மந்த நிலை பொருளாதாரத்தை மேம்படுத்த நிதிஅமைச்சரின் அதிரடி அறிவிப்புகள்

நாட்டில் நிலவி வரும் பொருளாதார மந்த நிலை காரணமாக நாட்டின்   பொருளாதார வளர்ச்சி இல்லாத அளவுக்கு மிகக்குறைவாக உள்ளது
இந்த பொருளாதார மந்த நிலையை மாற்றி பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில், மத்திய நிதி அமைச்சர்   நிர்மலா சீதாராமன் தொடர் அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்.முதலில் மோட்டார் வாகனத்துறைக்கும், வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கும் அவர் சலுகைகளை அறிவித்ததோடு, பணப்புழக்கத்தை அதிகரிக்கும் வகையில் வங்கிகளுக்கு ரூ.70 ஆயிரம் கோடி மூலதன வழங்கப்படும் என்றார்., மேலும்   வீட்டு வசதித் துறைக்கும், ஏற்றுமதி துறைக்கும் ரூ.70 ஆயிரம் கோடி சலுகைகளை அறிவித்தார்.

இந்த நிலையில் கோவா தலைநகர் பனாஜியில் நேற்று சரக்கு, சேவைவரி கவுன்சிலின் 37-வது கூட்டத்தில் அவர் பெரு நிறுவனங்களுக்கு அதிரடியாக சுமார் ரூ.1½ லட்சம் கோடி மதிப்பிலான பல்வேறு சலுகை அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்  எந்த விலக்குகளையும், சலுகைகளையும் பெறாமல், 2023-ம் ஆண்டு மார்ச் 31-ந் தேதியோ, அதற்கு முன்னதாகவோ உற்பத்தியை தொடங்கும் நிறுவனங்கள் இந்த பலனைப் பெற முடியும்.இந்த நிறுவனங்கள் சர்சார்ஜ், செஸ் உள்பட எல்லாம் சேர்த்து மொத்தம் 17.01 சதவீதம் வரி செலுத்தினால் போதும். (பழைய வரி வீதம் 29.12 சதவீதமாக இருந்தது.

ஒரு நிறுவனம் சலுகை வரி முறையை தேர்வு செய்யாமல், வரி விலக்கு அல்லது சலுகை பெற்றால், அந்த நிறுவனம் முன் திருத்தப்பட்ட விகிதத்தில் வரி செலுத்த வேண்டும்  விலக்குகளையும், சலுகைகளையும் பெறுகிற நிறுவனங்களுக்கு நிவாரணங்கள் வழங்கும் வகையில், அவற்றுக்கான குறைந்தபட்ச மாற்று வரி 18.5 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.

நிறுவனத்தின்  கைகளில் உள்ள பங்குகளை விற்பதன் மூலம் கிடைக்கிற தொகையின் மீதான செல்வ வரிவிலக்கிக்கொள்ளப்படுகிறது.பட்டியலிட்ட நிறுவனங்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக, அவை 2019-ம் ஆண்டு, ஜூலை 5-ந் தேதிக்கு முன்னர் பங்குகளை பங்குதாரர்களிடம் இருந்து சந்தை விலையை விட அதிக விலை கொடுத்து திரும்ப வாங்குவதற்கான அறிவிப்பை வெளியிட்டிருந்தால், அதற்கு எந்த வரியும் விதிக்கப்படாது..

நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனின் அறிவிப்புகளை தொடர்ந்து மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ், ஒரே நாளில் 1921 புள்ளிகள் அதிரடியாக உயர்ந்தது குறிப்பிடத்தக்கது. கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத உயர்வு இது என்பது குறிப்பிடத்தக்கது.