‘பாரதியை நாகாலாந்து போலீஸ் கைது செய்யும்’

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நேற்று சாமி தரிசனம் செய்த பின்,் அண்ணாமலை அளித்த பேட்டி: தமிழக போலீஸ் துறையின் கவனம் சட்டம் – ஒழுங்கை பாதுகாப்பதில் இல்லை; சிதறிப் போய் விட்டது. கவர்னர் மாளிகை முன்பாகவே பெட்ரோல் குண்டு வீச்சு நடத்தும் அளவுக்கு சட்டம் – ஒழுங்கு சீர்கெட்டுப் போய் இருக்கிறது.

அமைச்சர்கள் உதயநிதி, சேகர்பாபு ஆகியோர் மீது தமிழக போலீஸ் துறை நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். நடவடிக்கை எடுக்காமல் இருப்பது தவறு, என்று நீதிமன்றம் சுட்டிக்காட்டி உள்ளது. இதன் பின்பாவது, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒரு மாநிலத்தின் முதல் குடிமகனாக இருக்கும் கவர்னரை, தி.மு.க.,வின் ஆர்.எஸ்.பாரதிமிகக் கடுமையான வார்த்தைகளைக் கொண்டு பேசுகிறார்.

அது தொடர்பான விமர்சனம் எழும்பியதும், தி.மு.க., அதை மாற்ற முயற்சிக்கிறது. பாரதி பேசியதை விட, ஒரு சமுதாயத்தை கேவலமாக, மோசமாக வேறு யாரும் பேசமுடியாது. கடந்த 30 மாதங்களாக அவர் தொடர்ந்து அப்படித்தான் பேசுகிறார். ரோட்டில் செல்லும் பொறுக்கி கூட, அந்த மாதிரி பேச மாட்டான். தி.மு.க.,வின் சொத்தே ஆபாசமாக பேசுவது தான். அதனால், அவரது பேச்சுக்கு சப்பைக்கட்டு கட்டாமல், உடனடியாக போலீசார் கைது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நாகலாந்து மக்கள் புகார் கொடுத்து, அங்குள்ள போலீசார் வழக்கு பதிந்து, அவரை கைது செய்வதற்கு முன், தமிழக போலீஸ் கைது நடவடிக்கை எடுத்தால் நல்லது. இல்லையென்றால், நாகாலாந்தில் இருந்து நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு, அவர் தெரிவித்தார்.