வீட்டில் மற்றவர்களை விட முதியவர்களுக்குதான் நோய் வர வாய்ப்பு அதிகம். சிகிச்சையின் தேவையும் அதிகம். மற்றவர்களை விட முதியோரைத்தான் மருத்துவ
மனையில் சேர்த்து சிகிச்சை அளிக்கும் சந்தர்ப்பங்களும் அதிகம். எனவே குடும்ப பட்ஜெட்டில் முதியோர்களால் ஏற்படக்கூடிய பொருளாதார சுமை கவலை அளிக்கும். இது ரகசியமல்ல. புதல்வரோ புதல்வியோ, அப்பா அம்மாவை வைத்துக் காப்பாற்றுவதுடன், வைத்திய ஏற்பாடும் செய்து வருவது பாரத மண்ணில் வெகு சகஜம். சுதந்திர பாரதத்தில் முதல் முறையாக (தொன்மையான பாரத வாழ்வியலை நாடிபிடித்துப் பார்த்து அறிந்த) பாரத அரசிற்கு இந்த குடும்ப சவால் கண்ணில் பட்டது. அதனால்தான் பாரத அரசு சென்ற வாரம் 70 வயதுக்கு மேற்பட்ட ஒவ்வொருவருக்கும் (எந்த வருமானப் பிரிவினர் ஆனாலும்) மருத்துவக் காப்பீடு அளிக்க மகத்தான திட்டம் அறிவித்தது; மக்கள் மகிழ்ச்சி அடைகிறார்கள்.
பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் செப்டம்பர் 11 அன்று கூடிய மத்திய அமைச்சரவை மிக முக்கியமான அறிவிப்பு ஒன்றை வெளி
யிட்டது. ஆயுஷ்மான் பாரத் PM-JAY திட்டம் விஸ்தரிக்கப்பட்டு, எந்த வருமானப் பிரிவினர் ஆனாலும் 70 வயதுக்கு மேற்பட்டவர் 5 லட்ச ரூபாய் வரை காப்பீடு (இன்ஷ்யூரன்ஸ்) பெறலாம் என்பதுதான் அந்த அறிவிப்பு.
அமலில் உள்ள ஆயுஷ்மான் பாரத் PM-JAY திட்டம் பாரத மக்கள் தொகையில் அடிமட்டத்தில் உள்ள 40% (12 கோடி) குடும்பங்
களில் உள்ள 55 கோடி பயனாளிகள் இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை சிகிச்சை பெற ஒரு குடும்பத்திற்கு ஆண்டுக்கு 5 லட்சம் ரூபாய் காப்பீடு கிடைக்க வகை செய்கிறது. இது உலகின் மிகப்பெரிய சுகாதார காப்பீட்டு உத்தரவாதத் திட்டம். அதன் கீழ் பதிவு செய்துள்ள குடும்பத்தின் 70 வயதுக்கு மேற்பட்டவர்களும் இந்த வசதியைப் பெறலாம்.
பாரதத்தில் வாழும் 70 வயதுக்கு மேற்பட்ட முதியோர் 6 கோடிப் பேர் (நாலரைக் கோடி குடும்பங்கள்) இந்த காப்பீட்டால் பயனடைவார்கள். அவர்களில் 58 சதவீத பேர் மூதாட்டிகள் என்பது குறிப்பிடத் தக்கது. இந்த மூதாட்டிகளிலும் 54 சதவீத பேர் விதவைகள் என்பதால் இந்த புதிய திட்டம் கூடுதல் வரவேற்புப் பெறுகிறது.
தேவை அறிந்து சேவை
பாரதிய ஜனதா கட்சி தன்னுடைய தேர்தல் அறிக்கையில் 70 வயதுக்கு மேற்பட்ட
வர்களுக்கு இலவச மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை அறிமுகப்படுத்துவோம் என்று வாக்குறுதி அளித்திருந்தது. இந்தாண்டு நிதி அறிக்கையில் உறுதி செய்து கடந்த வாரம் மத்திய மந்திரி சபை ஒப்புதல் அளித்து அறிவிக்கப்பட்டுவிட்டது.
‘ஆயுஷ்மான் பாரத் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்ய யோஜனா’ Ayushman Bharat Pradhan Mantri Jan Arogya Yojana (AB PM-JAY) என்றழைக்கப்படும் இந்தத் திட்டம், 4½ கோடி குடும்பங்கள் கூடுதல் பயன்பெற வழி வகுத்துள்ளது. இது மருத்துவ காப்பீட்டுத் துறையில் ஒரு புரட்சியாகப் பார்க்கப்படுகிறது. தேசத்தில் 12.34 கோடி குடும்பங்களில் உள்ள 55 கோடி தனிநபர்களுக்கு மருத்துவக் காப்பீடு வழங்கி “உலகின் மிகப்பெரிய பொது நிதியுதவி சுகாதார காப்பீட்டுத் திட்டம்” என்று ஆயுஷ்மான் பாரத் போற்றப்பட்டது. இப்போது குடும்பத்
திற்குள் தேவை அறிந்து சேவை!
திட்டத்தின் சிறப்பு அம்சங்கள்
- இது உலகின் மிகப்பெரிய மருத்துவ காப்பீடு திட்டம்.
- 70 வயதிற்கு உட்பட்டவர்களுக்கே இருந்த மருத்துவக் காப்பீடு, தற்பொழுது 70 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு விரிவாக்கப்பட்டுள்ளது.
- இந்தத் திட்டத்தில் தனி மனித வருமானம், ஜாதி, மதம், பாலினம், வயது வரம்பு, குடும்ப அங்கத்தினர்கள் எண்ணிக்கை போன்ற எந்த நிபந்தனைகளும் இல்லை.
- காப்பீட்டுத் தொகை ஒரு குடும்பத்திற்கு ஒரு வருடத்திற்கு ரூ. 5 லட்சம்.
- CGHS போன்ற பிற மருத்துவ காப்பீட்டு திட்டங்களில் பயன் பெறுபவர்கள் அதைத் தொடரலாம் அல்லது அதில் இருந்து விலகி இந்த புதிய திட்டத்தில் இணையலாம்
- தனியார் நிறுவன மருத்துவ காப்பீடு எடுத்துக் கொண்டவர்களும் ESI பயனாளிகளும் இந்தத் திட்டத்தில் இணையலாம்.
- மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் முன்பு மூன்று நாட்களுக்கான செலவுகள், மருத்துவமனைக் கட்டணம், சிகிச்சை செலவுகள், பரிசோதனைக் கட்டணங்கள், அறுவை சிகிச்சை செலவுகள், மருந்துச் செலவுகள், சிகிச்சைக்குப் பிறகு ஏற்படும் செலவுகள்- மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆன பிறகு 15 நாட்களுக்கு உண்டான செலவுகள், தீவிர சிகிச்சைப் பிரிவு கட்டணங்கள், மாற்று உறுப்பு பொருத்தும் செலவுகள்….. என்று பல்வேறு செலவுகள் இந்த திட்டத்தின் கீழ் அடங்கும்.
- நாடு முழுவதும் உள்ள அரசால் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகளில் சிகிச்சை பெறலாம்.
– சமூக ஆர்வலர் வாசுதேவன்