்னன் என்று அயரவில்லை. போராடினார்கள். சண்டையிட்டார்கள். இறந்தார்கள். ஆனால் துவளவில்லை. உடலில் வலு குறைவுதான். ஆனால் மனதில் தைரியம் இருந்தது. எதிரியை பார்த்து மலைக்கவில்லை. இடைவிடாத போராட்டம். கடைசியில் எதிரியின் மொத்த படையும் அழிய இறந்தான் எதிரி. கொண்டாடியது, மனைவியை இழந்த கணவன் மட்டுமல்ல, இன்று வரை உலகமும்தான் கொண்டாடுகிறது. ராமாயணம்.
இன்னொரு கதை. பங்காளி சண்டைதான். அண்ணன் தம்பி ஐந்து பேர். மூத்தவங்க இவங்கதான். பெரியவன்,
பொண்டாட்டிய கூட வெச்சு சூதாடி, ராஜ்ஜியம், சோத்து எல்லாத்தையும் இழந்தான். பங்காளி பக்கம் நூறு பேரு. ஜெயிச்ச பங்காளி அண்ணின்னு கூட பாக்காம அண்ணன் பொண்டாட்டி சேலைய பிடிச்சு இழுத்தான். சோத்த இழந்த வரைக்கும் எதிராளி மேல தவறில்ல. ஆனா அண்ணன் பொண்டாட்டி சேலைய பிடிச்சு இழுத்தது மட்டும்தான் பெரிய தப்பாகி போச்சு. இரண்டு பக்கமும் நியாயத்தராசு போட்டு பாத்ததுல, சாமி அஞ்சு பேர் பக்கம் போச்சு. சண்டை. இந்த பக்கம் 11 பேரு. அந்த பக்கம் 5 பேரு. மூத்தவங்க ஆளுங்கள, இளையவன் ஒரு ஆளுக்கு ரெண்டு பேருன்னு சேர்ந்து போ மடக்கியிருந்தாங்கன்னா ஜெயிச்சிருக்கலாம். செயல. கடைசில, மூத்தவங்க ஜெயிச்சாங்க. தம்பி கும்பல் மொத்தமும் செத்துப் போனாங்க. காரணம், பலம் அந்த பக்கம் அதிகம் இருந்தாலும், சாமி இந்த பக்கம். 18 நாள் சண்டை நடக்குது. 15வது நாள் வரைக்கும் மூத்தவங்க கூட்டத்துல யாருக்கும் நம்பிக்கையே இல்லை ஜெயிப்போம்னு. சாமி மட்டும் நம்பிக்கையோட இருந்தது. மகாபாரதம்.
பாஜக ஜெயிக்காது, ஹிந்து ஆட்சி அமையாதுன்னு சிலர் சோல்லிக்கிட்டே இருக்காங்க.
நீங்கள் என்ன நினைக்கிறீர்கள், ஹிந்து ஆட்சி அமையக்கூடாது என்றா? இல்லை ஹிந்து ஆட்சி அமைந்திட வேண்டுமென்றா?
உங்கள் வார்த்தை உங்களுக்கு நம்பிக்கை தருகிறதா? நீங்கள் நினைப்பது போல நடக்கவில்லை என்றால் வெல்லாது என்று எப்படி சோல்ல முடிகிறது உங்களால்?
கூட்டணி நீங்கள் நினைப்பது போல அமையாமல் இருக்கலாம். ஆனால் நடக்க வேண்டியது என்ன, களத்தில் வெற்றியா? இல்லை தேர்தலில் கூட்டணியா?
நாராயண சேனை கண்ணனுடையது. வெல்ல முடியாத பெரும் கூட்டம் கௌரவர்கள் பக்கம். நகுலனின் சோந்த மாமா எதிரி பக்கம். மகாவீரரான துரோணர் தீயவர்கள் பக்கம். விஷ்ணுவின் அவதாரமான பரசுராமரை தோற்கடித்த பீஷ்மர் தீயவர்கள் பக்கம். இந்த பக்கமும் வீரர்கள் இருக்கிறார்கள்தான். ஆனால் நியாயம் யார் பக்கம் என்று கடவுள்
பார்த்தான். பக்கம் என்று தெரிந்தது. அந்த பக்கம் நின்றான். யார் பக்கம் வெற்றி வாப்பு அதிகம் என்று இறைவன் பார்க்கவில்லை. யார் வெல்ல வேண்டும் என்று மட்டுமே பார்த்தான். பார்த்தவன் பார்த்தனுடன் ஒரு கை பார்த்தான்.
நிச்சயம் தேர்ச்சி பெறுவோம் என்று எண்ணித்தானே அனைவரும் பரீட்சை எழுதுகிறோம்? தோற்போம் என்று எண்ணியா எழுதுகிறோம்?
அன்று நாடெங்கிலும் அவுரங்கசீப் கொடுமைகளை அரங்கேற்றும்போது சிவாஜி துவண்டிருந்தால் இன்று நாம் இப்படி பேசமாட்டோம். அன்று நாடெங்கிலும் வெள்ளையர்கள் கொடுமைகளை அரங்கேற்றும்போது சுதந்திரப்போராட்ட வீரர்கள் துவண்டிருந்தால் இன்று இந்த தேர்தலில் சுதந்திர இந்தியர்களாக வாக்களித்துக் கொண்டிருக்கமாட்டோம்.
அன்று இதெல்லாம் உதவாது என்று மற்றவர் சோன்னதை கேட்டு டாக்டர் கேசவ பலிராம் ஹெட்கேவார் துவண்டிருந்தால் ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக சங்கம் என்று ஒன்று உருவாகியிருக்காது. அன்று எல்லோரும் திட்டுகிறார்களே என்று மோடி துவண்டிருந்தால் இன்று உலகமே திரும்பி பார்க்கும் ஒரு உன்னத மனிதனாக, நாடாக நாம் இருந்திருக்க மாட்டோம்.
இப்போது நீங்கள் முடிவு செயுங்கள். நீங்கள் யார் பக்கம் என்று. யார் வெல்ல வேண்டுமோ அவர்கள் பக்கமா? இல்லை, யார் வெல்லுவதற்கு வாப்பு இருக்கிறதோ அவர்கள் பக்கமா என்று. தவறு செயும் அவர்களே இவ்வளவு தன்னம்பிக்கையோடு போராடும்போது, நல்லது நினைக்கும் நாம் இறைவன் நம் பக்கம் இருக்கிறான் என்று அல்லவா நம்பி, துணிந்து கடைசி வரை போராட வேண்டும்?