திருக்கச்சி நம்பிகள் பூவிருந்தவல்லி கிராமத்திலிருந்து தினந்தோறும் காஞ்சிபுரம் சென்று ஸ்ரீவரதராஜப் பெருமாளை வழிபடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். பெருமாளிடம் அவர் கொண்டிருந்த ஆழ்ந்த பக்தியைக் கண்டு அனைவரும் வியந்தனர். அவர் காஞ்சிபுரம் செல்லும்போது ஸ்ரீராமனுஜர் வீட்டைக் கடந்து செல்வது வழக்கம்.
இளைஞரான ஸ்ரீராமானுஜர் ஒருநாள் தற்செயலாக அவரைப் பார்க்க நேரிட்டது. அவரின் முகப்பொலிவைக் கண்ட ஸ்ரீராமானுஜர், திருக்கச்சி நம்பிகளைத் தம் இல்லத்திற்கு உணவு உண்ண அழைத்தார். உணவு உண்டு முடித்தபின் ஸ்ரீராமானுஜர் விருந்தினராகிய திருக்கச்சி நம்பிகளின் கால்களைப் பிடித்து, சேவைசெய்ய முன்வந்தார். அதை மறுத்த அவர், ‘நான் தாழ்ந்த குலத்தைச் சார்ந்தவன். எனக்கு நீங்கள் எப்படிப் பணிவிடை செய்ய முடியும்’ என்றார்.
இதனைக் கேட்ட ஸ்ரீராமானுஜர், ‘பெரியவரே, பூணூல் அணிவதாலா ஒருவன் அந்தணன் ஆகிறான்? பகவானிடத்தில் பக்தி கொண்டவன் மட்டுமே உண்மையான அந்தணன்’ என்று கூறினார். அவரது மொழிகள் திருக்கச்சி நம்பிகள் மனதைத் தொட்டன. அன்றிலிருந்து அவர்கள் இருவரும் பரஸ்பரம் அன்பால் கட்டுண்டனர்.
எத்தனையோ மகான்கள் இந்த ஞான பூமியில் அத்தனை பேருக்கும் நமது வணக்கங்கள்