பா.ஜ.கவின் சிறுபான்மை அணி தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிம், சேலத்தில் பேசுகையில், ‘தமிழகத்தில் சிறுபான்மை அணி நிர்வாகிகளை சந்தித்து உள்ளாட்சி தேர்தலில் பா.ஜ.கவினர் வெற்றி பெற தொடர்ந்து கூட்டம் நடத்தி வருகிறோம். பா.ஜ.க இஸ்லாமியர்களுக்கு எதிரானது என, தி.மு.கவும் அதன் கூட்டணியினரான திருமாவளவன் உள்ளிட்டோரும் மக்களை துாண்டிவிட்டு பகைமை சூழலை உருவாக்கியுள்ளனர். இதை உடைத்தெறிய கிறிஸ்தவர், இஸ்லாமியர்களை நேரில் சந்தித்து பா.ஜ.கவின் சாதனைகள் குறித்து விளக்குவோம். தமிழகத்தில் பா.ஜ.கவினர், முஸ்லிம்கள் வாழும் பகுதிகளில் ஓட்டு சேகரிக்க சென்றால், ஆளும் தி.மு.கவினரும் காவல்துறையும் தடுக்கின்றனர். தி.மு.க.,வில் திருமாவளவனுக்கும் அவர் கட்சிக்கும் மரியாதை இல்லை. ஆனால், பா.ஜ.கவில் பட்டியலினத்தவர் மாநில தலைவராகவும் மத்திய அமைச்சராகவும் ஆகிறார். இதை புரிந்து கொண்டால் திருமாவளவனும் பா.ஜ.கவை ஆதரிப்பார்’ என கூறினார்.