தொடர் நஷ்டத்தை சந்தித்து வந்த பி.எஸ்.என்.எல், எம்.டி.என்.எல் நிறுவனங்களுக்கான புத்தாக்கத் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தியது. பணியாளர் குறைப்பு, இதர செலவுகள் குறைப்பு, வாடிக்கையாளர்களை தக்க வைத்துக் கொள்ளுவது, பத்திர வெளியீடு போன்ற நடவடிக்கைகளால், அந்த திட்டம் ஆரம்பிக்கப்பட்டு ஒரு வருடத்திற்குள் அவை இந்த நிதியாண்டின் முதல் ஆறு மாதங்களில் வட்டி, வரிகள், தேய்மானம், கடன் தொகைக்கு முன்பான வருவாயில் (எபிட்டா) வியத்தகு வளர்ச்சியை எட்டியுள்ளன. பிஎஸ்என்எல், செப்டம்பர் 2019 உடன் முடிந்த அரையாண்டில் ரூ. – 3596 கோடி ரூபாயாக இருந்த எபிட்டா, தற்போது நேர்மறையில் ரூ. + 602 கோடியாக உயர்ந்துள்ளது. எம்டிஎன்எல் இதே அரையாண்டில் ரூ. – 549 கோடியாக இருந்த எபிட்டா, தற்போது நேர்மறையில் ரூ. + 276 கோடியாக ஊயர்ந்துள்ளது.