விநாயகர் சதுர்த்தி – பொது இடங்களில் சிலை வைக்க தடை

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, விநாயகர் சதுர்த்தி அன்று பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைக்கவும், ஊர்வலமாக சென்று நீர்நிலைகளில் கரைக்கவும் தமிழக அரசு தடை விதித்துள்ளது.

வரும் 22ம் தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட உள்ளது. இந்த நிலையில், தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி பண்டிகையை அவரவர் வீடுகளிலேயே கொண்டாட வேண்டும். விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பொது இடங்களில் சிலை வைக்க அனுமதியில்லை. பொது இடங்களில் சிலைகளை வைத்து ஊர்வலமாக எடுத்து சென்று நீர் நிலைகளில் கரைக்கக்கூடாது. அரசு வெளியிட்ட வழிகாட்டுதலுடன் சிறிய கோவில்களில் விநாயகர் சதுர்த்தியன்று வழிபாடு நடத்த வேண்டும். ஊரடங்கு அமலில் உள்ளதால், முன்னெச்சரிக்கையாக தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. கொரோனா பரவலை தடுக்கவும், மக்கள் நலன் கருதியும் கட்டுப்பாடுகளை தமிழக அரசு விதித்துள்ளது. என கூறப்பட்டுள்ளது.

ஹிந்து அமைப்புகள் அரசு கூறும் விதிமுறைகளின்படி தனிமனித இடைவெளியுடன் விழாவை கொண்டாட உறுதி அளித்து அனுமதி கேட்டும் அரசு அனுமதிக்கவில்லை மேலும் வீட்டில் வைக்கப்படும் சிலைகளை ஆறு, குளம், கடலில் கரைக்க அனுமதிப்பது குறித்து எவ்வித தெளிவான வழிகாட்டுதலும் இதில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.