வெற்றி வென்று காட்டிய மூத்தவர் பேச்சைக் கேளு தம்பி

பிப்ரவரி 14, 2019 திருச்சியில் புனித சூசையப்பர் உயர்நிலைப் பள்ளியின் ஆண்டு விழாவில் கலந்து கொண்ட சிறப்பு விருந்தினர் தன்னுடைய உரையில் குறிப்பிட்ட விஷயம் என்ன தெரியுமா? “ஹிந்தி கற்றுக் கொள்வது உங்களுக்கு மிகுந்த பயனளிக்கும். பரந்து விரிந்த நம் நாட்டின் பல பகுதிகளிலும் பேசப்படும் மொழி ஹிந்தி. அது மட்டுமல்ல, நம் நாட்டு மக்கள் கால்படாத நாடுகளே உலகில் இல்லை. அங்கெல்லாம் ஹிந்தி மொழி கொண்டு செல்லப்பட்டுள்ளது.

     யார் சார் இவ்வாறு சொன்னது என்கிறீர்களா ?

     பச்சைத் தமிழர், H.C.L.  என்ற மூன்றெழுத்து நிறுவனத்தைத் துவக்கி, கணிப்பொறி உலகில் பாரதத்திற்கு தனிச்சிறப்பை ஏற்படுத்தி உலகெங்கும் வெற்றிக் கொடி காட்டிய திரு. ஷிவ் நாடார் தான். இன்று பல்லாயிரக் கணக்கான இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பளிப்பவர், SSN கல்லூரி மூலம் தரமான கல்விப் பணி  ஆற்றுபவர். ஏழை மாணவர்களுக்கு 1994 முதல் கல்வி உதவித் தொகை அளித்து அவர்கள் வாழ்வில் ஒளி ஏற்றுபவர்.

     ஆகவே தமிழக தம்பிகளே, தங்கைகளே சுயநல அரசியல் புரட்டு வாதிகளை ஒதுக்கி, ஷிவ் நாடார் போன்ற வெற்றியாளர் பேச்சைக் கேளுங்க கண்ணுகளா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *