நெட் பேங்கிங், மொபைல் பேங்கிங்கைவிட மக்களிடம் அன்றாட பயன்பாட்டில் இருக்கும் வாட்ஸப் மூலம் வங்கி பணப்பரிமாற்றம் எளிது என்பதால் அது நல்ல வரவேற்பை பெற்றது. ஆனால் வாட்ஸப் தகவல்கள் முகநூலுடன் இணைக்கப்படும், தனிநபர் தகவல் பாதுகாப்பு கொள்கையில் மாற்றம் போன்ற காரணங்களினால் மக்கள் வேறு செயலிகளுக்கு மாற ஆரம்பித்துள்ளனர். வங்கிகளும் இந்த சேவையை தொடர்வது குறித்து மறுபரிசீலைனை செய்கின்றன. எச்.டி.எப்.சி வங்கி தன் வாட்ஸப் வங்கி சேவையை நிறுத்தியுள்ளது.