விழுந்தது ஹிந்து பிணம் என்பதால் பிரபலங்கள் வாயில் கொழுக்கட்டை!

‘‘எங்கள் பகுதியில் வந்து ஏன் மதமாற்றம் செய்ய முயற்சிக்கிறீர்கள்?’’ என்று மதமாற்றம் செய்யும் நோக்கத்துடன் வந்த முஸ்லிம்களை தடுத்து நிறுத்தினார் ராமலிங்கம் என்பவர். இது நடந்தது கும்பகோணம் அருகே உள்ள திருபுவனத்தில். மறுநாள் அவர் கடையிலிருந்து வீடு திரும்பும் பாதையில் அவரை வழிமறித்து கை, கால்களை வெட்டி கொலை செய்துவிட்டனர். அவரைக் கொலை செய்தவர்கள் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா (PFI) என்ற பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள்தான். இவர்கள்தான் கேரளத்தில் ஜோசப் என்ற கல்லூரி பேராசிரியரின் கையை வெட்டியவர்கள். கை, கால்களை வெட்டும் குரூரத்தில் இவர்கள் கரைகண்டவர்கள் என்றே தோன்றுகிறது.

கொல்லப்பட்டவர் பாட்டாளி மக்கள் கட்சியின் பொறுப்பாளர் என்பதால் டாக்டர் ராமதாஸ் கண்டித்து  அறிக்கை வெளியிட்டுள்ளார். ஆனால் அன்றாடம் எது எதுக்கோ அறிக்கை வெளியிடும் ஸ்டாலின், வை.கோ, திருமாவளவன் போன்றோர் கப்சிப். செத்தவன் ஹிந்துதானே… ஒருவேளை முஸ்லிமோ, கிறிஸ்தவனோ கொல்லப்பட்டிருந்தால் இவர்கள் வானத்திற்கும் பூமிக்கும் குதித்திருப்பார்கள்.

அன்று இரவு நடைபெற்ற தொலைக்காட்சி ஊடகங்களில் இந்தப் படுகொலை விவாதமாக எடுத்துக்கொள்ளப்படவில்லை. இது ஒன்றும் அவர்களுக்கு ஒரு முக்கியமான செய்தியாக தோன்றவில்லை என்றே தோன்றுகிறது. திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் போன்ற கட்சிகள் மதவாதத்தை எதிர்ப்போம் என்று சொல்லிக்கொண்டே முஸ்லிம் லீக்குடன் கூட்டணி வைத்துக் கொள்கிறார்கள். முஸ்லிம், கிறிஸ்தவர்கள் மீது ஒரு தூசி விழுந்தாலும் கொதித்தெழுகிற இவர்கள் ஹிந்துக்களுக்கு ஒருபாதிப்பு என்றால் வாய்மூடி மௌனிகளாகி விடுகின்றனர்.

இதெல்லாம் தீர்வுதான் என்ன?

  • முஸ்லிம் பயங்கரவாத இயக்கங்கள் தடை செய்யப்படவேண்டும்.
  • விசாரணை விரைவாக முடித்து குற்றவாளிகள் தூக்கிலிடப்படவேண்டும்.
  • ஹிந்துநலன் காக்கும் கட்சிக்கு வேட்பாளருக்கு மட்டுமே ஹிந்துக்கள் வாக்களிக்க வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *