பிரபல பொருளாதார நிபுணர் விவேக் தேப்ராய், ‘மலையாள மனோரமா’ நாளிதழ் நிறுவனத்தில் இருந்து வெளியாகும் ‘தி வீக்’ என்ற ஆங்கில இதழில் கட்டுரையாளராக பணி புரிந்தார். கடந்த மாதம் 24ல் வெளியான இதழில் தேப்ராய் எழுதிய ஒரு கட்டுரையில், ஹிந்து கடவுளர்களான சிவன் மற்றும் காளியை அவதூறு செய்யும் வகையில் படங்கள் வரையப்பட்டு இருந்தன. இதற்கு, பா.ஜ.க, ஹிந்து அமைப்புகள், பொதுமக்கள் உட்பட பல்வேறு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அந்த வார இதழை எரித்து போராட்டம் நடத்தினர். பா.ஜ.கவின் உத்தர பிரதேச மாநில முன்னாள் துணைத் தலைவர் பிரகாஷ் சர்மா அளித்த புகாரின் அடிப்படையில், தி வீக் வார இதழ் ஆசிரியர் மீது கான்பூர் போலீசார் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து விவேக் தேப்ராய் தனது பணியை ராஜினாமா செய்தார்.