பாரதத்தின் புதிய சாதனை

நேற்று வெற்றிகரமான ஹைப்பர்சோனிக் சோதனையை பாரதம் செய்துள்ளது. ரஷ்யா, சீனா அமெரிக்காவை அடுத்து நான்காவது நாடாக இதில் இணைந்தது. ஒடிசா வீலர் தீவில் இருந்து ஏவப்பட்ட இந்த ஏவுகணை வினாடிக்கு 2 கி.மீ வேகத்தில் 20 வினாடிகளுக்கு மேல் பறந்தது. இது ஒரு முக்கிய தொழில்நுட்ப முன்னேற்றம். விஞ்ஞானிகளை டிஆர்டிஓ தலைவர் சதீஷ் ரெட்டி, ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் வாழ்த்தினர். பொதுவாக ஹைப்பர்சோனிக் தொழில்நுட்பம் ஒலியின் வேகத்தைவிட ஐந்து மடங்கு வேகம் செல்லும். ஆனால் நம் ஹைப்பர்சோனிக் ஏவுகணை ஆறு மடங்கு வேகமாக பறந்துள்ளது. விந்தை புரியும் விஞ்ஞானிகளை நாமும் வாழ்த்துவோம்.