தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் நகரில் உள்ள மக்கா மஸ்ஜித் அருகே இரு இளைஞர்கள் ‘ஜெய் ஸ்ரீ ராம்’ கோஷங்களை எழுப்பியதாக புகார் அளிக்கப்பட்டதை அடுத்து, ஹைதராபாத் காவல்துறை, மகாராஷ்டிராவைச் சேர்ந்த இரண்டு ஹிந்துக்களை கைது செய்தனர். அன்மோல், விஷால் மற்றும் வெங்கட் என அடையாளம் காணப்பட்ட இருவரையும் காவலர்கள் உடனடியாக பிடித்து விசாரித்தனர். தலைமறைவான மூன்றாவது நபரை பிடிக்க தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். பின்னர் அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அந்த இளைஞர்கள் எந்த கோஷத்தையும் எழுப்பவில்லை என்றும், ஒருவரின் அலைபேசியின் ரிங்க்டோன் அது என்றும் கண்டறிந்தனர். ‘ஜெய் ஸ்ரீ ராம்’ கோஷம் அவரது அலைபேசியில் ரிங்டோனாக வைக்கப்பட்டு இருந்தது. அவருக்கு அழைப்பு வந்தபோது அது கேட்டது. மசூதி அதிகாரிகள் அதனை தவறாகப் புரிந்துகொண்டு சிறுபான்மையினருக்கு எதிரான கோஷங்கள் எழுப்பப்பட்டதாகக் கூறி புகார் அளித்துள்ளனர் என்பதை காவல்துறை உறுதிப்படுத்தியது. இதற்காக அங்குள்ள சிசிடிவி காட்சிகளையும் சரிபார்த்தனர். இதையடுத்து வழக்கு எதுவும் பதிவு செய்யாமல் அவர்களை விடுவித்தனர்.