கேரள மாநிலத்தை ‘முழுமையான மின் ஆளுமை மாநிலம்’ என்று அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார். திருவனந்தபுரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய பினராயி விஜயன், கேரள மாநிலம் முழுமையான மின் ஆளுமை என்ற தகுதியை எட்டியுள்ளது. பொதுச் சேவைகளை வழங்குவதில் வெளிப்படைத் தன்மையையும் செயல்திறனையும் அதிகரிக்கும் முக்கியமான சாதனை இது. மாநில அரசு இதற்காக இ செவனம் இணைய போர்ட்டலை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் மக்கள் சுமார் 900 சேவைகளை அணுக முடியும். தலைமைச் செயலகம் போன்ற உயர்மட்ட அரசுகளில் பயன்பாட்டில் உள்ள ‘இ அலுவலகம்’, விரைவில் தாலுகா அலுவலகங்கள் போன்று கீழ் மட்டங்களிலும் செயல்படுத்தப்படும்” என கூறினார். மேலும், மின் ஆளுமை ஊடுருவலுக்கான டிஜிட்டல் பிளவைக் குறைக்க வேண்டியதன் அவசியம் குறித்து பேசிய அவர், கேரளா ஃபைபர் ஆப்டிக் நெட்வொர்க் (KFON) திட்டத்தின் மூலம் 100 சதவீத டிஜிட்டல் கல்வியறிவு மற்றும் அனைவருக்கும் மலிவு இணையத்தை கொண்டு வருவதற்கு தனது அரசு செயல்பட்டு வருவதாக தெரிவித்தார்.