மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங், தனது மக்களவைத் தொகுதியின் பஞ்சாயத்து ராஜ் பிரதிநிதிகளுடன் இணையதளம் வழியாகக் கருத்தறியும் அமர்வை நடத்தினார். நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில், ஒவ்வொரு வாரமும் அவர் தனது தொகுதியின் ஒரு மாவட்டத்திற்கு நேரடியாகச் சென்று, அந்தக் குறிப்பிட்ட வாரத்தில் அவர் நேரடியாகச் செல்லாத மற்ற மாவட்டத்துடன் இணையம் வழியாக இணைக்க முயற்சிக்கும் அண்மைக்கால சுழற்சிமுறையின் ஒரு பகுதியாகும் இது. இதில் பேசிய அவர், பிரதமர் நரேந்திர மோடி ஏப்ரல் 30ம் தேதி பங்கேற்கவிருக்கும் மனதின் குரல் நிகழ்வின் 100வது பகுதியைக் கேட்குமாறு பஞ்சாயத்து ராஜ் பிரதிநிதிகளை அறிவுறுத்தினார். மேலும், “இந்நிகழ்ச்சியை ஒரு சமூகம் கேட்கும்படியாக வடிவமைத்து, ஏராளமான மக்கள் ஒன்றாக அமர்ந்து ஒரு திருவிழாவைப் போல் இதனைக் கொண்டாடலாம். மனதின் குரல் நிகழ்வின் 100வது பகுதி கொண்டாட்டத்திற்குத் தகுதியானது. ஏனெனில் இது அரசுத் தலைவரால் முற்றிலும் அரசியல் சாராத ஒலிபரப்பாக உள்ளது. நாட்டின் பல்வேறு பகுதிகளின் வளர்ச்சிப் பணிகள் மற்றும் சமூகத்தின் பல்வேறு பிரிவுகளைச் சென்றடையும் நலத் திட்டங்களுக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. ஒரு அரசுத் தலைவர் ஒரு மாதமும் தவறாமல், ஒரு தடங்கலும் இல்லாமல், தனது பார்வையாளர்களுடன் உரையாடுவது இதுவே முதல்முறை. இது ஒரு சாதனை” என்று தெரிவித்தார்.