மீட்பும்  நிவாரணமும்: மலைவாழ் மக்கள் மத்தியிலும்!

பேச்சிபாறை அணையைச் சுற்றி உள்ள மலைப்பகுதிகளில் 48 பழங்குடி  மக்கள் வசிக்கும் கிராமங்கள் உள்ளன.  புயலின் பாதிப்பு அங்கேயும் இருக்க வாப்புள்ளது என்பதை அனுமானித்த  ஸ்வயம்சேவகர்கள் அங்கு செல்ல முயற்சித்தபோது பாதை முழுவதும் மரம் விழுந்து தடைப்பட்டு கிடந்தது.  மரங்களை வெட்டி வழி உருவாக்கி இரு சக்கர வாகனங்களில் அங்கு சென்றனர்.  ஆலம்பாறை என்ற கிராமத்திற்கு சென்றபோது அங்கு கண்ட காட்சிகள் அவர்களை அதிர்ச்சியில் உறைய செதது.  சூறாவளி காற்றினால் பெரிய பெரிய மரங்கள் வீடுகளில் சரிந்து விழுந்து வீடுகளில் இருந்தவர்கள் முழுக்க நனைந்த ஆடைகளோடு அங்கிருந்த பள்ளிக்கூட கட்டிடத்திற்குள் தஞ்சம் புகுந்திருந்தனர். இந்த செதியை சங்க பொறுப்பாளர்களுக்கு தகவல் கொடுத்தனர். அவர்களுக்கு உதவி வருவதை உறுதி செத பின் இன்னும் மலைக்கு மேல் உள்ள புறாவிளை, வில்லிசாரிமலை ஆகிய ஊர்களுக்கு ஸ்வயம் சேவகர்கள் சென்றனர்.  அங்கும் கிட்டத்தட்ட இதே நிலை. மரங்களை வெட்டி வழி உருவாக்கி இரு சக்கர வாகனங்களில் அங்கு சென்றனர்.  அங்கு சென்றடையும்போது மாலை 6 மணி ஆகிவிட்டது.    ஆலம்பாறை போன்றே அந்த மலைகளிலும் சூழ்நிலை இருந்தது.  அவர்களை அந்தந்த ஊர்களில் உள்ள சமுதாய நலக்கூடங்களில் தங்க வைத்து அங்குள்ள தகவல்களையும் சங்க பொறுப்பாளர்களுக்கு தெரிவித்தனர்.  அதற்குள் குலசேகரம் பகுதியில் வீடுகளில் உணவு தயாரிக்கப்பட்டு ஆலம்பாறை பகுதியில் பள்ளிக்கூட கட்டிடத்தில் இருந்தவர்களுக்கு வழங்கப்பட்டது.  வில்சாரி மலை, புறாவிளை ஆகிய பகுதிகளில்  முதல் உணவு கொடுக்கும்போது இரவு 10 மணி.

 

*****************************************************************

ஒரு தாயின் ஆதங்கம்

சன் டிவியின் நிருபர் ஒரு பெண்மணியிடம் பேட்டி கண்டபோது அவர் எங்களுக்கு பால், பிஸ்கட், உணவு பொட்டலங்கள்   போன்ற அனைத்து உதவிகளையும் ஆர்.எஸ்.எஸ் பையங்கதான் தண்ணீரில் நீந்தி வந்து  தந்தார்கள்.  அரசாங்க அதிகாரிகள் உட்பட வேறு யாரும் எங்களுக்கு உதவவில்லை என்று கூறியது அன்று சன் நியூஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது.

*****************************************************************

 

கம்யூனிஸ்டுகளுக்கு பதிலாக பாதிரிகள்

இயற்கை சீற்றங்களால் மக்கள் கஷ்டப்படும்போது கம்யூனிஸ்டுகள் எங்கும் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டதாக வரலாறு கிடையாது. ஒருவர் வேடிக்கையாக சொன்னார். பிணங்கள் சந்தா கொடுக்காதே.. சந்தா கிடைக்காத இடங்களில் கம்யூனிஸ்டுகளுக்கு வேலை கிடையாது.

பாதிப்பு ஆன உடனேயே ஆர்.எஸ்.எஸ் தனது சக்திக்கேற்றவாறு  நிவாரணப் பணிகளில் ஈடுபட்டது. ஆனால் கிறிஸ்தவ பாதிரிகள் புயலின்போது சர்ச்சுக்குள் சொகுசாக இருந்துகொண்டு 4  நாட்களுக்கு பிறகு அப்பாவி மீனவர்களைத் தூண்டிவிட்டு அரசுக்கு எதிராக ரயில் மறியல், சாலை மறியல் என போராட்டங்களில் இறங்கினார்கள். கம்யூனிஸ்டுகளின் வேலையை கிறிஸ்தவப் பாதிரிகள் எடுத்துக் கொண்டார்கள் என்றே தோன்றுகிறது.  குமரி மாவட்டத்திலுள்ள ஆறு தொகுதிகளின் மக்கள் பிரதிநிதிகள் பொதுமக்கள் பாதிக்கப்பட்டபோது சென்னையில் இருந்துகொண்டு தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்றனர். பாதிரிகள் அழைத்தவுடன் அவர்களோடு முன்னின்று போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.

*****************************************************************

கடலோர காவல்படையின் மகத்தான பணி

ஒக்கி புயலால் எதிர்பாராத விதமாக  மீனவர்கள்  பலர் நடுக்கடலில் சிக்கிக் கொண்டனர். பலர் அருகிலுள்ள கேரளா, லட்சத்தீவு, கர்நாடகா, மகாராஷ்டிரா, குஜராத் ஆகிய கடற்கரை பகுதிகளில் கரை ஒதுங்கினர். அவர்களை அந்தந்த மாநில அரசுகள் காப்பாற்றி பாதுகாத்து திரும்ப அனுப்பி வருகிறது. புயலால் பாதிக்கப்பட்ட கேரளா, தமிழ்நாடு பகுதிகளில் பார்வையிட்ட மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறியதோடு, கப்பற்படையின், ஹெலிகாப்டர், போர்க் கப்பல்களை மீட்பு நடவடிக்கையில் ஈடுபட உத்தரவிட்டார். இதன் மூலம் நடுக்கடலில் மாயமான 122 மீனவர்கள் இக்குழுவினரால் மீட்கப்பட்டனர்.

*****************************************************************