கேரள மாநில சாலைப் போக்குவரத்துக் கழக சங்கத்திற்கு (கே.எஸ்.ஆர்.டி.சி) அண்மையில் நடைபெற்ற வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில் பாரதிய மஸ்தூர் சங்கம் (பி.எம்.எஸ்) 18% வாக்குகளைப் பெற்று, அங்கீகரிக்கப்பட்ட தொழிலாளர் சங்கமாக மாறியுள்ளது. பிஎம்எஸ் முந்தைய தேர்தலை விட 10% வாக்குகளை அதிகமாக பெற்றுள்ளது. கடனில் மூழ்கிவரும் இந்த சாலை போக்குவரத்து கழகத்திற்கு நம்பிக்கையூட்டும் விதமாக இந்த தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன. சி.பி.ஐ.எம்மின் இணை அமைப்பான சிஐடியு இந்த தேர்தலில், 14% வாக்குகளை இழந்துள்ளது. பா.ஜ.கவின் கேரள மாநிலத் தலைவர் கே.சுரேந்திரன், காங்கிரஸின் ‘டிரான்ஸ்போர்ட் டெமாக்ரடெக் பவுண்டேஷன்’ மீதும் சி.ஐ.டி.யு மீதும் தொழிலாளர்கள் நம்பிக்கை இழந்துள்ளதை இந்த வெற்றி எடுத்துக்கூறுகிறது என கூறியதுடன் வெற்றிக்கு பாடுபட்ட தொழிலாளர்களுக்கு தனது பாராட்டையும் தெரிவித்துள்ளார்.