பிரான்ஸின் தலைநகரில் தமிழகத் தலைநகர்!

சுற்றுச்சூழல் குறித்தான ஐக்கிய நாடுகள் சங்கத்தின் அமைப்பு (க்ணடிணாஞுஞீ ‡ச்ணாடிணிணண் உணதிடிணூணிணட்ஞுணணா கணூணிஞ்ணூச்ட்ட்ஞு), பாரிஸ் நகரில் நடத்திவரும் தனது பருவநிலை மாறுதல் மற்றும் பூமி வெப்பமடைதல்” (இடூடிட்ச்ணாஞு இடச்ணஞ்ஞு எடூணிஞச்டூ ஙிச்ணூட்டிணஞ்) குறித்த 21வது மாநாட்டில், சென்னையில் பெய்துவரும் அடைமழையையும் அதன் பின் ஏற்பட்ட வெள்ளத்தையும் குறித்து விவாதித்து வருகின்றது. இவ்வருடம் நவம்பர் மாதம் 30ம் தேதி தொடங்கி 12 நாட்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இம்மாநாட்டில், உலகம் முழுவதிலுமிருந்து 43 நாடுகளைச் சார்ந்த 750 பிரதிநிதிகள் கலந்து கொண்டிருக்கிறார்கள். மாறிவரும் பருவநிலையால் ஏற்படும் விளைவுகளை அலசவும் கார்பன் மூலம் மாசுபடுத்தும் வளர்ந்துவரும் நாடுகளில் கார்பன் வெளியேற்றத்தைக் குறைப்பது குறித்தும் விவாதங்களுக்காக ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

ஆனால், திடீரென்று சென்னை, அதன் சுற்றுப்புற மாவட்டங்களில் கடந்த ஒரு வாரமாகத் தொடர்ந்து பெய்யும் அடைமழை, அதன் காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு, இம்மாநாட்டின் விவாதப் பொருளாகி விட்டது.

நவம்பர் மாதம் 30ம் தேதி, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இம்மாநாட்டில் இந்தியா சார்பாக கலந்துகொண்டு, pic_page_26,-27_2தொடக்க உரை நிகழ்த்தினார். பருவநிலை மாறுதல் குறித்து விவாதிக்கும்போதெல்லாம், வளர்ந்த நாடுகள், வளர்ந்து வரும் நாடுகளை குறை சொல்லுவதையும், ஏதோ வளர்ந்து வரும் நாடுகள் தான் பருவநிலை மாற்றத்திற்கு காரணம்! போன்றதொரு மாயத்தோற்றத்தை உருவாக்கி வருவதையும் சாடிய மோடி, பருவநிலை மாற்றம்” (இடூடிட்ச்ணாஞு இடச்ணஞ்ஞு) என்ற சொற்றொடரை மாற்றி, பருவநிலை நீதி” (இடூடிட்ச்ணாஞு ஒதண்ணாடிஞிஞு) என்று அழைக்கப்படவேண்டும் என்ற புதியதொரு சித்தாந்தத்தையும் இம்மாநாட்டில் அறிமுகப்படுத்தினார்.

வளர்ந்த நாடுகள் தங்களது வளர்ச்சியை, கடந்த 200 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு தொழிற்புரட்சி மூலம் அடைந்த அதே சமயம், தாங்கள் எந்தெந்த முறையில் சுற்றுச்சூழலை சீர்கேடாக்கின?” என்பதை மறைத்து, தாங்கள் தான் இப்பொழுது சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு உதவுவது போலவும் வளர்ந்து வரும் ஏனைய நாடுகள் சுற்றுச்சூழலை மாசுபடுத்துவது போலவும் பொய்யான ஒரு பரப்புரையை செய்து வருகின்றன. இதை முதலில் அவர்கள் பருவநிலை மாற்றம் என்று சொல்லும் சமயம், அப்பருவநிலை மாற்றத்தை உருவாக்கிய நாடுகள் யாவை என்பதையும், அந்நாடுகள் பாதிப்புக்கு உள்ளாகியுள்ள வளர்ந்து வரும் நாடுகளுக்கு எந்தவிதத்தில் நீதி வழங்க இருக்கின்றன என்றும் கேள்வி எழுப்பும் நேரம் தற்போது வந்துவிட்டது. அதனால் தான், பருவநிலை மாற்றம் என்ற சொற்றொடரை தவிர்த்து, பருவநிலை நீதி” என்று பயன்படுத்த தொடங்கவேண்டும் என்று பிரதமர் கேட்டுக்கொண்டார்.

மோடியின் இப்பேச்சு அமெரிக்க அதிபர் ஒபாமாவினை அதிர்ச்சிக்கும் ஆச்சரியத்திற்கும் உள்ளாக்கியுள்ளதாக தெரிகின்றது. மோடியை எப்போதும், எந்த காரணத்திற்கும் தனது ஆதரவாளர்” என்று நினைத்துக் கொண்டிருந்த ஒபாமாவை, மோடியின் வளர்ந்த நாடுகளுக்கு எதிரான இப்பேச்சு சிந்திக்கச் செய்துள்ளது.

சுற்றுச்சூழல் பேணிக்காப்பது, மற்றும் மாறிவரும் பருவநிலையால் ஏற்படும் பூமி வெப்பமடைவது குறித்து காரசாரமாக பிரதிநிதிகள் விவாதித்துக் கொண்டிருந்த தருணத்தில், சென்னையில் பெய்த மழையும், தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளமும் பாரிஸ் மாநகரின் இம்மாநாட்டில் எதிரொலித்தன. பிரதிநிதிகள் ஒவ்வொருவரும், சென்னையின் நிகழ்வுக்குக் காரணம் பருவநிலை மாற்றமே என்றும் அதற்கு கார்பனை தொடர்ந்து காற்றில் கலக்கச் செய்து தங்கள் தொழிற்சாலைகளை இயங்கச் செய்த நாடுகளே பொறுப்பேற்கவேண்டும்” என்றும் ஒருவருக்கொருவர் குற்றம் சாட்ட ஆரம்பித்துவிட்டனர்.

 

கவலைதரும் சென்னை மழை பலிகள்

புவி வெப்பமடைந்த காரணத்தால் ஏற்பட்ட எல் நீனோ” (உடூ ‡டிணணி)வின் விளைவே சென்னையின் இப்பருவநிலை மாற்றத்திற்குக் காரணம் என்று விளக்கப்பட்டுள்ளது. பசிபிக் பெருங்கடலின் மேல் பகுதி நீர் அதிகளவு வெப்பமடைந்த காரணத்தால், (எப்பொழுதும் உள்ள வெப்பநிலையை விட 3 டிகிரி அதிகமாக பதிவாகி இருக்கின்றது) தென்மேற்குப் பருவமழையில் திடீரென்ற மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால் தான், அளவிற்கு அதிகமாக, யாரும் எதிர்பாராத வகையில் அடைமழை பெய்துள்ளது. 2015-16ம் ஆண்டுக்கான இந்த எல் நீனோ விளைவுதான் இதுவரை பூமியில் ஏற்பட்ட பருவநிலை மாற்றங்களிலேயே கொடூரமானதாக அறிவியலாளர்கள் தெரிவிக்கின்றனர். இது போன்ற ஒரு மோசமான மாற்றம் 1997-98ம் ஆண்டு நிகழ்ந்துள்ளது என்பதையும் நினைவில் கொள்ளவேண்டும். சென்னையின் இப்பெரு வெள்ளத்தால் 50 லட்சம் மக்கள் பாதிப்புக்கு உள்ளாகி இருப்பதாகத் தெரிகின்றது. டிசம்பர் 3 அன்று நாடாளுமன்றத்தில் அளித்த தனது அறிக்கையில், 269 பேர் உயிரிழந்துள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். முழுவதுமான சேதத்தின் மதிப்பீடும் மொத்த உயிரிழப்பு குறித்த கணக்கீடும் வெள்ளம் வற்றியபின் தான் தெரியவரும். தமிழ்நாடு இயற்கைச் சீற்றத்தின் காரணமாக அவ்வப்போது பேரிடரைச் சந்தித்து வருவதை பார்க்கின்றோம். கடந்த ஆண்டு (2014-15) மொத்தம் 75 பேர் இப்பேரிடரால் உயிரிழந்தனர்; 3,750 வீடுகள் நாசமாகின. ஆனால், இந்த ஆண்டோ (நவம்பர் மாதம் வரையிலான கணக்கெடுப்பின்படி), 600 பேருக்கு மேல் உயிரிழந்துள்ளனர்; மற்றும் 1,02,917 வீடுகள் இயற்கைச் சீற்றத்தினால் நாசமாகி உள்ளன. இந்தியாவிலேயே இயற்கைச் சீற்றத்திற்கு அடிக்கடி உள்ளாகி, பெருமளவு உயிரிழப்புக்கும், பொருட்சேதத்திற்கும் உள்ளாகும் ஒரே மாநிலம் தமிழ்நாடு தான் என்பது மிகவும் கவலை அளிக்கின்றது.

பூமியை பாழ்படுத்திய பொறுப்பற்றவர்கள் முன்னேறிய நாடுகளே”

கடந்த 150 ஆண்டுகளாக முன்னேறிய நாடுகள் செய்த செயல்களால்தான் சென்னைக்கு இப்படிப்பட்ட பேரழிவு ஏற்பட்டது. அவர்கள் தொழில் வளர்ச்சி கண்டு லாபம் அடைந்தார்கள். ஆனால் உலகம் வெப்பமடைவதில் போய் முடிந்தது. எனவே முன்னேறிய நாடுகள்தான் தீவிரமாக செயல்பட்டு புவி வெப்பமடைவதை தடுக்கவேண்டும். செய்வதை எல்லாம் செய்துவிட்டு, நடந்ததை மறந்து விடுங்கள் என்று பேசுவது நியாயமல்ல.

– பிரகாஷ் ஜாவடேகர், மத்திய சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைச்சர்