மேற்கு வங்கம், பஞ்சாப், ராஜஸ்தான், ஜார்கண்ட், கேரளா, மகாராஷ்டிரா என சில மாநிலங்கள் தங்கள் மாநிலங்களில் சி.பி.ஐ விசாரிக்க தடை விதித்துள்ளன. தங்கள் ஆட்சி நடக்கும் மாநிலங்களில் சொந்த கட்சியினரின் ஊழல்கள் ஊடகங்களில் வெளியாகின்றன என்பதால் மாநில அரசுகள் அந்த குறிப்பிட்ட ஊடகங்களை நசுக்குகின்றன.
108 ஆம்பூலன்ஸ் வாங்கியதில் முறைகேடு, சாரதா சிட் பண்ட் முறைகேடு, போலியான போட்டோ மார்பிங் செய்து வெளியிட்டது. தங்க கடத்தல் வழக்கு, தீவிரவாதிகள் போதைபொருள் கடத்தல் என பல்வேறு முறைகேடு வழக்குகளை இந்த மாநிலங்களில் CBI விசாரித்து வருகிறது.
இந்த ஊழல்களையும், கிரிமினல் குற்றங்களையும் சி.பி.ஐ விசாரித்தால் எங்கே உண்மை வெளிப்பட்டுவிடுமோ என அஞ்சுகின்றன. எனவே இதை தடுக்க சி.பி.ஐ விசாரணைக்கு மாநில அரசின் அனுமதியைப் பெற வேண்டும் என்ற சட்டத்தை தங்களுக்கு சாதகமாக்கிக் கொள்கின்றன.
இதனால் பல ஊழல் வழக்குகள் விசாரிக்கப்படாமல் விசாரணையிலும் பல வழக்குகளும் மேல் விசாரணை செய்ய முடியாமல் தேங்கியும் நிற்கின்றன. இது குறித்த ஒன்று வழக்கு விசாரணைக்கு உச்ச நீதிமன்றத்திற்கு சென்றது. சி.பி.ஐ அமைப்பு டில்லி சிறப்பு காவல் சட்டத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டது. அதன் அடிப்படையிலேயே இன்றுவரை செயல்படுகிறது. எனவே ஒரு வழக்கை விசாரிக்க, சம்பந்தப்பட்ட மாநில அரசின் அனுமதி அதற்கு தேவைப்படுகிறது என்பதால் நீதிமன்றமும் கை விரித்துவிட்டது.
மாநில அரசுகளின் இது போன்ற மனநிலை வருங்காலத்தில் விபரீதங்களை உருவாக்கக்கூடும். தேச வளர்ச்சிக்கும் முட்டுக்கட்டையாகிவிடும். இவற்றை மத்திய அரசு கவனத்தில் கொள்ள வேண்டும். மாநில அரசுகளின் அனுமதியின்றி சி.பி.ஐ வழக்குகளை விசாரிக்க ஏதுவாக மத்திய அரசு புதிய சட்டத்தை உடனடியாக ஏற்படுத்த வேண்டும். இது காலத்தின் கட்டாயம்.