‘முஸ்லிம்கள் மட்டும்’ ஆட்சேர்ப்பு நடவடிக்கையா?

மத்திய அரசின் மினி ரத்னா அங்கீகாரம் பெற்ற ‘பவன் ஹன்ஸ்’ விமான நிறுவனம் தற்போது சர்ச்சையில் சிக்கியுள்ளது. சமூக ஊடகங்களில் பரவி வரும் அதன் புதிய பயிற்சியாளர்கள் குறித்த விவரத்தில், பவன் ஹன்ஸில் விமானப் பயிற்சிக்கு சேர்ந்துள்ள புதிய பயிற்சியாளர்கள் அனைவரும் முஸ்லிம்களாகவே உள்ளனர். அவர்களைத் தவிர பயிற்சிக்கு வேறு யாரும் பயிற்சிக்கு தேர்ந்தெடுக்கப்படவில்லை,

அந்த மாணவர்களின் பின்புல விவரங்களை லிங்ட்இன் இணையத்தில் ஆராய்ந்தபோது மேலும் ஒரு அதிர்ச்சித் தகவலாக அவர்கள் அனைவரும் சிறுபான்மை கல்வி நிறுவனமான ஜாமியா மிலியா இஸ்லாமியாவில் பயின்றவர்கள் என்பது தெரியவந்துள்ளது. பவன் ஹான்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் கூட்டுப் பொது மேலாளர் முகமது அமீரை அழைத்து இதை உறுதிப்படுத்த முயற்சித்தபோது அங்கிருந்து எந்த பதிலும் கிடைக்கவில்லை.

2017ல், பவன் ஹன்ஸ் நிறுவனம், ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழகத்துடன் இணைந்து இரண்டரை வருட முழுநேர அடிப்படை விமானப் பராமரிப்புப் பயிற்சிக்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.  எனினும், இந்த பட்டியலில் விமானப் படிப்புகளில் சேரத் தகுதியான ஒரு முஸ்லிம் அல்லாத மாணவரைக்கூட அந்த பல்கலைக் கழகத்தாலோ அல்லது நிறுவனத்தாலோ கண்டுபிடிக்க முடியவில்லையா என்ற சந்தேகம் எழுகிறது. எஸ்.சி, எஸ்.டி பிரிவினருக்கான இடஒதுக்கீடுகளை சிறுபான்மை கல்வி நிறுவனங்களில் அமல்படுத்த வேண்டும் என்று பலகாலமாக போராடிவரும் சமூக ஆர்வலர்களின் கோரிக்கையின் அவசியம் குறித்தும் இந்த பட்டியல் நமக்கு சுட்டிக்காட்டுகிறது.

2020ல் மேற்கு வங்க காவல்துறையால் தேர்ந்தெடுக்கப்பட்ட காவலர்கள் பட்டியலில் அனைவரும் முஸ்லிம்களாகவே இருந்ததை இந்த சம்பவம் நினைவூட்டுகிறது. மேற்கு வங்க அரசு, பல முஸ்லிம் ஜாதிகளும் ஓ.பி.சி பட்டியலில் உள்ளதை காரணமாக்காட்டி இதனை ஒரு இடஒதுக்கீடு விஷயமாக மாற்றி எதிர்ப்பவர்களின் வாயை அடைத்துவிட்டது குறிப்பிடத்தக்கது.

பவன் ஹான்ஸ் லிமிடெட் என்பது மத்திய அரசாங்கத்தின் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்தின் கீழ் உள்ள அமைப்பு. இது இந்தியன் ஆயில் நிறுவனங்களுக்காக ஹெலிகாப்டர் சேவைகளை வழங்குகிறது. அதுமட்டுமில்லாமல், கேதார்நாத், வைஷ்ணவி தேவி ஆலயங்கள் போன்ற புனித யாத்திரைகளிலும், மாவோயிஸ்ட் கிளர்ச்சியைக் கையாளும் போது மாநில அரசாங்கங்களாலும் பயன்படுத்தப்படுகின்றன .

https://www.opindia.com/2022/04/pawan-hans-recruitment-muslim-jamia-millia