ராசிபலன் – விகாரி வருடம், ஐப்பசி 24-30 ( நவம்பர் 10 – 16 ) 2019

மேஷம் :

உத்தியோகஸ்தர்கள் : உயர் அதிகாரிகளின் விருப்பத்திற்கேற்ப பணியாற்றி ஆதரவை பெறுவீர்கள். தக்க சமயத்தில் எடுத்துச் சொல்லி சாதகமான பலன்களை பெற முயற்சி செய்யவும். சக ஊழியர்களின் நட்பால் அலுவலகப் பணியினை தொய்வின்றி செய்து முடிப்பீர்கள். செவ்வாயால் கடன் நோய் தீரும். எதிர்த்தவர்களிடம் வெற்றியும் பெறுவீர்கள்.

பெண்மணிகள்: அந்தஸ்து உயர்வதால் பெருமிதத்துடன் திகழ்வீர்கள். குடும்பத்தில் இருந்து வந்த சச்சரவுகள் விலகும். அன்புணர்வு அதிகரிக்கும். குரு பார்வையினால் திருமணங்கள் நடைபெறும். பெற்றோர்கள் வழியே நல்ல சேதி கிடைக்கும்.

மாணவ மணிகள்: திட்டுமிட்டுப் படித்து சிறந்த மதிப்பெண்கள் பெறுவீர்கள். தெளிவான மனதுடன் திறன் மேம்பாட்டு பயிற்சியினைப் பெறுவீர்கள்.

சிறுதொழில், வியாபாரம்: தொழில் விருத்தியடையும். புதுமைகளில் புகுத்த நிறைந்த லாபத்தைப் பெறுவீர்கள்.

அரசியல்வாதிகள்: பொறுப்புடன் செயல்பட்டு பாராட்டுகள் பெறுவீர்கள்.

ரிஷபம்:

உத்தியோகஸ்தர்கள்: இது நாள்வரை கடினமானப் பணிகளை சவலாக செய்து வந்த நீங்கள், இனி பணி பளு குறைந்து விடும். உதவியாளர்கள் உதவியினால் வேலை சுலபமாகும். ஊதிய உயர்வு கிடைக்கும். உற்சாகமாக செய்யும் பணிக்கு மரியாதை கொடுப்பார்கள். உங்களின் உழைப்பிற்கு ஏற்ற மரியாதை கொடுப்பார்கள்.

பெண்மணிகள்: அஷ்டமச் சனியினால் மனம் அல்லலுற்று வந்த போதும், பொறுமையை கையாண்டதால் இப்போது நற்பெயர் கிடைக்கும். தேவையானப் பொருட்கள் வீட்டில் நிறையும். கடினமான பணிகளும் தானாகவே நடைபெறும். சூரியனால் சுபிட்சங்கள் தொடரும்.

மாணவ மணிகள்: வெளியூர் பயணங்களினால் சில பிரச்சினைகள் ஏற்படலாம். அலைச்சலைத் தவிர்த்து படிப்பில் கவனம் வைக்கவும்.

சிறுதொழில், வியாபாரம்: பங்குதாரர்கள் ஆதரவுடன் இருப்பார்கள். வரவு – செலவு கணக்கில் சற்று கவனம் செலுத்தவும். சனியின் தாக்கம் குறைவதால் சங்கடங்கள் இனி இருக்காது. வளர்ச்சி அதிகரிக்கும்.

அரசியல்வாதிகள்: தொண்டுள்ளத்துடன் செய்யும் பணியால் ஆதரவு  அதிகரிக்கும்.

மிதுனம்:

உத்தியோகஸ்தர்கள்: செய்யும் பணிகளில் தடுமாற்றமின்றி செய்ய பழகவும். தவறுகள் ஏற்படுவதால் உயர் அதிகாரிகளின் கண்டனத்திற்கு ஆளாகலாம். அனைத்து விஷயங்களிலும் சற்று கவனமாக செயலாற்ற வேண்டும். உடல் நலிவாலும், சிலரின் செய்கைகளினாலும் வேலை பாதிக்கப்படலாம். பொறுமை தேவை.

பெண்மணிகள்: தடுமாற்றங்களும், தட்டுபாடுகளும் கோபத்தை உருவாக்கலாம் என்பதால் பொறுமை அவசியம். சகோதரர் வகையில் ஆறுதல் கிடைக்கும். இல்லறத்துணையுடன் இணக்கம் ஏற்படுத்தவும். குழந்தைகளின் வளர்ச்சி குறித்து கவலை ஏற்படும். சுக்கிரனால் ஓரளவு மகிழ்ச்சி கிடைக்கும்.

மாணவ மணிகள்: ஏழில் உள்ள சனியினால் சில இன்னல்கள் சந்தித்தாலும், குரு பார்வையால் புனிதம் பெறுவீர்கள். பெற்றோருடன் இணக்கமாக நடந்து கொள்ளவும்.

சிறுதொழில், வியாபாரம்: புதிய துணைத்தொழில் துவக்கலாம். பங்குதார்களின் ஆலோசனையுடன் செயல்படவும்.

அரசியல்வாதிகள்: உடனடியாக பதவி இல்லையென்றாலும் அதற்கான அடித்தளம் போடுங்கள்.

கடகம் :

உத்தியோகஸ்தர்கள்: உயர் அதிகாரிகளின் அலட்சியப் போக்கால் வருத்தம் அடைவீர்கள். திருப்தியற்ற மனநிலையில் பணிகளில் ஈடுபடுவீர்கள். பொருளாதார சிக்கல்களும் உண்டாகலாம். சக ஊழியர்களின் ஒத்துழைப்பை கேட்டு பெறவும். அதிகாரிகளின் நன்மதிப்பைப் பெற அதிகம் உழைக்க வேண்டியது இருக்கும்.

பெண்மணிகள்: குடும்பத்தினருடன் சச்சரவுகளைத் தவிர்க்கவும். உங்களின் சுய விருப்பத்தை திணிக்காதீர்கள். ஏமாற்றங்களினால் ஏற்படும் கோபத்தை வெளிகாட்ட வேண்டாம். குழந்தைகளினால் பெருமை கிடைக்கும்.

மாணவ மணிகள்: போட்டி, பந்தயங்களில் வெற்றி கிடைக்கும். பாடங்களிலும் கவனம் செலுத்தவும். நண்பர்களிடம் இனிமை காட்டவும். சிறுதொழில், வியாபாரம், புதிய முயற்சிகளில் எச்சரிக்கை தேவை.

அரசியல்வாதிகள்: தலைமையின் கட்டளையை நிறைவேற்றவும்.

சிம்மம்:

உத்தியோகஸ்தர்கள்: ஒவ்வொரு நாளும் செய்ய வேண்டிய பணிகளை திட்டமிட்டு செய்து பழகினால் அலுவலகத்தில் ஆதரவு பெருகும். வெளியூர் பயணங்களை தவிர்க்கவும். செலவுகளை குறைக்க வேண்டும். எதிர்பார்ப்புகள் ஒவ்வொன்றாக நடைபெறும். நண்பர்களால் மகிழ்ச்சி கிடைக்கும்.

பெண்மணிகள்: குடும்பப் பிரச்சினைகளில் உங்களது யோசனை ஏற்றுக்கொள்பவர்கள் பாராட்டுவார்கள். பொருட்களை அதிகம் வாங்க வேண்டாம். சேமிப்பை அதிகரிக்க வேண்டும்.

மாணவ மணிகள்: உங்களது கருத்துக்கு மதிப்பு கிடைக்கும். கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்று பெருமிதம் அடைவீர்கள். உயர்கல்விக்கான ஆலோசனை கிடைக்கும். நட்பு பலமாகும்.

சிறுதொழில், வியாபாரம்: பங்குதாரர்களிடம் பக்குவமாக பேசி நட்பை பலப்படுத்தவும். அதிக கொள்முதல் தவிர்க்கவும். தனலாபம் அதிகரிக்கும். புதிய திட்டங்களை இப்போது நடைமுறைப்படுத்தலாம்.

அரசியல்வாதிகள்: குரு பார்வையினால் சில பொறுப்புகளை ஏற்று சிறப்பாக செய்வீர்கள்.

கன்னி:

உத்தியோகஸ்தர்கள்: உயர் பதவி கிடைப்பதற்கும், ஊதிய உயர்வு அதிகரிப்பதற்கும் வாய்ப்புகள் குறைவாகவே உள்ளன. கடுமையான உழைப்பு அந்தகால நற்பெயரை கொண்டு உங்களது பெயர் பரிந்துரைக்கப்படும். உயர் நிலையில் அதிக அக்கறைகாட்டவும். அலைச்சல் தவிர்க்கவும். வருமானம் அதிகரிக்க சிந்திக்கவும்.

பெண்மணிகள்: இல்லறத் துணையின் விருப்பத்தை உணர்ந்து செயல்படவும். பல நாட்களாக நடைபெற்று வந்த தடை, தாமதங்களை  கண்டு மனம் வருந்த வேண்டாம். வாரிசுகளினால் மதிப்பு உயரும். உயர் மதிப்புள்ள பொருட்களை கவனமாக கையாளவும்.

மாணவ மணிகள்: நண்பர்களுடன் இணக்கமாகப் பழகவும். தேர்வுக்காக கடின உழைப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

சிறுதொழில், வியாபாரம்: தேவை அறிந்து முயற்சி செய்யவும். அகலக்கால் எதிலும் வைக்க வேண்டாம்.

அரசியல்வாதிகள்: பொறுப்புகளில் சில மாற்றங்களை சந்திப்பீர்கள்.

துலாம்:

உத்தியோகஸ்தர்கள்: வாக்கு வன்மையுடன் திகழ்வீர்கள். உங்களின் கடினமான உழைப்பை கண்டு சக ஊழியர்களும் புறம் பேசலாம் என்றாலும் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். சிறப்பான விதத்தில் பணிகளை துரிதமாக செய்து அதிகாரிகளின் ஆதரவைப் பெறுவீர்கள். சுக்கிரனால் வளம் பெருகும்.

பெண்மணிகள்: இல்லறத் துணையின் ஆதரவு கிடைக்கும். விருந்து, விசேஷங்களில் பங்கேற்று மகிழ்வீர்கள். முகப்பொலிவுடன் மகிழ்ச்சியாக திகழ்வீர்கள்.

மாணவ மணிகள்: ராசியில் உள்ள புதனால் அவச்சொல் ஏற்படலாம். போட்டிகளில் விரோதம் தவிர்க்கவும்.

சிறுதொழில், வியாபாரம்: போட்டியாளர்கள் பணிவார்கள். பங்குதாரர்கள் பக்கபலமாக இருப்பார்கள்.

அரசியல்வாதிகள்: தலைமையின் ஆதரவை தக்க வைக்கவும்!

விருச்சிகம்:

உத்தியோகஸ்தர்கள்: சோர்வுடன் பணியாற்றிய நீங்கள், இனி சுறுசுறுப்பாக செயல்படக் போகிறீர்கள். குண மேன்மையாலும், செயல்திறனாலும் கடினமானப் பணிகளையும் சாதித்துக் காட்டுவீர்கள். ஆரோக்கியம் மீளும் வசதி, செளகர்யங்கள் அதிகரிக்கும். ஊக்கத் தொகையும் கிடைக்கும்.

பெண்மணிகள்: குரு அருளால் திருமணம் நடைபெறும். சிலர் தாய்மைப்பேறு பெறுவார்கள். பரிசுப் பொருட்களும் பலரது ஆதரவும் கிடைக்கும். ஆபரணச் சேர்க்கையும் உண்டு.

மாணவ மணிகள்: விளையாட்டுகளில் கவனமாக இருக்கவும். வாகனத்தில் மிதவேகம் தேவை. படத்தில் வரும் சந்தேகம் தவிர்க்கவும்.

சிறுதொழில், வியாபாரம்: கடன்களுக்கு பொறுப்பேற்க வேண்டாம். அரசு அதிகாரிகளிடம் இணக்கமாக செயல்படவும்.

அரசியல்வாதிகள்: எதிர்பார்ப்புகளில் சில மட்டும் நடைபெறும்.

தனுசு:

உத்தியோகஸ்தர்கள்: சக ஊழியர்களின் ஆத்மார்த்தமான உதவிகளுடன் உங்களின் பணியில் வளர்ச்சி கிடைக்கும். குருவின் அருட் பார்வையால் பாராட்டுகளும், பரிசும் கிடைக்கும். சிலருக்கு ஊதிய உயர்வும், பதவி உயர்வும் உண்டு. உங்களுக்கு பாதகம் செய்தவர்கள் விலகிச் செல்வார்கள். நல்ல மாற்றங்களை காண்பீர்கள்.

பெண்மணிகள்: இளம் பெண்கள் இல்லற வாழ்வில் அடியெடுத்து வைக்கலாம். பொறுப்புகளை ஏற்றுக்கொண்டு புன்னகையுடனும்இருந்தால் அனைவராலும் பாராட்டப்படுவீர்கள்.

மாணவ மணிகள்: போட்டிகளில் பங்கேற்ற கடினமான பயிற்சி செய்வீர்கள். முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.

சிறுதொழில், வியாபாரம்: தொழிலில் நவீன உத்திகளை கற்றுக் கொள்வீர்கள். நம்பிக்கை அதிகரிக்கும். தனலாபம் அதிகம் கிடைக்கும்.

அரசியல்வாதிகள்: குறுக்கிடுகளைத் தாண்டி, முன்னேறுவீர்கள்.

மகரம்:

உத்தியோகஸ்தர்கள்: பொறுமையுடனும் நிதானத்துடனும் பணியாற்ற வேண்டும். உங்களின் பணிகளை நீங்களே செய்து வந்தால், பிரச்சினைகளைத் தவிர்க்கலாம். சிலருக்கு வெளியூரில் பணி அமையலாம். இடமாற்றமும் ஏற்படும். கேதுவினால் நம்பிக்கை ஏற்படும். தங்களுடைய இனிமையான நடவடிக்கையால் நட்பு வளரும்.

பெண்மணிகள்: குடும்பத்தில் ஒற்றுமை ஏற்பட உங்களின் செயல்கள் பாராட்டப்படும். இல்லறத்துணையின் ஆதரவும் கிடைக்கும். தெளிவான மனநிலையுடன் பிரச்சினைகளை கையாளுவீர்கள். அந்தஸ்து உயரும். அமைதியுடன் இருங்கள்.

மாணவ மணிகள்: கல்வியில் மனம் ஈடுபடும்.  சிலர் சாதனைகள் செய்ய கடுமையாக உழைப்பீர்கள், ஆசிரியரின் ஆலோசனைப் பெறவும்.

சிறுதொழில், வியாபாரம்: பத்தில் உள்ள கிரகங்களினால் வளர்ச்சி அதிகரிக்கும். அனைத்து வகையிலும் வருமானம் கிடைக்கும்.

அரசியல்வாதிகள்: புதிய பதவியில், அந்தஸ்து மரியாதை அதிகரிக்கும்.

கும்பம்:

உத்தியோகஸ்தர்கள்: பணியினால்  அதிகம் உழைக்க வேண்டியது இருந்தாலும் பதறாமல் காரியம் செய்ய பழகவும். உங்களைவிட்டு விலகியவர்கள், இப்போது உங்களின் தன்மை அறிந்து வந்து, இணைவார்கள். விரோதம் காட்டியவர்கள் விலகிச் செல்வார்கள். அதிகாரியின் ஆதரவைப் பெற்று, முன்னேற்றத்தை நோக்கி செய்வீர்கள்.

பெண்மணிகள்: முக்கிய கிரகங்கள் மூன்றும் லாபஸ்தானத்தில் நின்று அபிவிருத்தியை தொடர்ந்து அளிப்பார்கள். அன்பும், பாசமும் அதிகரிக்கும்.

மாணவ மணிகள்: கல்வியில் விருப்பம் இருந்தாலும் சூரியனால் சிறு சிறு தடைகள் தோன்றிடலாம். ஆர்வத்துடன் படியுங்கள். புற விஷயங்களை புறந்தள்ளுங்கள்.

சிறுதொழில், வியாபாரம்: வளமான வியாபார லாபம் தொடரும். அசையா சொத்துகள் வாங்கும் போது சட்ட வல்லுனரை ஆலோசித்து செயல்படவும்.

அரசியல்வாதிகள்: ஆதரவை பெற்று அகமகிழ்வோடு இருங்கள். பகைகள் விலகும்.

மீனம்:

உத்தியோகஸ்தர்கள்: உயர் அதிகாரிகளின் உதாசீனத்தால் உள்ளம் நோக நேர்ந்தாலும் ஒன்பதில் உள்ள சுக்கிரனால் வளர்ச்சியில் குறையொன்றும் இருக்காது. உடன் பணியாற்றும் நண்பர்களால் உதவி கிடைக்கும். மருத்துவ செலவு ஏற்படும். வாகனங்களில் மித வேகம் கொள்ளவும். சந்திரனால் மன உறுதி ஏற்படும்.

பெண்மணிகள்: வெளியில் தெரியாத நோய்களினால் மருத்துவரை நாட வேண்டிய சூழல் ஏற்படும். தன, வாக்கு, குடும்ப ஸ்தானமான இரண்டாம் இடம் குரு பார்வையினால் புனிதமடைவதால் குடும்பத்தில் ஒற்றுமை ஏற்படும். உங்களின் கருத்துக்கு மதிப்பு அதிகரிக்கும். ஆடை, ஆபரணம் சேர்க்கை உண்டு. அடிப்படைத் தேவைக்கு குறைவு ஏற்படாது.

மாணவ மணிகள்: அன்றாடப் பாடங்களில் ஏற்படும் சந்தேகங்களை கேட்டுத் தெளிவு பெற வேண்டும். பெற்றோருடன் இணக்கமாக இருங்கள். மதிப்பெண்கள் அதிகரிக்க முயற்சி  அவசியம்.

சிறுதொழில், வியாபாரம்: பங்குதாரர்களே வருமானத்திற்கு குறைவு ஏற்படாது. போட்டியாளராக மாறலாம். ஊழியர்களின் செயல்களை கண்காணிக்கவும்.

அரசியல்வாதிகள்: பொறுப்பாக பணியாற்றவும். அலட்சியம் ஆபத்து தரும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *