ஹிந்துக்களின் போராட்டத்திற்கு வெற்றி

திருநெல்வேலி மாவட்டம் மணிமூர்த்தீஸ் வரத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற உச்சிஷ்ட கணபதி கோயிலில் இருந்து சில அடி தூரத்தில் ஏ.ஜி திருச்சபை என்ற மிஷனரி அமைப்பு அமைத்திருக்கும் கல்லறைத் தோட்டத்தை வேறு இடத்துக்கு மாற்றக்கோரி, உள்ளூர்வாசிகளும் பக்தர்களும் பல முறை கோயில் மற்றும் மாவட்ட நிர்வாகத்திடம் புகார் அளித்தும் பலன் இல்லை. இதனை அடுத்து சட்ட உரிமைகள் ஆய்வகம் அமைப்பின் நடவடிக்கை, ஹிந்துக்களின் பலகட்ட போராட்டங்களின் விளைவாக அரசு தற்போது பணிந்தது. உடனடியாக கல்லறையை வேறு இடத்துக்கு மாற்ற அரசு உத்தரவிட்டுள்ளது.