தினமணி பத்திரிகையின் ஒரே பக்கத்தில் வெளியாகியுள்ள இரு செய்திகள் தரும் விளக்கம் ஒன்றுதான். அது தமிழக அரசு ஹிந்துக்களை ஓரவஞ்சனையோடு புறக்கணிப்பதும் வழிபாடு ஆலய திருவிழாக்கள் கொண்டாட்டம் அனைதிற்கும் அதிரடியாக தடை, ஆனால் கிறிஸ்தவர்களின் விழாக்களுக்கு, கொண்டாட்டங்களுக்கு தேவாலயங்களுக்கு தடை இல்லை, முழுவதுமான அனுமதி எங்கே செல்லுகிறது அரசு இந்த நிலைக்கு காரணம் நம்மை ஆளுகின்ற அல்லது அதிகாரத்தில் கோலோச்சும் அதிகாரிகளா பெரும்பான்மை ஹிந்துக்களின் உணர்வுகளை காயப்படுத்தி அவர்களின் ஹிந்து பழக்க வழகங்களுக்கு தடை செய்து விட்டு சிறுபான்மை மதத்தவர்களுக்கு வரிந்து கட்டி கொண்டு உதவி செய்வது எதற்காக?எதிர்வரும் தேர்தலில் எவர் வெல்ல வேண்டுமானாலும் பெரும்பான்மை மக்களும் ஒட்டு போடவேண்டும் என்பது நினைவில் இருக்கட்டும் எடப்பாடியாரே.
விநாயக சதுர்த்திக்கு தடை – துத்துக்குடி பனிமயமாத ஆலய விழாவுக்கு அனுமதி. திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கந்தசஷ்டி சூரசம்ஹாரத்துக்கு தடை,உள்ளூர் விடுமுறை இல்லை – கோட்டார் அந்தோனியார் திருவிழாவுக்கு உள்ளூர் விடுமுறையுடன் அனுமதி.
ரம்ஜான் பக்ரித்துக்கு தடையற்ற அனுமதி முஸ்லிம்கள் கூட்டம் கூட்டமாக தொழுகை நடத்தினர் வேடிக்கை பார்த்தது போலீஸ். ஆனால் கிருஷ்ண ஜெயந்தி உரியடிக்கோ, மகாளய அம்மாவாசை தர்பனத்துக்கோ அனுமதி இல்லை கோயில் குளங்கள் எல்லாம் மூடப்பட்டு போலீஸ் காவலுடன் தடை
தற்போது சனி பெயர்ச்சி, வைகுண்ட ஏகாதசி பகதர்களுக்கு தரிசனத்திற்கு தடை கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களுக்கும் நடுரவு வழிபாட்டுக்கு அனுமதி . அரசின் மனோநிலையில், புத்தியில் என்ன இருக்கிறது என்பதை மக்களும் பார்த்து கொண்டுதான் இருக்கிறார்கள் நடத்துங்கள் எல்லாத்துக்கும் ஒரு விடிவு உண்டு அது வரும்போது பலர் துண்டக்கானம் துணியக்கானம் என்று ஓட வேடியது இருக்கும் ஜாக்கிரதை!