மத்திய பல்கலைகழகங்கள் தேச விரோத கூடாராங்களாக மாறிவிட்டன

சில தினங்களுக்கு முன் சென்னை ஐ.ஐ.டி யில் பாத்திமா  விடுதியில் தற்கொலை செய்து கொண்டார்.  தற்கொலைக்கு மதம் காரணமாக இருக்கலாம் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில், ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க. மற்றும் ஏ.பி.வி.பி. மீது குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டன.  ஆனால் தற்கொலை செய்து கொண்ட மாணவி தனது கைபேசியில், தற்கொலைக்கு காரணமாக மூன்று பேரராசிரியர்களின் பெயர்களை குறிப்பிட்டுள்ளார்.  இம் மூவருக்கும் இடதுசாரி சிந்தனையாளருக்குமிடையே தொடர்பு இருப்பது தெரிய வந்ததும், ஊடகம் முதல் அரசியல் தலைவர்கள் வரை வாய் திறக்க முடியவில்லை.

பல்கலைகழகங்களில் பணியில் உள்ள பல பேரராசிரியர்கள் , பணியிலிருந்து கொண்டு மாணவர்களை தவறான பாதையில் வழிநடத்திச் செல்லுவது நிதர்சனமான உண்மையாகும்.  மிலிண்ட் பிராமே என்கிற பேரராசிரியர் சென்னை ஐ.ஐ.டி. வளாகத்தில் அன்பு முத்தம் போராட்டம் நடந்த போது ஆதரவு தெரிவித்து, மாணவர்களை தூண்டி விட்டவர்.   2012-ல் பல்கலை விடுதிகளில் சுதந்திரமாக பாலின உறவுகளை வைத்துக் கொள்ளலாம் என்கிற எண்ணத்தை மாணவர்கள் மனதில் விதைத்தவர்கள் பேரராசிரியர் செல்லா ராஜன் என்பவர்.  இதை கண்டித்த பேரராசிரியரை  தாலிபான் மனநிலையில் உள்ளவர் என நையாண்டி செய்தார்கள்.  இவ்வாறு கலாச்சார சீரழிவுக்கு துணை போனவர்கள் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பல்கலைகழகங்கள்.

ஒரு நாட்டின் கல்வியானது, அந்த நாட்டின் கலாச்சாரத்திற்கும், பண்பாட்டிற்கும் ஊறுவிளைவிக்கும் வகையில் அமைந்து விடக் கூடாது என்பது முன்னோர்களின் கருத்தாகும்.

ஜவஹர்லால் நேரு பல்கலைகழகம் முதல் நாடு முழுவதும் உள்ள மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பல்கலைகழங்களிலும், ஐ.ஐ.டி மற்றும் ஐ.ஐ.எம். போன்ற  உயர் கல்வி நிறுவனங்களிலும் தேச விரோத சக்திகள் புகுந்துள்ளன. இடதுசாரி கம்யூனிஸ்ட் அமைப்பின் மாணவர் அமைப்பும், இஸ்லாமிய மாணவர் அமைப்பும், பிரிவினைவாதி பெரியார் பெயரில் இயங்கும் பிரிவினைவாத சக்திகளும் கல்வி நிலையங்களில் புகுந்து கொண்டு, தேச விரோத செயல்பாட்டிற்கு துணை போகிறது.  மாணவர்களுக்கு தேச பக்தியை ஊட்ட கல்வி வளாகத்துக்குள் ராணுவ பீரங்கிகளை நிறுத்த வேண்டும் என  ஜவஹர்லால் பல்கலைகழக துணை வேந்தார் வேதனையுடன் ஒரு நிகழ்ச்சியில் குறிப்பிட்டார்.

பண்பாடு இல்லாத, கலாச்சார சீரழிவின் காரணமாக பல்கலைகழகங்களில், மாணவர்கள் வன்முறையில் ஈடுபடுவதும்,  வளாகத்திற்குள் தற்கொலை செய்து கொள்வதும்,  ஒருவரை ஒருவர் தாக்கி கொலை செய்வதும் சாதாரண நிகழ்வாக மாறிவிட்டது.  ஏற்கனவே சென்னை ஐ.ஐ.டியில் நரேந்திரகுமார் ரெட்டி , ராஹூல் பிரசாத் தற்கொலை செய்து கொண்ட மாணவர்கள்.   இவர்களின் தற்கொலைக்கு காரணம் என்ன என்பதை பற்றி எவரும் கவலைப்பட வில்லை.  அரசியல் கட்சிகள் கூட கூச்சல் போடவில்லை, ஏன் என்றால், தற்கொலை செய்து கொண்ட இரு மாணவர்களும், அம்பேத்கர் மாணவர் அமைப்பைச் சார்நதவர்கள் கிடையாது அல்லது  DYFI, SFI   போன்ற கம்யூனிச மாணவர் அமைப்பினரும் கிடையாது.  ஆனால் சிறுபான்மையின மாணவியான பாத்திமா தற்கொலை செய்து கொண்டவுடன், கூச்சல் எழுப்புகிறார்கள்.  முக்கியமான காரணம், தற்கொலையை வைத்து அரசியல் செய்வதும், இந்து இயக்கங்கள் மீது குற்றச்சாட்டுகளை கூறி,  பல்கலைகழங்களிலிருந்து வெளியேற்ற நடக்கும் சதி செயலாகும்.

கல்லூரிகளிலும், பல்கலைகழகங்களிலும் பிரிவினைவாத, தீவிரவாத எண்ணங்கள் கொண்ட அரசியல்வாதிகள் புகுந்ததே, நாட்டின் உயர்கல்வி நிறுவனங்கள் பாழாகிப் போக ஆரம்பித்தன.  குறிப்பாக இடதுசாரி கம்யூனிஸ்ட் கட்சியின் ஆதிக்கத்தில் உள்ள இந்திய மாணவர் சங்கம்,  அகில இந்திய மாணவர் அமைப்பும், தலித் பெயரில், மாணவர்களிடையே சாதியின் பெயரால் பிளவு ஏற்படுத்தும் அம்பேத்கர் மாணவர் சங்கமும் முக்கிய காரணமாக அமைந்துள்ளன.   கம்யூனிஸ்ட் மாணவர் அமைப்புக்கு போட்டியாக கேரளத்தில் பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியாவின் மாணவர் அமைப்பும் உள்ள நுழைந்து மதத்தின் பெயரால் மாணவர்கள் மத்தியில் பிளவை ஏற்படுத்துகிறார்கள்.

1970-ல் துவங்கப்பட்ட SFI 1990-ல் துவக்கப்பட்ட AISF  என்ற அமைப்புகள் பலம் வாய்ந்தவை உள்ளது.   இந்த அமைப்புகள் இந்த நாட்டின் பண்பாட்டிற்கு புறம்பாக, சீனா மற்றும் ரஷ்யாவின் சிந்தனையில் உருவான அமைப்பு.  இதற்கு மாற்றாக தேச நலனும், நாட்டின் பண்பாட்டை காப்பதற்காவும் துவக்கப்பட்டது அகில பாரத வித்யார்த்தி பரிஷத் .   ஆனால் பல்கலைகழங்களிலும்,  கல்லூரிகளிலும், ஏ.பி.வி.பி.யை ஒழிப்பதற்காகவே        என்ற அமைப்பு இஸ்லாமிய அடிப்படை வாத அமைப்புகளுடன் கை கோர்த்து கொண்டு, அடிதடி மற்றும் கொலை பாதக செயலை செய்கிறார்கள்.  இந்த கூட்டத்திற்கு ஆதரவாகவே இடதுசாரி சிந்தனையும், நக்சல் சிந்தனையும் கொண்ட பேரராசிரியர்கள் செயல்படுகிறார்கள்.    இடதுசாரி மாணவர் அமைப்பின் நோக்கம், மாணவர்களை போராட்ட குணம் கொண்டவர்களாக மாற்றுவது.   நாம் JNU மாணவர்களாகப் பெண்கள், தலித்துகள், பழங்குடியினர், சிறுபான்மையினர் ஆகியோரின் உரிமைகள் சார்ந்த பிரச்னைகளை எழுப்புகிறோம் நாம் சுரண்டலின் கலாசாரத்தை, சாதியின் கலாசாரத்தை, மனுநீதி, பிராமணியம் ஆகியவற்றின் கலாசாரத்தை அழித்தொழிக்க விழைகிறோம். எது கலாசாரம் என்பது இன்னமும் உறுதியாக வரையறுக்கப்படவில்லை.என்பதைப் பெருமையோடு பதிவு செய்கிறேன் என     கன்னையா குமார் மாணவர்கள் மத்தியில் பேசியது.   இந்த பேச்சு வன்முறையை தூண்டும் விதமாக அமைந்துள்ளது என்பதை கூட மறந்து விட்டு, அவர்களை ஆதரிக்கின்ற போக்கு ஏற்படுவதால், பல்கலைகழகங்கள் பிரிவினைவாதிகளின் கூடாரமாக மாறி வருகிறது.

பல்கலைகழங்களுக்கு வெளியே  அ.மார்க்ஸ் தலைமையில் National Confederation of Human Rights Organiztion என்ற அமைப்பு செயல்படுகிறது.  இந்த அமைப்பில் உள்ளவர்கள் மாவோயிஸ்ட்களுக்கு ஆதரவாக மாணவர்களை உருவாக்குதே முதன்மையான நோக்கமாகும்.   இந்த காரியத்தை செவ்வனே செய்பவர்கள் பேரராசிரியர் என்.சாபாப, டாக்டர் ஜெ.தேவிகா, அட்வகேட்கள் கே.பி. முகமது ஷெரீப்,  தங்கசாமி , கார்த்தி, ஷகீல், ஜின்னா போன்றவர்கள்.

ஹைதராபாத் மத்திய பல்கலைகழகத்தில் ஆராய்ச்சி மாணவர் ரோஹித் வெமுலா தற்கொலை பின்னர் நடந்த விசாரனையில் பல உண்மைகள் வெளிச்சத்திற்கு வந்தன.   அம்பேத்கார் மாணவர் சங்கம் என்ற ஒன்றை துவக்கி, தாங்கள் சார்ந்த அரசியல் செயல்பாடுகளை மாணவர்களிடையே தோற்றுவித்து, இதற்கு தூண்டுகோலாகச் சில பேரராசிரியர்களும் இருந்தார்கள்.  அரசியல் அறிவியல்  துறை பேராசிரியர் ஹரிபாபு மற்றும் ஹரகோபால், பொருளாதார துறை  பேராசிரியர் கே.ஒய். ரத்தனம், யாகூப் மேமனின் தூக்குத் தண்டனைக்கு எதிராக நடந்த போராட்டத்தில் உரையாற்றிய மானுடவியல் துறை உதவி பேரராசிரியர் சௌம்யா தேசம்மா போன்றவர்கள்.  இம்மாதிரியானவர்கள் மத்திய பல்கலைகழகத்திலும் மட்டுமில்லாமல்,  உயர் கல்வி நிறுவனங்களிலும் செயல்படுகிறார்கள்.   மானுடவியல் மற்றும் சமூக அறிவியல் போன்ற துறைகளில் பணிபுரியும் பேராசிரியர்கள் பெரும்பாலும் இடதுசாரி மற்றும் போலி மதச்சார்பின்மை  சிந்தனை உள்ளவர்களாகவே இருக்கின்றனர். ஜவஹர்லால் பல்கலைகழக ஜெர்மன் மொழி துறையில் அசோஸியேட் பேராசிரியர்  ஜவஹர்லால் பல்கலைகழக பதிவாளருக்கு எழுதிய கடித்தில், பல்கலைகழக வளாகத்திற்குள் பாகிஸ்தான் நாட்டைச் சார்ந்தவர்கள் பல விடுதிகளில் தங்கியுள்ளார்கள்.  இவர்களுக்கு ஆதரவாக சில மாணவர் அமைப்பு உதவி புரிகிறது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.  இந்த கடிதம் பல்கலைகழங்களில் அந்நிய நாட்டு பயங்கரவாதிகள் தங்கியிருந்தார்கள் என்பதற்கு சான்றாகும்.

இந்நிலையை மாற்றிட, மத்திய,மாநில அரசுகள் அரசியல் சார்பு கொண்ட மாணவர் இயக்கத்திற்கு வளாகத்திற்குள் செயல்பட அனுமதி மறுக்கப்பட வேண்டும்.  பொது பிரச்சினைகளுக்கு போராட வேண்டும் என விரும்பினால், வளாகத்திற்கு வெளியே வைத்துக் கொள்ள வேண்டும் என்ற கடுமையான உத்திரவை பிறபிக்கவேண்டும்.