லகு உத்யோக் பாரதி பாராட்டு

சிறு, குறு தொழில்களுக்கான தேசிய அளவிலான சேவை அமைப்பு லகு உத்யோக் பாரதி. இந்த அமைப்பின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், நேற்று அறிவிக்கப்பட்ட பட்ஜெட்டில்  நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்த ‘பிரதம மந்திரி கதி சக்தி திட்டம், எம்.எஸ்.எம்.இ போர்ட்டல் ஒருங்கிணைப்பு, அவசர கடன் வரி உத்தரவாதத் திட்டம், எம்.எஸ்.எம்.இ செயல்திறன் உயர்த்துதல் மற்றும் துரிதப்படுத்துதல் திட்டம், திறன் மேம்பாடு, அரசு கொள்முதல் திட்டம், சோலார் திட்டம், ராணுவத் துறையில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட பொருட்கள் பயன்பாடு ஊக்குவிப்பு, ஸ்டார்ட்அப் ஊக்கத்தொகை,…’ உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டு உள்ளது.