மமதா உபயம் – வடபுற வங்க கொந்தளிப்பு

கடந்த சில நாட்களாக மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங் பகுதியில் தனி  கூர்க்கா மாநிலம் வேண்டும் என  வன்முறை கலந்த போராட்டம் நடைபெறுகிறது.  போராட்டத்தை தடுத்து நிறுத்த வேண்டிய மம்தா அரசானது, மத்திய அரசின் மீது பழியை போட்டு பொறுப்பை தட்டிக் கழிக்க முயலுகிறது.  கூர்க்கா போராட்டத்தின் பின்னணி என்ன?

ஜூன் மாதம் மேற்கு வங்க அரசு மாநிலத்தின் அனைத்து பள்ளிகளிலும்   1-ம் வகுப்பு  12-ம் வகுப்பு முதல் வரை வங்க மொழியே போதனா மொழியாக இருக்கும் என அறிவித்தது.   ஏற்கனவே நடைமுறையில்  நேபாள மொழி போதானா மொழியாக இரண்டாம் இடத்திலிருந்த  உத்தரவிற்கு மாறாக இந்த உத்தரவு அமைந்திருந்ததால், ஜூன் 1ந் தேதி  துவங்கிய போராட்டம் 8ந் தேதிக்குப் பின்னர்  காலவரையற்ற போராட்டங்கள், கடை அடைப்புகள் என தீவிரமடைந்தது.   இந்த போராட்டத்தை தற்போது  வன்முறை கலவரமாக மாற்றியவர்கள் ஆளும் கட்சியான திருணமூல் காங்கிரஸ் கட்சியினர்.

வடக்கு வங்க பகுதிகளில் இயங்கும் கல்லூரிகளில் பட்ட படிப்பு மற்றும்  பட்ட மேற்படிப்பு படிக்கும் மாணவர்கள் நேபாள மொழியில் பயிலலாம் என்ற அரசு உத்தரவும் உள்ளது.  இதில் காங்கிரஸ் கட்சி அனைத்து தீர்மானத்திற்கும் ஆதரவளித்து விட்டு, கட்சியிலிருந்து விலகி தனி கட்சி துவக்கிய மம்தா, தான் ஆதரவு தெரிவித்த ஒரு தீர்மானத்திற்கு எதிராக அரசு உத்தரவு பிறப்பித்து, கூர்க்கா பிரச்சினை வன்முறை வழியில் திரும்பச் செய்து விட்டார்.

அமைதியாக இருந்த மலைப் பகுதியில், நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் டார்ஜிலிங் பகுதியில் திருணமூல் காங்கிரஸ் அதிக இடங்களில் வெற்றி பெற்று, கூர்க்கா ஜன் முக்தி மோர்ச்சா இரண்டாம் இடத்துக்கு தள்ளப்பட்டதால்  பதவி வெறி தலைதூக்கி, மம்தா மொழியின் மூலமாக அதிகாரத்தை செலுத்த முற்பட்டதால் ஏற்பட்ட விளைவே மலைப் பகுதியில் உருவான கலவரம்.

வட கிழக்கு எல்லைப் புற மாநிலங்களான அஸ்ஸாம், திரிபுரா, மேகாலயா, அருணாசலப் பிரதேசம், சிக்கிம் இவற்றில் தனி மாநில கோரிக்கை வைக்கும் போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக நிதி கொடுப்பதும் ஆயுதங்கள் வழங்குவதும் போராட்டக்காரர்களுக்கு ஆயுத பயிற்சி தருவதும் சீனா.

உளவுத் துறை, பல முறை மேற்கு வங்க அரசுக்கு சீனாவின் பங்கு பற்றிய தகவல் தொகுப்புகளை வழங்கியும் கூட, மம்தா அரசு முறையான நடவடிக்கை எடுக்கவில்லை.

இப்பிரச்சினைக்கு உடனடியான தீர்வு எட்டப்பட வேண்டும்.  இல்லையெனில் சீனாவின்  கரமானது மேற்கு வங்கமாநிலத்திலும் நுழைய முற்படும்.