முதல்வரின் மகள்களுக்கு திருமணம்

மத்திய பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சிங் சௌஹானும் அவரது மனைவியும், கடந்த 1998ல் சுந்தர் சேவா ஆசிரமத்தில் வளர்க்கப்பட்ட ஏழு சிறுமிகளையும் இரண்டு சிறுவர்களையும் தத்தெடுத்தனர். அன்றில் இருந்து அவர்களின் கல்வி உட்பட அனைத்து செலவுகளையும் சௌஹான் குடும்பம் கவனித்து வருகிறது. அவர்களில் இதுவரை நான்கு பெண்கள் மற்றும் ஒரு பையனுக்கு திருமணம் செய்துக் கொடுத்துவிட்டார். தற்போது மீதமுள்ள ராதன், சுமன், பிரிதி அகிய மூன்று மகள்களுக்கும் விதிஷாவில் உள்ள புகழ்பெற்ற பாத்வாலே கணேஷ் கோயிலில் அனைத்து  சம்பிரதாயங்கள், சடங்குகளுடன் கொரோனா வழிகாட்டுதலுக்கு இணங்க எளிய முறையில் திருமணம் செய்து கொடுத்தார். ‘இன்று எனது மூன்று மகள்களும் மகிழ்ச்சியான எதிர்காலத்தில் அடியெடுத்து வைக்கிறார்கள், இது தந்தையாக எனக்கு புனிதமான நாள். ஒரு பெரிய பொறுப்பு இன்று நிறைவேற்றப்பட்டது. என் மகள்கள் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்கட்டும்’ என அவர்களை ஆசீர்வதித்தார் முதல்வர் சௌஹான்.