கர்நாடக மாநிலம் பெங்களூருவில் கலாச்சார அமைச்சகம் மற்றும் இந்திய கூட்டமைப்பு இணைந்து நடத்திய ‘சங்கல்ப் சே சித்தி’ மாநாட்டின் பேசிய மத்திய உள்துறையமைச்சர் அமித் ஷா, “பாரதத்தின் தொழில்துறையுடன் உள்ள தொடர்பைக் கருத்தில் கொண்டு பாரதத் தொழிற்துறை நிறுவனங்கள் ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு முழுமையாக ஆதரவு அளிக்க வேண்டும். 2014ம் ஆண்டில் பாரதத்தில் ஒரே ஒரு யூனிகார்ன் (ஒரு பில்லியன் டாலர் மதிப்பிலான ஸ்டார்ட் அப் நிறுவனம்) மட்டுமே இருந்த நிலையில் தற்போது அது மிகப்பெரிய அளவில் வளர்ச்சி அடைந்துள்ளது. இன்று இங்கு 100க்கும் மேற்பட்ட யூனிகார்ன் ஸ்டார்ட் அப் நிறுவனங்களுடன் பாரத இளைஞர்கள் உலக அரங்கில் நாட்டை பெருமிதம் கொள்ளச்செய்கின்றனர்” என்று கூறினார். அமித் ஷாவின் இந்த ஸ்டார்ட் அப் கோரிக்கையையடுத்து பாரதத்தில் உள்ள தொழிற்துறையினர் ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் முதலீடு செய்வதை குறித்து சிந்திக்கத் துவங்கியுள்ளனர். இது தொழிற்துறையினரிடையே நல்ல முதலீட்டு வாய்ப்பாகப் பார்க்கப்படுகிறது. எனவே, ஸ்டார்ட் அப் துறைகள் மேலும் வளர்ச்சியடையும் என எதிர்பார்க்கலாம்.