கொரானாவின் தாக்கத்தால் பொருளாதாரம் கடும் வீழ்ச்சி காணும் என்று வல்லுநர்கள் கருதுகின்றனர்.
எனக்கு இந்த வல்லுநர்கள் பற்றி தெரியாது. ஆனால் இவர்களுக்கு மனிதனின் உத்வேகம் பற்றியும் தளர்வறியா விடாமுயற்சி பற்றியும் தெரியாது என்று எனக்குத் தெரியும். வல்லுநர்கள் கூற்றை நம்ப வேண்டுமாயின் இரண்டாம் உலகப் போருக்குப் பின் ஜப்பானுக்கு சிறந்த எதிர்காலம் இருந்திருக்க முடியாது. ஆனால் முப்பதே வருடங்களில் ஜப்பான் மீண்டெழுந்து பொருளாதார சந்தையில் அமெரிக்காவிற்கு சவால் தொடுத்தது, தொடுத்து வருகிறது.
வல்லுநர்கள் கூற்றை நம்ப வேண்டுமாயின் அரேபிய நாடுகளால் இஸ்ரேல் உலகப் படத்திலிருந்தே துடைத்து எறியப் பட்டிருக்க வேண்டும். ஆனால் , நடந்தது வேறல்லவா? காற்றியக்கம் சார்ந்த அறிவியல் கூற்றுப்படி தேனிக்கள் பறக்க முடியாது. ஆனால் தேனிக்கள் பறக்கின்றன. நல்லவேளையாக, அவை காற்றியக்கவியல் நிபந்தனைகளைத் தெரிந்து கொள்ள்ளவில்லை. வல்லுநர்கள் கூற்றை நம்பியிருந்தால் 1983ம் வருடம் உலக கிரிக்கெட் கோப்பை போட்டியில் இந்தியா வெற்றி கண்டிருக்காது.
வல்லுநர்கள் கூற்றை நம்பியிருந்தால் அமெரிக்காவின் முதல் பெண்மனி வில்மா ருடால்ப் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் தடகளப் போட்டியில் நான்கு தங்கப்பதக்கங்கள் வெல்வதை விடுங்கள் அவர் வேகமாக நடப்பார் என்பதைக் கூட யாரும் ஒத்துக் கொண்டிருக்க மாட்டார்கள். (வில்மா இரு பக்கமும் கட்டைகளை வைத்துக்கொண்டு நடந்து கொண்டிருந்த நேரம் அது ). வல்லுநர்கள் கூற்றை நம்பியிருந்தால் அருணிமா சின்ஹா சராசரி வாழ்க்கை வாழ்வதே கடினமான நிலை. ஆனால் அவர் இமய மலை உச்சியை ஏறினார். கொரானாவின் தாக்கம் ஒன்றும் வித்தியாசமானது அல்ல. நாம் இந்த கொரானாவின் தாக்கத்தை தோற்கடிப்போம் என்பதில் எனக்கு ஐயமில்லை. இந்திய பொருளாதாரம் சீரிய அளவில் மீண்டு எழும்.
(ஆங்கிலத்தில் ரத்தன் டாட்டா பெயரில் வாட்ஸ் ஆப்பில் உலா வந்து கொண்டுள்ள செய்தியை தமிழில் விஜய பாரதத்திற்காக ப. ரவிசங்கர் மொழி பெயர்த்துள்ளார்)
நல்ல முயற்சி ரவி. மேலும் முன்னேற வாழ்த்துக்கள்.