உத்தர பிரதேசத்தின் அயோத்தியில் அமையும் ராமர் கோயிலுக்கான கட்டுமானத்துக்கான அடிக்கல்லை பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2020 ஆகஸ்டில் நாட்டினார். இதையடுத்து, முதல்கட்டமாக அடித்தளம் அமைக்கும் பணி துவங்கியது. கருவறை கட்டுமானப் பணிகள் கடந்த ஜூன் மாதம் முறைப்படி துவங்கின. மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் பூஜைகள் செய்து இந்தப் பணிகளை துவக்கி வைத்தார். தற்போது 40 சதவீத பணிகள் நிறைவு பெற்றுள்ளது என அயோத்தி ராமர் கோயில் அறக்கட்டளை நிர்வாகம் தெரிவித்துள்ளது.