மோடிக்கு ராகுல் மாற்று அல்ல

அடுத்த லோக்சபா தேர்தலில் மத்தியில் ஆட்சி அமைப்பதில் எதிர்க்கட்சிகள் மும்முரம் காட்டி வருகின்றன. எதிர்க்கட்சிகளை கூட்டணியில் இணைக்கும் முயற்சியில் பல்வேறு எதிர்கட்சித் தலைவர்கள் ஈடுபட்டுள்ளனர். அதில் மேற்கு வங்க முதல்வரும், திருணமுல் காங்கிரஸ் கட்சித் தலைவருமான மமதா பானர்ஜியும் ஒருவர். சமீபத்தில் மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவில் திரிணமுல் காங்கிரஸ் கட்சியின் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில், அக்கட்சியின் மூத்த தலைவரும், எம்.பியுமான சுதீப் பந்தோபாத்யாய் பேசுகையில், ‘காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைக்கக் கூடாது என நாங்கள் கூறவில்லை. நீண்ட காலமாக நான் ராகுலை கண்காணித்து வருகிறேன். தன்னை ஒரு தலைவராக அவர் வளர்த்து கொள்ளவில்லை. மோடிக்கு மாற்றாக அவர் எவ்வகையிலும் உருவெடுக்கவில்லை. இந்த நாடு மமதாவை மோடிக்கு மாற்றாக கருதுகிறது என்று பேசினார். மெகா கூட்டணி வைக்கலாம், ராகுலை பிரதமர் ஆக்கலாம் என்ற கனவில் உள்ள சோனியா கந்தி உட்பட காங்கிரஸ் கட்சியினரிடையே இக்கருத்து சர்ச்சையையும் விரக்தியையும் ஏற்படுத்தி உள்ளது.