வகுப்பறையில் ஹிஜாப் அனுமதியில்லை

உடுப்பி பெண்கள் கல்லூரியில், பயிலும் ஆறு முஸ்லிம் மாணவிகள் கடந்த ஆண்டு டிசம்பரில் ‘ஹிஜாப்’ எனப்படும் முஸ்லிம்களின் ஆடையை அணிந்து வகுப்பறைக்குச் செல்ல முடிவெடுத்தனர். அவ்வாறு செய்யக்கூடாது, அனைவரும் கல்லூரியின் நெறிமுறையை கடைபிடிக்க வேண்டும் என கல்லூரி நிர்வாகம் கேட்டுக்கொண்டது. இந்த பிரச்சனையை ஊதி பெரிய பிரச்சனையாக்கி குளிர் காய ஊடகங்களும் உள்ளூர் அரசியல்வாதிகளும் முயற்சித்தனர். இந்நிலையில், இந்த குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கும் வகையில், ‘கல்வி நிறுவனங்கள் கற்றலுக்கானவை மட்டுமே, மத பிரச்சாரத்திற்கான இடமல்ல, வகுப்பறைகளுக்குள் ஹிஜாபை அணிய அனுமதி கிடையாது. இதில் சிக்கல் உள்ளவர்கள் கல்லூரியை விட்டு தாராளமாக வெளியேறலாம்’ என உடுப்பி மகளிர் அரசு கல்லூரி மேம்பாட்டுக் குழுவின் துணைத் தலைவர் யஷ்பால் சுவர்ணா தெரிவித்துள்ளார். இந்த ஆறு மாணவிகளும் வேண்டுமென்றே ஹிஜாபை ஒரு பிரச்சினையாக மாற்ற முடிவு செய்யும்வரை அனைத்துமே நன்றாக இருந்ததாக மாணவர்களும் தெரிவிக்கின்றனர்.