வக்கீல் சார், மத்திய அரசு கவனிக்கிறது!

‘வழக்கறிஞர்கள் சட்ட’ பிரிவு 34ன் கீழ்,சென்னை உயர் நீதி மன்றம் சமீபத்தில் வகுத்த விதிமுறைகளை எதிர்த்து  கடந்த மூன்று மாத காலத்திற்கும் மேல் வழக்கறிஞர்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். மாநிலம் முழுவதும் உள்ள நீதிமன்றங்கள் அனைத்தும்  நீதிமன்ற பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. எனவே, மீண்டும் சகஜ நிலையை உருவாக்கவும் சுமூக தீர்வு காணவும் நல்லெண்ண நடவடிக்கையாக ‘அகில பாரத வழக்கறிஞர்கள் சங்கம்’ முயற்சியை முன்னெடுத்தது. அதன்படி, ஆகஸ்ட் 2 அன்று மத்திய சட்ட அமைச்சரை சந்திப்பதற்கான முயற்சிகளை அந்த சங்கம் மேற்கொண்டது. அதன்படி, அகில பாரத வழக்கறிஞர்கள் சங்கத்தின் தென்பாரத செயலாளர் ரமேஷ், மாநில பொதுச்செயலாளர் பழனிக்குமார், மாநில செயலாளர் கணேஷ்,

திருச்சி மாவட்ட செயலாளர் கேசவன் ஆகியோர் கொண்ட குழு புதுதில்லி புறப்பட்டு சென்றது. அக்குழுவின்

service-rss

முயற்சியின் காரணமாக, கூட்டு நடவடிக்கைக் குழுவின் தலைமை ஒருங்கிணைப்பாளர் திருமலைராஜன், ஒருங்கிணைப்பாளர் சிவசுப்பிரமணியன், சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க செயலாளர் அறிவழகன், பார் கவுன்சில் முன்னாள் உறுப்பினர் வேல்முருகன் உள்ளிட்ட பலரும் மத்திய சட்ட இணை அமைச்சர் பி.பி.சௌத்ரியை சந்தித்தனர். அப்போது, சென்னை உயர் நீதிமன்றம் வகுத்துள்ள விதிமுறைகள் குறித்தும், வழக்கறிஞர்கள் நடத்திவரும் போராட்டங்கள் குறித்தும், சட்ட இணை அமைச்சரிடம் எடுத்துரைக்கபட்டது. கவனமாக கேட்டுக்கொண்ட அமைச்சர், வழக்கறிஞர்கள் சட்டத்தில் உரிய சட்ட திருத்தம் கொண்டு வருவதே நிரந்தர தீர்வாக அமையும் எனவும்.

– கே. பழனிக்குமார், மாநிலச் செயலாளர், அகில பாரத வழக்கறிஞர் சங்கர்

நந்தினியை டாக்டர் ஆக்கும் சங்க சேவை

வேலூர் மாவட்டம் கெஜல்நாயக்கன்பட்டியைச் சேர்ந்த மாணவி என். நந்தினிக்கு சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ் படிக்க இடமும் கிடைத்துவிட்டது. ஆனால் மிகுந்த நலிவுற்ற குடும்பத்தைச் சார்ந்த இம்மாணவி தனது அடிப்படைத் தேவைகளுக்காகவும் கல்விக் கட்டணத்திற்காகவும் மிகவும் சிரமப்பட்டார்.

ராணிப்பேட்டைப் பகுதியைச் சார்ந்த கொடையாளர்களின் உதவி மூலம் ரூ.60,000 திரட்டப்பட்டு கல்வி உதவித் தொகையாக வழங்கப்பட்டுள்ளது. நந்தினி மருத்துவப் படிப்பில் சேரும் கனவானது  நனவாகியுள்ளது. இதன் மூலம் விடுதிக் கட்டணம், உணவுக் கட்டணம், எழுதுபொருட்கள் ஆகியவற்றைப் பெறுவதில் உள்ள சிரமம் நீங்கியுள்ளது. இதன் பின்னணியில் ஸ்வயம்சேவக சகோதரர்களின் முயற்சியும் குறிப்பிடத்தக்கது.

தகவல்: வி. கிருஷ்ணமூர்த்தி, என். வாசுதேவன், ராணிப்பேட்டை