மோடி முதலிடம்

பிரதமர் நரேந்திர மோடியின் யூடியூப் சேனல் செவ்வாய்கிழமை நிலவரப்படி ஒருகோடி சந்தாதாரர்களைத் தாண்டியுள்ளது. இதன் மூலம், சமூக ஊடகத் தளத்தில் முன்னணி அரசியல் தலைவர்களில் ஒருவராக  மோடி திகழ்கிறார். பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனாரோ தனது யூடியூப் சேனலில் 36 லட்சம் சந்தாதாரர்களுடன்  மோடிக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் உள்ளார். 30.7 லட்சம் சந்தாதாரர்களுடன் மெக்சிகோ அதிபர் ஆண்ட்ரெஸ் மானுவல் லோபஸ் ஒப்ராடோர் மூன்றாம் இடத்தில் உள்ளார். சில தேசிய தலைவர்களுடன் ஒப்பிடுகையிலும் பிரதமர் மோடி யூடியூப் சந்தாதாரர்களின் தரவரிசையில் முதலிடத்தில் உள்ளார். காங்கிரஸ் தலைவர் ராகுலுக்கு 5.25 லட்சம் சந்தாதாரர்களும், காங்கிரஸ் கட்சியின் சசி தரூருக்கு 4.39 லட்சம் சந்தாதாரர்களும், ஏ.ஐ.எம்.ஐ.எம்  தலைவர் அசாதுதீன் ஒவைசிக்கு 3.73 லட்சம் சந்தாதாரர்களும், தமிழக முதல்வரும் தி.மு.க தலைவருமான ம.க. ஸ்டாலினுக்கு 2.12 லட்சம் சந்தாதாரர்களும் யூடியூப்பில் உள்ளனர். இதில் மட்டுமல்ல, டுவிட்டரில் 753 லட்சம் பின்தொடர்பவர்கள், முகநூலில் 468 லட்சம் பின்தொடர்பவர்கள் என பிற சமூக ஊடகத் தளங்களிலும் பிரதமர் மோடி செயல்பாட்டில் உள்ளார்.