உத்தரபிரதேசம், மதுராவில் உள்ள ஸ்ரீ கிருஷ்ண ஜன்மபூமி கோயிலுக்கு அருகிலுள்ள 13.37 ஏக்கர் நிலத்தின் உரிமையை கோரி, லக்னோவில் வசிக்கும் ரஞ்சன் அக்னிஹோத்ரி மற்றும் ஐந்து பேர் வியாழக்கிழமை மாவட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். அதில் கிருஷ்ணர் பிறந்த இடத்தில் மசூதி அமைந்துள்ளது. எனவே அதை மீட்க அந்த சர்ச்சைக்குரிய 13.37 ஏக்கர் நிலத்தின் முழு உரிமையையும் கோரியுள்ளனர். 1968ம் ஆண்டில் கோயில் கட்டுப்பாட்டு குழுவிற்கும் மசூதி நிர்வாகத்திற்கும் இடையிலான சமரச ஆணையை ரத்து செய்ய கோரியுள்ளனர். ‘ஷாஹி இட்கா மசூதி அறக்கட்டளை’ இதற்கு எதிர்ப்பு தெரிவித்தது. நீதிபதி வழக்கின் அடுத்த விசாரணையை ஜனவரி 11க்கு ஒத்தி வைத்தார். 1670ல் முகலாய அரசன் ஔரங்கசீப் கிருஷ்ண ஜன்ம பூமியில் கோயிலை இடித்து அங்கு இட்கா மசூதியை எழுப்பினான்.