ஹிமாச்சலப் பிரதேசத்தின் ஹமிர்பூர் தொகுதியில் பா.ஜ., சார்பில் மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் போட்டியிடுகிறார். இந்த தொகுதிக்கு வரும் ஜூன் 1ம் தேதி (7வது கட்டம்) தேர்தல் நடக்க உள்ளது. ஹமிர்பூர் தொகுதி மக்களை சந்தித்து, அனுராக் தாக்கூர் சூறாவளி பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். நேற்று தனது தொகுதியில் அவர் ரோடு ஷோ நடத்தினார்.
ரோடு ஷோவில் அனுராக் தாக்கூர் பேசியதாவது: நான் கேட்க விரும்புகிறேன். காங்கிரசால் வாக்குறுதியளிக்கப்பட்ட ரூ. 1,500 நிதியுதவி உங்களுக்கு கிடைத்துள்ளதா?. காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ஆட்சி அமைத்த முதல் மாதத்திலேயே பெண்களுக்கு ரூ. 1,500 வழங்குவதாக உறுதியளித்தனர். இப்போது 15 மாதங்கள் கடந்துவிட்டன. காங்கிரஸ் வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. அவர்கள் மக்கள் பணத்தை கொள்ளையடிக்க விரும்புகிறார்கள். இவ்வாறு அவர் பேசினார்.