ஆபாச வீடியோ வழக்கில் சிக்கிய ஹசன் எம்.பி., பிரிஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீசை சிறப்பு புலனாய்வு குழுவினர் பிறப்பித்துள்ளனர்.
ஹசன் ம.ஜ.த., எம்.பி., பிரிஜ்வல் ரேவண்ணா (33). முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரன். ஆபாச வீடியோ வழக்கில் சிக்கி உள்ளார். இதனையடுத்து அவர் கட்சியில் இருந்தும் சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளார். இந்த வழக்கை மாநில அரசு நியமித்த சிறப்பு புலனாய்வு குழுவினர் விசாரித்து வருகின்றனர். பிரிஜ்வல் ரேவண்ணா தற்போது, ஜெர்மனியில் உள்ளார்.
விசாரணை குழு முன்பு ஆஜராக அவகாம் வேண்டும் என பிரிஜ்வல் வேண்டுகோள் விடுத்து இருந்தார். இதனை நிராகரித்து விட்ட சிறப்பு புலனாய்வு குழுவினர், அவருக்கு எதிராக விமான நிலையங்களுக்கு லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பி உள்ளனர். இதனிடையே, மாநில உள்துறை அமைச்சர் பரமேஸ்வரா கூறுகையில், சிறப்பு புலனாய்வு குழுவினர் முன்பு பிரிஜ்வல் ரேவண்ணா ஆஜர் ஆக வேண்டும். தவறினால் அவர் கைது செய்யப்படுவார் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.