வீட்டு வாடகைக்கு ஜி.எஸ்.டி கிடையாது

காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது டுவிட்டர் பதிவில், ”அன்றாட உணவு பொருட்களுக்கு ஜி.எஸ்.டி. விதித்த பிறகு இப்போது வீட்டு வாடகைக்கும் ஜி.எஸ்.டி. விதிக்கப்பட்டுள்ளது” என்று கூறியிருந்தார். இதேபோல திருணமூல் காங்கிரஸ் கட்சி தலைவர் சாகேத் கோகலே உள்ளிட்ட பல எதிர்கட்சியினரும் இதுகுறித்த அடிப்படையைகூட அறியாமல் மத்திய அரசை குற்றம் சாட்டியிருந்தனர். இக்குற்றச்சாட்டுகளை மத்திய அரசு மறுத்துள்ளது. மத்திய அரசின் பத்திரிகை தகவல் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘குடியிருப்பு பயன்பாட்டுக்கு வீட்டை வாடகைக்கு விட்டால், அதற்கு ஜி.எஸ்.டி கிடையாது. வணிக பயன்பாட்டுக்கு வாடகைக்கு விட்டால் மட்டும்தான் 18 சதவீத ஜி.எஸ்.டி விதிக்கப்படும். மேலும், ஒரு நிறுவனத்தின் உரிமையாளரோ, பங்குதாரரோ ஒரு குடியிருப்பை தனிப்பட்ட பயன்பாட்டுக்கு வாடகைக்கு எடுத்தாலும் ஜி.எஸ்.டி. கிடையாது’ என தெளிவாக விளக்கமளித்து உள்ளது.