மக்களின்  பேராதரவுடன் தொடரும் வேல் யாத்திரை

தமிழகத்தின் இன்றய ஆளும்கட்சியும் நேற்றைய ஆளும்கட்சியும் எதிர்பார்த்து போல் அல்லாமல் பாஜகவின்மாநில தலைவர் டாக்டர்   எல் முருகன் தொடர்ந்து தனது இரண்டாம் கட்ட வேல்  யாத்திரையை தொடருகிறார், தீபாவளிக்கு முன்னதாக  திருத்தணியில் தொடங்கிய இந்த யாத்திரையின்  தொடக்க விழாவுக்கு பின்னர் திருத்தணியிலேயே வைத்து கைது படலம் தொடங்கியது.

பின்னர் வழக்கு பதிவு செய்து மாலையில் விடுதலையானதும் அடுத்தநாள் திருவொற்றியூர்  , தாம்பரம் ,செங்கல்பட்டிலும்  நடைபெற்றது. கைது வழக்கு என்றால் அடங்கிபோய் விடுவார்கள் என்று தப்பு கணக்கு போட்டு விட்டது ஆளும் கட்சி.

தீபாவளி பண்டிகைக்கு பின்னர் நேற்று  முன் தினம் வேலூர் திருவண்ணாமலை திருப்பத்தூரிலும் நேற்று   கடலூர் பண்ருட்டி பகுதியிலும் அலைகடலென திரண்டிருந்த மக்கள் கூட்டத்துடன்  வெற்றிகரமாக பவனி வந்து கொண்டிருக்கிறார் முருகன்  . எந்த நிலையிலும் யாத்திரையை நிறுத்தும்  பேச்சுக்கே இடமில்லை திட்டமிட்டபடி யாத்திரை  டிசம்பர் 7 ம் தேதி திருச்செந்தூரில் நிறைவடையும். நிறைவு நிகழ்ச்சியில் பாஜ க வின் அகில பாரத தலைவர் ஜே .பி  நட்டா கலந்துகொண்டு யாத்திரையை நிறைவு செய்து வைப்பார் என்று அறிவித்து உள்ளார்.

கடவுள் முருகனின் அருளாலும்  ஹிந்துக்களின்  அமோக ஆதரவினாலும் இன்று தமிழகமே வியக்கும் வகையில் ஆயிரக்கணக்கானோர் ஆங்காங்கே காவல் துறையின் கைது நடவடிக்கைக்கும் தயாராக இருப்பது காவல் துறையினரையும்கதிகலங்க செய்துவருகிறது    . தேவை இல்லாமல் இல்லாத கொரோனவை காரணம் காட்டி அழிச்சாட்டியம் செய்த ஆளும் கட்சி சாதாரண பாஜக தொண்டனையும்  உசுப்பேத்தி விட்டு காவல்துறையையும் போதாக்குறைக்கு நீதிமன்றத்தையும் சாட்சிக்கு இழுத்து தனது அதிகார எல்லையை காட்ட முயன்றது . ஆளும் கட்சியும் அதன் மறைமுக கூட்டணியான எதிர்க்கட்சி தலைவர்  ஸ்டாலினும் இப்போது வேல் யாத்திரைக்கு கிடைக்கும் தன்னெழுச்சியான      மக்கள் ஆதரவினையம் கண்டு விழிபிதுங்கி போய் இருக்கிறார்கள். சும்மாவே ஆர்ப்பரிக்கும் பா  ஜ க வுக்கு இன்று கூடும் மக்கள் கூட்டம் ஓட்டாக மாறினால் தங்களது எதிர்காலம் என்னாவது என்பதே தற்போது முக்கிய அரசியல் கட்சிகளின் கவலை  .