வார ராசிபலன் – விகாரி வருடம், கார்த்திகை 15 முதல் 21( டிசம்பர் 01 – 07) 2019

மேஷம்:

உத்தியோகஸ்தர்கள்: உழைப்பும் அதிகரிக்கும், பதவி உயர்வுக்கும் வழி கிடைக்கும். சில விருப்பங்கள் நிறைவேறும். உயரதிகாரிகளின் கவனத்திற்குள் இருப்பீர்கள். நன்மதிப்பு பெறுவீர்கள். அரசு ஊழியர்கள் விருப்ப இடமாற்றம் பெறுவார்கள்.

பெண்மணிகள்: குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். இல்லறத் துணையின் ஆதரவுடன் சில பணிகளை சாதகமாக்கிக் கொள்வீர்கள். அவசரம் தவிர்த்தால் ஆதாயம் உண்டு.

மாணவ மணிகள்: தேவையற்ற அலைச்சலைச் தவிர்க்கவும். சில நண்பர்ககளை வீட்டில் சேர்க்க வேண்டாம்.

சிறுதொழில், வியாபாரம்: வளர்ச்சிக்கு புதுவழி கிடைக்கும்.

அரசியல்வாதிகள்: தலைமை ஆதரவு தரும். மதிப்பு உயரும்.

ரிஷபம்:

உத்தியோகஸ்தர்கள்: போட்டி, பொறாமை விலகும். சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். வளர்ச்சிக்கு குறை ஏற்படாது. சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். பணியிடத்தில் புதிய பொறுப்புகளை ஏற்றுக்கொள்வீர்கள்.

பெண்மணிகள்: வாரிசுகளால் மகிழ்ச்சி ஏற்படும். உங்களின் திட்டங்களுக்கு குடும்பத்தில் ஆதரவு கிடைக்கும். இல்லறத் துணையின் ஆதரவு பெருகும்.

மாணவ மணிகள்: புதிய பாடங்களை கேட்டு தெளிவு பெற வேண்டும். அதிக மதிப்பெண் பெற உழைப்பு தேவை.

சிறுதொழில், வியாபாரம்: மாற்றங்களை நிகழ்த்த சரியான நேரம். முக்கிய முடிவுகளை தைரியமாக எடுக்கவும்.

அரசியல்வாதிகள்: தலைமையின் கருத்தை ஆதரித்து பலன் அடையலாம்.

மிதுனம்:

உத்தியோகஸ்தர்கள்: அலுவலகப் பணிகளில் அதிக அக்கறை காட்ட வேண்டும். மனரீதியான குழப்பம் ஏற்பட்டு விலகும். சிரமமான பணிகளை சக ஊழியர்களின் ஆதரவுடன் செய்து முடிப்பீர்கள்.

பெண்மணிகள்: புத்திரர்களால் பெருமைகள் கிடைக்கும் சிக்கனமாக இருந்து சேமிப்பை அதிகரிக்கவும். இல்லறத்துணையின் அன்பளிப்பால் மகிழ்ச்சி ஏற்படும். இளம் பெண்களுக்கு திருமணப் பேச்சு மகிழ்ச்சியை அளிக்கும்.

மாணவ மணிகள்: உழைப்பு அதிகரித்தாலும் மதிப்பெண்ணும் அதிகரிக்கும். உடல் நலன், மனநலனில் அக்கறை தேவை.

சிறுதொழில், வியாபாரம்: புதிய நிறுவன ஒப்பந்தம் நிறைவேறும்.

அரசியல்வாதிகள்: தலைமைக்கு பக்கபலமாக இருக்க வேண்டும்.

கடகம்:

உத்தியோகஸ்தர்கள்: உங்களது செயல்திறன் அதிகரிக்கும். சிக்கலான பணியை சுலபமாக செய்து காட்டி, பாராட்டுகள் பெறுவீர்கள். செல்வாக்கு கூடும். சலுகைகள் கிடைக்கும் என்றாலும் பணிவாக இருக்கவும் வேண்டும். சக பணியாளர்களை உற்சாகப்படுத்தவும்.

பெண்மணிகள்: சேமிக்கப் பழகுவீர்கள். சகோரர் வழியில் பொன், பொருள் கிடைக்கும். குடும்பத்தில் செல்வாக்கு கிடைக்கும்.

மாணவ மணிகள்: விளையாட்டு, போட்டிகளில் பரிசும், பாராட்டும் கிடைக்கும். பாடங்களிலும் ஊக்கம் பெற்று மதிப்பெண் பெறுவீர்கள்.

சிறுதொழில், வியாபாரம்: அரசு ஆதரவுடன் தொழிலை விருத்தி செய்வீர்கள். கமூகத்தில் செல்வாக்கான பதவி கிடைக்கும்.

அரசியல்வாதிகள்: கட்சியிலும் பிற இயக்கங்களிலும் பெரிதும் மதிக்கப்படுவீர்கள்.

சிம்மம்:

உத்தியோகஸ்தர்கள்: முன்னேற்றத்தை விரும்புகிறவர்கள் சிறிய முயற்சிலேயே வெற்றியை காண்பார்கள். அதிகாரிகள், பணியாளர்கள் பக்கபலமாக இருப்பார்கள். சாதித்துக்காட்ட வாய்ப்புகள் கிடைக்கும். செல்வாக்கைப் பெற்று சாதித்துக் காட்டுவீர்கள். வருமானம் அதிகரிக்கும்.

பெண்மணிகள்: ஆடை, ஆபரணங்கள் சேரும். குழந்தைக்காக காத்திருந்தவர்களுக்கு தாய்மைப்பேறு பெறுவார்கள். இளம் பெண்களுக்கு திருமண ஏற்பாடுகள் துவங்கும்.

மாணவ மணிகள்: நண்பர்களிடம் சமூகமாகப் பழகவும். கல்வியில் மட்டும் முழு கவனமும் இருக்கட்டும். சாகசங்களை தவிர்க்கவும். விளையாடும் போது எச்சரிக்கை தேவை.

சிறுதொழில், வியாபாரம்: அரசு ஆதரவுடன் புதிய தொழிலை துவக்கலாம். நிலுவைத் தொகைகள் கிடைத்து, கடன்கள் தீரும்.

அரசியல்வாதிகள்: இணைந்து பணியாற்றவும். பணப்பிரச்சினை நீங்கும்.

கன்னி:

உத்தியோகஸ்தர்கள்: உயரதிகாரிகளின் உத்தரவை உடனடியாக நிறைவேற்றுங்கள். அலுவலகப் பிரச்சினைகள் குறித்து விவாதிக்க வேண்டாம். தங்களின் திறமைகள் உணரப்பட்டாலும், பதவி, ஊதிய உயர்வு தாமதமாகும். அலுவலக நண்பர்கள் ஆறுதலாக இருப்பார்கள்.

பெண்மணிகள்: திருமணமானப் பெண்கள் மழலை பாக்கியம் பெறுவார்கள். குடும்பத்தில் நிலவும் பிரச்சினைகளில் ஆர்வம் காட்ட வேண்டாம். வெளிப்படையாக பேசுவதை தவிர்க்கவும்.

மாணவ மணிகள்: விருப்பமான துறைகளில் ஈடுபட்டு பெருமைகள் கிடைக்கப் பெறுவீர்கள். தகுதியை வளர்க்க தனித் தேர்வுகளில் விருப்பம் ஏற்படும்.

சிறுதொழில், வியாபாரம்: ஒப்பந்தங்களில் கவனத்துடன் கையொப்பம் இட வேண்டும். பொருளாதார சிக்கல்களை கவனத்துடன் கையாளவும்.

அரசயில்வாதிகள்: தலைமையின் ஆதரவை தக்க வைக்கவும்.

துலாம்:

உத்தியோகஸ்தர்கள்: சக பணியாளர்களின் ஒத்துழைப்பை கேட்டுப் பெற வேண்டும். பொருளாதார பற்றாக்குறையை நீக்க கடுமையாக உழைக்க வேண்டும். விவாதம் தவிர்த்து பணிகளை விரைந்து முடிக்க முயற்சி செய்யவும். உயரதிகாரியின் ஆதரவை கேட்டுப் பெறவும்.

பெண்மணிகள்: குடும்பத்தில் ஏற்படும் மாற்றங்களை ஏற்றுக்கொள்ளவும். கடன் கொடுப்பதையும், வாங்குவதையும் தவிர்க்கவும். எதிர்காலத்திற்காக பாதுகாப்பான சேமிப்பில் முதலீடு செய்யவும்.

மாணவ மணிகள்: கடினமான படிப்பு என்றாலும், கவனத்துடன் ஆர்வம் காட்டுவீர்கள். உடல் உபாதைகளுக்கு மருத்துவ சிகிச்சை தேவை.

சிறுதொழில், வியாபாரம்: வாடிக்கையாளர்களின் விருப்பம் நிறைவேற்றவும்.

அரசியல்வாதிகள்: கட்சிப்பிரசினைகளில் ஒதுங்கி நிற்கவும்.

விருச்சிகம்:

உத்தியோகஸ்தர்கள்: உடன் பணியாற்றுபவர்களால் உதவி கிடைக்கும். அதிகப் பணிகளை பகிர்ந்தளித்து பணிச்சுமையை குறைக்க முயற்சி செய்யவும். வளமான எதிர்காலத்திற்கான அடித்தளம் இட கடுமையாக உழைப்பீர்கள். அலுவலக ரகசியங்களை வெளியில் சொல்ல வேண்டாம்.

பெண்மணிகள்: நினைவாற்றல் குறைவால் சில பிரச்சினைகளை சந்திப்பீர்கள். அதிமுக்கியமான பொருட்களை பத்திரமாக பாதுகாக்க வேண்டும். விவாதம் தவிர்க்கவும்.

மாணவ மணிகள்: பயிற்சி பெற்று தேர்வுகளில் வெற்றி காணலாம். சிலருக்கு அரசு உத்தியோகம் கிடைக்கும்.

சிறுதொழில், வியாபாரம்: பணியாளர்களை கண்காணிக்கவும். செலவைக் குறைக்க சில மாற்றங்களை உருவாக்குவீர்கள்.

அரசியல்வாதிகள்: மக்கள் நல பணிகளில் நாட்டம் ஏற்படும்.

தனுசு:

உத்தியோகஸ்தர்கள்: உயர் பதவிக்கான பரிந்துரைக்கும் பட்டியலில் உங்கள் பெயரும் இருக்கும். சில சங்கடமான சூழ்நிலை மாறும். சாமர்த்தியமான பேச்சால் காரியங்களை சாதித்துக் கொள்வீர்கள். கடினமான பணிகளை சுலபமாகச் செய்து பாராட்டும் பெறுவீர்கள். முன்கோவத்தைத் தடுக்க முன்னெச்சரிக்கை தேவை.

பெண்மணிகள்: பிறந்த வீட்டு சீதனங்கள் கிடைக்கும். சகோதர்களால் பெருமை கிடைக்கும். மழலை பாக்கியம் கிடைக்கும். ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டும். இல்லறத்துணையின் அரவணைப்பு கிடைக்கும்.

மாணவ மணிகள்: உறவினர் ஒருவரின் உதவியால் உயர்கல்வி, உத்தியோகத்திற்கான வழிமுறை கிடைக்கும். கல்வியில் நாட்டம் அதிகரிக்கும்.

சிறுதொழில், வியாபாரம் : கடன்கள் குறைக்க திட்டம் தேவை. வருமானம் அதிகரிக்கும்.

அரசியல்வாதிகள்: செல்வாக்கு அதிகரிக்கும்.

மகரம்:

உத்தியோகஸ்தர்கள்: உங்களின் செயல் திறனால் பெருமை கிடைக்கும். மதிப்பு மரியாதை அதிகரிக்கும். இதுவரை சாதிக்க நினைத்த காரியங்களை எளிதாக செய்து பாராட்டுகள் பெறுவீர்கள். உயரதிகாரிகளின் ஆதரவால் விருப்பம் நிறைவேறும்.

பெண்மணிகள்: இல்லத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். உங்களின் எதிர்காலத்திற்காக குடும்பத்தில் பேச்சு ஏற்படும். உடல் நலனில் அக்கறை தேவை. உறவினர் ஒருவரால் உதவிகள் கிடைக்கும்.

சிறுதொழில், வியாபாரம்: சில்லறைத் கடன்கள் தீரும். வருமானம் அதிகரிக்கும். நிர்வாக சீர்திருத்தம் செய்வீர்கள்.

அரசியல்வாதிகள்: களத்தில் இறங்கி, மக்களுக்காகப் போராடுவீர்கள்.

கும்பம்:

உத்தியோகஸ்தர்கள்: உங்களின் அன்றாடப் பணிகளில், அதிக கவனம் செலுத்த வேண்டும். வேலையிடத்திலும், உறவினர் மத்தியிலும் அநாவசியமான பேச்சுக்களைத் தவிர்க்க வேண்டும். மற்றவர்களின் குறை, குற்றங்களைக் குறித்து விவாதிக்க வேண்டாம்.

பெண்மணிகள்: வேற்று மொழிக்காரர்களால் உங்களுக்கு உதவி கிடைக்கும். எவரிடமும் மென்மையான, குறைவான வார்த்தைகளில் உரையாடுங்கள். குடும்பத்தில் அமைதி நிலவும்.

மாணவ மணிகள்: போட்டித் தேர்வுகளிலும், நேர்முகத் தேர்வுகளிலும் வெற்றி கிடைக்கும் என்பதால் தயார் செய்து கொள்ளவும்.

சிறுதொழில், வியாபாரம்: சிறப்பாக நடைபெறும். தொழிலில் புதிய உத்திகளை கையாளுவீர்கள்.

அரசியல்வாதிகள்: உணர்ச்சிகளை கட்டுப்படுத்தி உயர்வடையுங்கள்.

மீனம்:

உத்தியோகஸ்தர்கள்: வெகுநாட்களாக காத்திருந்த பதவி உயர்வு இப்போது கிடைக்கலாம். உங்களின் சில அபிலாஷைகள் நிறைவேறும். உணவு, மருந்துகளினால் உபாதை ஏற்படலாம். உயரதிகாரிகளின் உதவி கிடைக்கும். அமைதியான மனநிலையுடன் இருக்க பழகவும்.

பெண்மணிகள்: சிலருக்கு மழலை பாக்கியம் கிடைக்கும். இல்லறத் துணையுடன் இணக்கமாக இருக்கவேண்டும். குடும்பத்தினருடன் கலந்து பேசி முக்கிய முடிவுகளை தீர்மானிக்கவும்.

மாணவ மணிகள்: சில நண்பர்களால் நற்பெயர் கெடலாம் என்பதால், தவிர்ப்பது நல்லது. ஆசிரியரின் வழிகாட்டுதலால் மதிப்பெண் உயரும்.

சிறுதொழில், வியாபாரம்: புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். ஆலோசனை பெற்று திட்டங்களை செயல்படுத்துங்கள்.

அரசியல்வாதிகள்: தலைமையாலும், தொண்டர்களாலும் மதிக்கப்படுவீர்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *