பிரயாக்ராஜ் மகா கும்பமேளா சனாதனத்தின் உன்னதங்கள்

உலகின் மிகப்பெரிய மதக் கொண்டாட்ட நிகழ்வு பிரயாக்ராஜ். ஆனால் கடந்த 15 நாட்களாக உணவுக்காக ஒரு பைசா கூட செலவு செய்யாமல் இருந்தேன். கும்பமேளா ஸ்டால்கள் மக்கள் குழுக்களால் நிரம்பி வழிகிறது, கோடிக்கணக்கான மக்களுக்கு உணவளிக்கிறது, இலவசமாக. ஆனால் இது அகங்காரம் இல்லாத துல்லியமான தொண்டு.

கச்சோரி முதல் இட்லி -தோசை வரை, சப்ஜி- பூரி முதல் சாய்,- பாதாம் பால் வரை, மக்கள் தங்களிடமிருந்து உணவை ஏற்றுக்கொள்ளும்படி மற்றவர்களிடம் கெஞ்சுகிறார்கள். நாம் உணவு உண்பது அவர்களுக்கு இடும் பிக்ஷை என்பது போல ஒரு தலைகீழ் புண்ய பரிமாற்றம்.  இந்த குழுக்கள் யாத்ரீகர்களைத் தேடித் தேடி, அவர்களின் கடையில் உணவு அருந்துமாறு கேட்டுக்கொள்வர். அவர்கள் ஒரு பைசா கூட வசூலிப்பதில்லை; ஆனால் யாராவது நிதி, நன்கொடை அளிக்க முன்வந்தால் முகம் சுளிக்காமல் மறுக்கிறார்கள்.

உணவு சுவையானது மட்டுமல்ல, மிகவும் சுகாதாரமானது  ஆரோக்கியமானது. சுமார் 10 கோடி யாத்ரீகர்கள் நகரத்தில் இருந்தபோது, ​​​​அதிகமாக உணவளிக்க ஸ்டால்கள் இருந்தன.

நீங்கள் அவர்களிடம் வழி கேட்டால், பதிலுடன் ஒரு கோப்பை தேநீர் தருவார்கள்; சோர்வாக நீங்கள் நிழலில் அமர்ந்தால், அவர்கள் ஒரு தட்டில் தின்பண்டங்களை கொண்டு வருவார்கள்; அவர்களிடமிருந்து உணவை எடுக்காமல் தவிர்க்க  பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்! எடுத்துக் கொண்டால் நிறைவை அடைகிறார்கள். அவர்களின் அந்த மனோநிலை பாரதியர்களைத் தவிர அந்நிய விருந்தாளிகளுக்கு ஆச்சர்யம் அளிக்கிறது.

உள்ளூர்வாசிகள் உணவு விநியோகம், பானங்கள் விநியோகம் ஏற்பாடு செய்
துள்ளனர். பக்தர்கள் இலவசமாக கழிப்பறையைப் பயன்படுத்த நகர வாசிகள்
தங்கள் வீடுகளைத் தேடியுள்ளனர், பக்தர்கள் தங்கள் தொலை
பேசிகளை சார்ஜ் செய்ய சாலையோரங்களுக்கு மின்சார இணைப்பை நீட்டித்துள்ளனர். உள்ளூர் மக்களால் அப்பகுதியை சுத்தம் செய்கிறார்கள்.

இந்த சேவைகளை ஒழுங்கமைக்க அரசிடமிருந்து எந்த நிர்ப்பந்தமோ அழுத்தமோ மத ரீதியான கட்டாயமோ இல்லை; எல்லாமே முற்றிலும் இயல்பானது, மேலும் தார்மீக ஆன்மீக நாட்டங்களால் தூண்டப்படுகிறது. அனைத்து வகுப்புகள், சாதிகள், பின்னணிகளைச் சேர்ந்தவர்கள் உண்மை
யாகவே ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்று வித்தியாசம் இல்லாமல் இதற்கு முன்வருகிறார்கள்.

ஒரு நகைக்கடைக்காரர், ஒரு தொழிலதிபர், ஒரு கூலித் தொழிலாளி, ஒரு திரைப்பட தயாரிப்பாளர் ஒரு அரசியல் தொண்டன்  என – அனைவரும் ஒன்றாக சேவை செய்வதைக் கண்டோம்; பாத்திரங்களை கழுவுதல், காய்கறிகளை வெட்டுதல், சமைத்தல், உணவு பரிமாறுதல் எல்லாம் சுழற்சி முறையில். எவ்வளவு சம்பளம் வாங்குகிறீர்கள்? ‘‘சம்பளமா’’ அது ஏன்?  என்கிறார் ஒரு சனாதனி – (இன்றைய மொழியில் தன்னார்வலர்).

இந்த சேவையைத் தொடர்ந்து எந்த மூலதன ஆதாயமும் இருக்காது. தொண்டர்கள் தங்கள் சொந்தப் பணத்தைச் செல
வழித்து, வேலையிலிருந்து விடுமுறை எடுத்துக் கொண்டு புறப்பட்டு, தங்கள் சொந்தச் செலவில் உணவு தயாரித்து, எதிர்பார்ப்பு எதுவும் இல்லாமல், தங்கள் கைகளால் பரிமாறுகிறார்கள். பலர் இதை தலைமுறைகளாக செய்கிறார்கள்.

அவர்கள் சம்பாதித்த “ஆதாயத்தை” அங்கீகரிக்கப்பட்ட வங்கி அமைப்புகளால் பராமரிக்கப்படும் கணக்கில் டெபாசிட் செய்ய முடியாது என்று மட்டும் கூற முடியும்! அது சேகரிக்கப்படும் இடம் மேலுலகம். கிளை கர்மா வங்கி. புண்யாபுண்ய வட்டியும், அவ்வுலக வாழ்வூதிய பலன்களும் மிக அதிகம்.

சந்தேகத்திற்கு இடமின்றி, சூழ்நிலையிலிருந்து லாபம் பெறவும் தேவையை அதிகரிக்கவும் விரும்பும் பல வக்கிரமானவர்கள் உள்ளனர்; அவர்களை பற்றிய கவலை நமக்கு எதற்கு. ஆனால் பொதுவான போக்கு நேர்மறையாகவே இருந்தது.

முதலாளித்துவம் பாரதத்தின் வளர்ச்சிக்கான பாதை என்று சொல்பவர்கள், அவர்களும் வழி தவறிவிட்டனர்.

பாரதத்திற்கு ஒரு தனித்துவமான புரிதல் உள்ளது, இது பொருளாதாரம் உட்பட அதன் அமைப்புகளை வடிவமைக்கிறது. உண்மையில் இந்த புண்யபூமி செழிக்க அதனை வழிநடத்துவது கர்மாவின் மீதான பாரத மக்களின் வழிவழி வந்த சனாதன நம்பிக்கைகளே.

கற்றறிவாளர் : ஆக்ஸ் ஃபோர்டு பல்கலைக்கழக பட்டதாரியான வழக்கறிஞர்.

நன்றி : இணையதளம்

 

சங்கமத்தில் பசியாற்று படல”

சராசரியாக நாளொன்றுக்கு ஒரு கோடிப் பேர் வருகிற மகா கும்பமேளாவில் யாருமே பசியோடு இருக்க வேண்டியதில்லை என்பதுதான் அற்புதம். இந்த அற்புதத்தை சாதிப்பவர்கள் அன்னதான சேவை புரிவதற்காகவே கும்பமேளாவில் முகாமிட்ட எண்ணற்ற தன்னார்வலர் அமைப்புகளும் ஆன்மிக சங்கங்களும். உதாரணமாக ‘மானவ தர்ம சிபிர்’ என்ற அன்னதானக் கூடம் மட்டுமே தினசரி ஒரு லட்சம் பக்தர்களுக்கு அன்னம் படைக்கிறது. அதிநவீன இயந்திரங்கள் மணிக்கு 2,000 சப்பாத்தி வீதம் தயாரிக்கின்றன. காய்கறி நறுக்குவது முதல் சமைப்பது முடிய அனைத்துக்கும் இயந்திரங்கள். ஆனால் 500 பேர் சமையல் பணியில் ஈடுபட வேண்டியுள்ளது. பக்தர்களுக்கு பரிமாற மட்டும் 2,000 தன்னார்வலர்கள் இணைகிறார்கள். இது சிபிர் அமைப்பாளர்கள் சொன்ன தகவல்.

தகவல் : பெரியசாமி