மாற்றத்தோடு ஏற்றம் காணும் காஷ்மீர்

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் முதன்முறையாக பாரதத்தின் உள்துறை அமைச்சர் வருகையின் போது ஹுரியத் அமைப்பு ,பிரிவினை வாதிகளுடன் சேர்ந்து ஆர்ப்பாட்டம் கடையடைப்பு எதுவும் நடத்தாமல் அமைதி காத்தது. இது  மாநிலதில் அமைதி திரும்புகிறது என்பதற்கு அடையாளமாக பார்க்கப்படுகிறது. மாநிலத்தில் உள்ள பல்வேறு பிரிவினை வாதிகளின் குழந்தைகள் பத்திரமாக வெளிநாடுகளில் உயர்கல்வி பயிலுவதும் இவர்களால் துன்னடிவிடப்படும் உள்ளூர் மக்களின் குழந்தைகள் மதத்தின் பெயரால் தீவிரவாதிகளாக மாற்றப்படுவதையும் ஆதார பூர்வமாக தெறிவித்தது. ஒருசிலர்  வெளிநாட்டில் இருந்து முறைகேடாக பணம் பெற்ற  வழக்கில் நடவடிக்கை எடுத்ததின் விளைவகை  காஷ்மீர் பள்ளத்தாக்கில்  இந்த மகத்தான மாற்றம் ஏற்பட்டுள்ளது

        அது மட்டுமல்லாமல் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் தற்போது உள்ள மக்கள்   தொகை அடிப்படையயில்    மாநில சட்டசபையின் தொகுதிகள்  மறுவரையரை செய்யப்படும் . புதிதாக தொகுதி வரையறை செய்யப்பட்ட பின்னரே மாநில சட்டசபைக்கு  தேர்தல் நடத்தப்பபடும் என்றும் அறிவித்துள்ளார் இனிமேலும் மாநிலம்இரு குடும்பத்தின் (பரூக் அப்துல்லா ,முப்தி முஹம்மது சயீத்)ஆட்சியில் இருக்க அனுமதிக்கமுடியாது என்று திட்டவட்டமாக அறிவித்தார். மேலும் தற்போது நடைபெற்று வரும் கவர்னர் ஆட்சியில் மாநிலத்தில் பல்வேறு புனரமைப்பு பணிகளையும் முடுக்கி விட்டுள்ளார். இ தன் மூலம் மாநிலத்தில் இதுவரை பள்ளத்தாக்கு பகுதியினர் மட்டுமே அனுபவித்து வந்த அரசின்   அணைத்து சலுகைகளையும் சேவைப்பணிகளையும் லடாக் ஜம்மு மக்களும் அனுபவிப்பார்கள். மேலும் மாநிலத்தில் தனி தொகுதி முறை அமுலாக்கபட  உள்ளது இ தனால்  எஸ் சி எஸ் டி பிரிவினருக்கு மாநிலத்தில் இடஒதுக்கீடு கிடைக்கும் மேலும் குஜ்ஜார் மக்கள் இங்கு பழங்குடிகளாக கருதப்படுவதால் இவர்களுக்கு  இடஒதுக்கீடும் தனித்தொகுதியில் போட்டியிடும் உரிமையையும் பெறுவார் பரூக் அப்துல்லா , முப்தி முஹம்மது போன்றவர்களின்  குடும்ப கட்சிகள்  விருப்பப்படியும் பாக்கிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகளின் விருப்பப்படியான ஆட்சி இனி காஷ்மீரில் வருவதற்கான வழிமுறைகள் ஒழிக்கப்படும்.
வைஷ்ணவ தேவி தரிசன யாத்திரையில் தலையிட்டு குறைந்த நாட்களே அனுமதிக்கப்பட்டதும் , தரிசனத்துக்கு கெடுபிடி, கட்டுப்பாடுகள் என்ற முந்தைய அரசின் அனைத்து தடங்கல்களும் முற்றிலுமாக நீக்கப்பட்டு முழு பாதுகாப்போடு பெருவாரியான பக்தர்கள் அச்சமின்றி உற்சாகத்துடன் கலந்துகொள்ளும்  யாத்திரையானது  வெற்றிகரமாக நடந்து வருகிறது. மேலும் காஷ்மீரிலிருந்து வி  பி சிங் ஆட்சி யின் பொது துரத்தப்பட்ட காஷ்மீர் பண்டிட்களை மீண்டும் மறுகுடியமர்த்தும் பணிகளும் செவ்வனே செயல்பட்டுவருகிறது இதுவரை எதிர்ப்பு தெரிவித்து வந்த ஹுரியத் மற்றும் காஷ்மீர் அரசியல் தலைவர்கள் தற்போது தாங்களே அதனை செய்ய முயல்வதாகவும் அதற்ககு ஆதரவு வழங்குவதாகவும் அறிவித்துள்ளனர். இது மன்னர் எவ்வழியோ குடிகளும் அவ்வழியே என்பதனை வெளிப்படுத்துவதாக உள்ளது காங்கிரஸ் ஆட்சியின் பொது தேவையில்லாமல் அவர்களை தாஜா செய்து அவர்களுக்கு சலுகை மேல் சலுகை கொடுத்து நம் தோள் மீது தூக்கி சுமந்த காலம் போய் தற்போது நாடு முழுமைக்கும் உள்ள மக்களுக்கு என்னென்ன கிடைக்குமோ அது மட்டுமே உங்களுக்கும் கிடைக்கும் நீங்களும் அவர்களைப்போல் ஒன்றுதான் எந்தவிதத்திலும் உயர்ந்தவர்கள் இல்லை என்பதை மண்டையில் புரியும்படி பாடம் எடுத்துள்ளது நரேந்திர மோடி தலைமையிலான அரசு.
அப்பாவி காஷ்மீரிகளின் வருமானமே அங்கு வரும் சுற்றுலா பயணிகளை கொண்டே உள்ளது. மாதத்தில் பாதி  நாட்கள் மக்களை அச்சுறுத்தி வியாபாரிகளை கதைவடைக்கவும் பள்ளி கல்லூரி செல்லும் மாணவர்களை வகுப்புகளை புறக்கணித்து ராணுவத்தின் மீது  கல்லேறியவும் பயன்படுத்தி வந்த போக்கு தற்போது வெகுவாக குறைந்துள்ளது பாக்கிஸ்தானின்  பாலக்கோடு தாக்குதலுக்கு பின்னர் தீவிரவாதிகளின் ஊடுருவல் குறைந்துள்ளது. அவர்களுக்கு ஆதரவளிக்கும் உள்ளூர் மத தலைவர்கள் அரசியல் கட்சி தலைவர்கள் போக்கிலும் மிகபெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது.  பல்லாண்டுகளாக மாநிலத்தில் நிலவி வரும் தலைவலிக்கு சரியான மருத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது என்றே அரசியல் வல்லுநர்கள் குறிப்பிடுகின்றனர். மேலும் மாநிலத்திற்கு விசேஷமாக  வழங்கப்பட்டுள்ள 35A , 370 போன்ற சட்டங்கள் நிரந்தரமானவை அல்ல. அது எப்போது வேண்டுமானாலும் திரும்ப  எடுத்துக்கொள்ளப்படும் என்று தைரியமாக கருத்து தெரிவித்துள்ளார்   மாநிலத்தில் நிலவி வரும் பெரும்பாலான பிரச்சனைகளுக்கு இந்த ஆட்சி நல்ல தீர்வை  தரும்  இதுவரை பிரிவினை மற்றும் சுயநல அரசியல் வாதிகளிடம் சிக்கி சின்னா பின்னமானது போதும் இனிமேலாவது அமைதியான சுபிட்சமான ஒரு ஆட்சி அமையட்டும் என்ற நல்ல நம்பிக்கை தற்போது காஷ்மீர் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *