வார ராசிபலன் – விகாரி வருடம், கார்த்திகை 08-07 ( நவம்பர் 24 – 30) 2019

மேஷம்:

தைரியமும் தன்னம்பிக்கையும் கொண்ட மேஷராசி அன்பர்களே!

உத்தியோகஸ்தர்கள்: பணியில் பாராட்டுகள் பல பெறுவீர்கள். உடன் பணியாற்றுபவர்கள் உதவி செய்யவார்கள். அன்றாடப் பணிகளை அக்கறையுடன் செய்வது நன்மை தரும். பொருளாதாரத்தில் நிறைவு கிடைக்கும்.

பெண்மணிகள்: குடும்பத்தினரின் ஆதரவுடன் மகிழ்ச்சியில் திளைப்பீர்கள்.
உல்லாசமாக வெளியூர் சென்று வரலாம்.

மாணவ மணிகள்: நண்பர்களின் சில செயல்களால் மனம் வருத்தம் ஏற்படலாம். சிலரை விட்டு விலகி நிற்பது நல்லது. சாதனை புரிய சரியான நேரம் இது. ,

வியாபாரம்: சிறுதொழில் பங்குதார்களும் அனுசரணையாக இருப்பார்கள்.

அரசியல்வாதிகள்: ஆதரவாளர்களால் தலைமையின் ஆதரவு கிடைக்கும். சுபச்செலவுகளை செய்து மகிழுங்கள். புண்ணியத் தலங்கள் சென்று வாருங்கள்!

ரிஷபம்:

வாக்காலும், புத்திசாலிதனத்தாலும் கவரும் ரிஷபராசி அன்பர்களே!

உத்தியோகஸ்தர்கள்: நேர்மையாளராக நடந்து கொண்டால் மட்டும் போதாது. நிதானமாக பேச வேண்டும் என்பதை புரிந்து கொள்வீர்கள். முக்கியமான முடிவுகளைச் சிந்தித்து செய்யுங்கள். உயரதிகாரி ஒருவரின் ஆதரவால் நிம்மதி
பெறுவீர்கள்.

பெண்மணிகள்: குடும்பத்தில் நிலவிய வந்த பிரச்சினைகள் தீரும். மூன்றாம் நபரின் தலையீடு விலகும். சூரியன், சுக்கிரனால் சில தொல்லைகள் நேரும் என்பதினால் இளம் பெண்கள் எதிர்பாலினத்தவருடன் பேச்சுக்களைத் தவிர்க்கவும்.

மாணவமணிகள்; படிப்பில் அதிக ஆர்வமும், போட்டிகளில் வெற்றியும் கிடைக்கும்.

சிறுதொழில், வியாபாரம்: முன்னேறவாய்ப்பு உள்ளதால் திட்டங்களை செயல்படுத்துங்கள்.

அரசியல்வாதிகள்: தலைமையின் கவனத்தை ஈர்க்க வேண்டும். இடமாற்றங்களை ஏற்றுக் கொள்ளவும்.
பிரயாணங்களால் நன்மை உண்டு.

மிதுனம்:

மனம் நோகாமல் பேசிடும். சாமர்த்தியமும் கொண்ட மிதுன ராசி
அன்பர்களே!

உத்தியோகஸ்தர்கள்: உயர்வுகள் அனைத்தும் சிந்தனையுடன் பணியாற்றினால்,உயர்வுகள் அனைத்தும் கிடைக்கும். சோம்பேறித்தனத்திற்கு இடம் தராமல் விரைவாகசெயல்படுங்கள். குருபார்வையினாலும், சூரியனாலும் வளர்ச்சி காண முடியும் என்பதினால் பணிகளில் கவனம் தேவை.

பெண்மணிகள்: குடும்ப உறவுகளிடமும், தோழிகளிடமும் சண்டை சக்கரவுகளைத் தவிர்க்கவும். கோபத்தினால் காரியங்கள் கெடும். குரு பார்வை ஒன்றே குறைகளைகளையும் என்றாலும் இன்முகம் ஒன்றே நிம்மதி தரும்.

மாணவ மணிகள்: நண்பர்களிடம் எதையும் எதிர்பார்க்காதீர்கள்.

சிறுதொழில், வியாபாரம்: துணைத்தொழில்களில் வளர்ச்சி கிடைக்கும். வருமானத்தை சேமித்து வைக்கவும்.

அரசியல்வாதிகள்: தொண்டர்களை ஆதரித்து முன்னேறுங்கள். குடும்பத்தினரிடம் ஏற்படும் கருத்து வேறுபாடுகளை களையவும்!

கடகம்:

கருணையுடன் கண்டிப்பும் மிகுந்த கடகராசி அன்பர்களே!]

உத்தியோகஸ்தர்கள்: ஒருசில நண்பர்களாலும் சூழ்ச்சிக்கு ஆட்படுவீர்கள். உங்கள்து மன தைரியத்தினால் 6ல் உள்ள சனியினாலும் அனைத்திலும் வெற்றி காண்பீர்கள். நிலையான புத்திகொண்டு தற்காலிக தடைகளைத் தாண்ட முயற்சி செய்யுங்கள்.

பெண்மணிகள்: குடும்பத்து பெரியவர்களின் ஆலோசனை கேட்டு செயல்படுங்கள். உறவுகளின் உதாசீனம், பொருளாதார பிரச்சினைகள் புத்திசாலித்தனத்தினால் வெல்வீர்கள். சிலர் தாய்மையுறுவார்கள். சிலரைவிட்டு விலகுங்கள்.

மாணவ மணிகள்: உங்களுடைய படிப்பு சம்பந்தமான சந்தேகங்களுக்கு ஆசிரியரை நாடவும். பெற்றோர்களின் ஆதரவால் விருப்பங்கள் பூர்த்தியாகும்.

சிறுதொழில், வியாபாரம்: தொழில் வளர்ச்சிக்கான முயற்சிகள் பலிக்கும். தனலாபம்
அதிகரிக்கும்.

அரசியல்வாதிகள்: அடுத்தடுத்த செயல்களினால் தலைமை உங்களுக்கு உயர் பதவி
தரும்.
பணியில் கவனக்குறைவு தவிர்க்கவும்!

சிம்மம்:

விடாமுயற்சியும் துணிவும் கொண்ட சிம்மராசி அன்பர்களே!

உத்தியோகஸ்தர்கள்: உயரதிகாரிகளின் ஆதரவால்உன்னதப்பலன்களைப் பெறுவீர்கள். சிலரின் உதாசீனத்தைக் கண்டு கொள்ள வேண்டாம்.

பெண்மணிகள்: இளம் பெண்களுக்கு திருமணம் நடைபெறும். செவ்வாயினால் ஆடை, ஆபரணங்கள் கிடைக்கும். சகோதரர்களினால் நன்மை ஏற்படும். தைரியத்துடன் செயல்பட்டு குடும்ப மேன்மையை பாதுகாப்பீர்கள்.

மாணவ மணிகள்: புதிய தொடர்புகளினால் மகிழ்ச்சி ஏற்படும். புத்திசாதுர்யமும், அறிவுத்திறனும் அதிகமாகும். சிலருக்கு அரசு உத்தியோகமும், ராகுவினால் வெளிநாட்டு வேலை வாய்ப்பும் கிடைக்கப்பெறுவார்கள்.

சிறுதொழில், வியாபாரம்: ஏற்றுமதி – இறக்குமதியால் தனலாபம் கிடைக்கும். ஊழியர்களின் உழைப்பினால் வருமானம் அதிகரிக்கும்.

அரசியல்வாதிகள்: சுற்றுப்பயணத்தால் லாபம் உண்டு. தலைமை ஆதரிக்கும். குடும்பத்தினரின் யோசனைகளை சீர்தூக்கிப் பார்க்கவும்.

கன்னி:

கலைரசனையும் கண்ணியமும் கொண்ட கன்னிராசி அன்பர்களே!

உத்தியோகஸ்தர்கள்: அலுவலகப் பணிகளில் வீண்பழியோ, கவுரவ பங்கமோ உண்டாகும். மன செயல்களினால் பதவி உயர்வு கிடைக்கும்.

பெண்மணிகள்: நோய்கள் நீங்கி, ஆரோக்கியம் பெருகும், பொன்னாபரணங்கள் கிடைக்கும். எதையும் சாதிக்கும் திறமை ஏற்படும். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். இளம் பெண்களின் விருப்பங்கள் நிறைவேறும். வாக்குவாதம் தவிர்க்கவும்.

மாணவ மணிகள்: பொது விஷயங்களில் கவனம் செலுத்தவதைத் தவிர்த்து படிப்பில் கவனம் வைக்கவும்.

சிறுதொழில், வியாபாரம்: பங்குதாரர்களின் உதவியுடன் தொழிலைவளர்ச்சிப்பாதைக்கு கொண்டு செல்லவும்.

அரசியல்வாதிகள்: கட்சிக்காரர்களின் தடைகளைத் தாண்டி வெற்றி பெறுவீர்கள்.
அவசர முடிவுகளை தவிர்க்கவும்!

துலாம்:

நியாயத்துடனும் நேர்மையுடனும் வாழும் துலாராசி அன்பர்களே!

உத்தியோகஸ்தர்கள்: சக ஊழியர்களின் உதவியுடன் பணிகளை சிறப்பாக செய்திட சனி பகவான் தொடர்ந்து அருளுவார். பணியிடத்தில் பதவி உயர்வுக்கு பரிந்துரைக்கப்படுவீர்கள்.

பெண்மணிகள்: துணிச்சலாக செயல்பட்டு குடும்ப நன்மைக்காக பாடுபடுவீர்கள். அதேசமயம், வாக்கு வன்மையுடன் பேசி பிரச்சினைகள் தீர்த்து வைப்பீர்கள்.

மாணவ மணிகள்: உங்களின் வெகுநாளைய விருப்பம் நிறைவேரும். ராசியில் செவ்வாய் – புதன் இணைந்துள்ளதால் காயங்கள் ஏற்படலாம். வீண்பழி ஏற்படலாம் என்பதால் எச்சரிக்கை தேவை.

சிறுதொழில், வியாபாரம்: புதிய நபர்கள் வழியாக தொழில் வளரும். ஒப்பந்தங்கள் நிறைவேறும்.

அரசியல்வாதிகள்: தொண்டர்பலம் அதிகரிக்கும். புகழ்பெறுவீர்கள். மென்மையான பேச்சு மேன்மை தரும்!

விருச்சிகம்:

திறமையும், செயலாக்கமும் கொண்ட விருச்சிகராசி அன்பர்களே!

உத்தியோகஸ்தர்கள்: பதவியும், பொறுப்புமிக்க பணிக்கான அந்தஸ்தும் உயரும். சிலருக்கு வாகன வசதியும் கிடைக்கும். பிரச்சினைகளில் சிறப்பான தீர்வு அளித்து புகழ் பெறுவீர்கள். சுக்கிரன் – குரு ஆகியோரால் புத்தித்தெளிவும், அறிவுத் திறனும அதிகரிக்கும். தொல்லைகள் தீரும்.

பெண்மணிகள்: மனமகிழ்ச்சியினால் அழகும் பொலிவும் ஏற்படும். இளம் பெண்களுக்கு விருப்பமான வரன் அமையும். சிலர் தாய்மார்களாக வாய்ப்பு உள்ளது வாரிசுகளால் மதிப்பு அதிகரிக்கும்.

மாணவ மணிகள்: கல்வியிலும், போட்டிகளிலும் வெற்றி கிடைக்கும். ராகு 8ல் உள்ளதால் மதிப்புமிக்க பொருட்களை பாதுகாக்கவும்.

சிறுதொழில், வியாபாரம்: தனலாபம் உண்டு. பெரிய முதலீடுகளை தவிர்க்கவும். திறமையான புதிய ஊழியர்கள் அமைவார்கள்.

அரசியல்வாதிகள்: பொறுப்புடன் செயல்பட்டு பாராட்டுகள் பெறுவீர்கள்.
பொறுப்புகளை ஏற்கும் முன் ஆய்ந்தறியவும்!

தனுசு:

தோல்வியைக் கண்டு தன்னையும் பணிவும் கொண்ட தனுராசி அன்பர்களே!

உத்தியோகஸ்தர்கள்: துணிவுடன் செயல்பட்டாலும் உயரதிகாரிகளின் ஒப்புதல் இல்லாமல் செய்யாதீர்கள். அனைவரிடமும் விரோதம் தவிர்க்கவும். குருவின் பார்வைபடும் இடங்கள் எல்லாம் புனிதம் அடைவதால் பதவிக்கும் வருமானத்திற்கும் குறைவு ஏற்படாது. முன்னேற்றம் உண்டு.

பெண்மணிகள்: ஆடை, ஆபரணங்கள் கிடைக்கும். சிலர் வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் அமையும். தனவரவு அதிகரிக்கும். கோலாகலமும் மகிழ்ச்சியும் ஏற்படும்.

மாணவ மணிகள்: பல்வேறு குழப்ப சிந்தனைகளால் படிப்பில் கவனம் குறைந்தாலும் ஆசிரியர் வழிகாட்டுதல் கிடைக்கும்.

சிறுதொழில், வியாபரம்: நேர்மையான சிந்தனையுடன் வாடிக்கையாளர்களின் தேவையை பூர்த்தி செய்யவும்.

‘அரசியல்வாதிகள்: தலைமையின் கண்டிப்புக்கு ஆளாகுவீர்கள்.
செலவுகளை கட்டுப்படுத்தவும்!

மகரம்:

நிதானமும், நினைத்ததை செய்து முடிக்கும் திறனும் உடைய மகரராசி அன்பர்களே!

உத்தியோகஸ்தர்கள்: உங்களின் அர்ப்பணிப்புடன் கூடிய பணியினால் அந்தஸ்து மிக்க பதவி கிடைக்கும். அனைத்துத் தரப்பினராலும் பாராட்டப்படுவீர்கள். ஆரோக்கியம் ஏற்படும். நெடுநாளைய சங்கடங்கள் நீங்கும். சூரியனால் அரசு வழியில் ஆதாயம் உண்டு. சந்திராஷ்டம் தினங்களில் பதற்றப்படாமல் செயல்படவும்.

பெண்மணிகள்: சிக்கலான பிரச்சினைகளையும் சாதகமாக மாற்றும் சாமர்த்தியம் ஏற்படும். குடும்பத்திற்குத் தேவையானப் பொருட்கள் வாங்குவீர்கள். எதிர்கால திட்டத்திற்கான பணியை துவக்குவீர்கள்.

மாணவ மணிகள்: உயர் கல்விக்கான முயற்சி வெற்றி பெறும். சிலர் வெளிநாடு, வெளிமாநிலம் செல்லலாம்.

சிறுதொழில், வியாபாரம்: விற்பனைக்கூடும் நிலுவைத் தொகை கிடைக்கும்.

அரசியல்வாதிகள்: புகழ் கிடைக்கும். தொல்லை தந்தவர்கள் விலகுவார்கள்.பிறரின் பிரச்சினைகளில் ஈடுபட வேண்டாம்!

கும்பம்:

பொறுமையும், விடாமுயற்சியும் கொண்ட கும்பராசி அன்பர்களே!

உத்தியோகஸ்தர்கள்: பணியில் இதுநாள் வரை இருந்த சோர்வு நீங்கி, உற்சாகத்துடன இருப்பீர்கள். அலுவலகத்தில் அனைத்து வேலைகளிலும் அறிவுரை கூறுவீர்கள். புதிய நண்பர்களால் உதவிகள் கிடைக்கும்.

பெண்மணிகள்: இல்லறத்துணையின் ஆதரவு கிடைக்கும். விட்டுப்போன ப பணிகளை இப்போது செய்து மகிழ்வீர்கள். உறவினர் வழியில் இருந்த பிணக்குகள் நீங்கும். சிலருக்கு சந்ததி உருவாகும். உங்கள் பெயரில் சொத்துகள் வாங்கலாம்.

மாணவ மணிகள்: நண்பர்களால் நன்மை உண்டு.

சிறுதொழில், வியாபாரம்: வியாபாரத்தில் புதிய உத்திகளை புகுத்துவீர்கள். புதிய எந்திரங்கள் வாங்கி உற்பத்தி அதிகரிக்கும்.

அரசியல்வாதிகள்: வெகுநாட்களுக்குப் பிறகு மதிப்பும் மரியாதையும் கிடைக்கும். தக்க வைத்துக் கொள்ளவும்.
கடன்கள் தீரும். இடமாற்றத்தை ஏற்கவும்!

மீனம்:

சொல்லிலும் செயலிலும் ஒருமித்த குணம் உடைய மீனராசி அன்பர்களே!

உத்தியோகஸ்தர்கள்: பெரும்பாலான கிரகங்கள் சாதகமற்று இருப்பதால், உங்களின் பணியில் கடின உழைப்பு தேவைப்படும். கருத்து வேறுபாடுகளை களைந்தால் சக ஊழியர்களின் உதவி பெறமுடியும்.

பெண்மணிகள்: பொன், பொருள் சேரும். குடும்பத்தினரின் ஒற்றுமையை பேணி பாதுகாக்க வேண்டும். உயர்ந்த ஆடை, ஆபரணங்கள் கிடைத்தாலும் உடல் நலிவினால் உற்சாகம் குறையும். ஆன்மிக எண்ணங்களை ஏற்றுக்கொண்டு அமைதிகான வேண்டும்.

மாணவ மணிகள்: விளையாட்டு, கேளிக்கைகளில் ஈடுபாட்டைக் குறைத்துக்கொண்டு கல்வியில் அதிக கவனம் வைக்க வேண்டும்.

சிறுதொழில், வியாபாரம்: தக்க ஆலோசனை பெற்ற பிறகே மாற்றங்களை கொண்டு வரவேண்டும்.

அரசியல்வாதிகள்: வெளிவட்டார பிரச்சினைகளை தவிர்த்துவிட்டு மருத்துவ ஓய்வ  எடுங்கள். தொண்டர்களை ஆதரியுங்கள்.
வெளியூர் பயணங்களைத் தவிர்க்கவும்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *