பாரதத்தின் அருமை தெரியாத பக்கத்து வீட்டில் பயங்கரம்

ஏப்ரல் 21 இலங்கை குண்டுவெடிப்புகள் மாபெரும் கடல்பரப்பில் தெரிய வந்திருக்கும் பனிப்பாறையின் முகடு மட்டுமே. கடலின் ஆழத்தில் காத்திருக்குநம் பனிப்பாறைகள் பெரும் கப்பல்களையும் கவிழ்க்கத் தயாராகக் காத்திருக்கின்றன.

குண்டுவெடிப்புகளோ, இஸ்லாமிய பங்கரவாதத் தாக்குதல்களோ இந்தியாவுக்குப் புதிதல்ல. இதுவரை இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் தாக்குதலால் இந்தியா இழந்த உயிர்களின் எண்ணிக்கை பல்லாயிரம் இருக்கும். தமிழகத்தில் மட்டுமே சுமார் 200க்கு மேற்பட்டோரை நாம் இழந்திருக்கிறோம்.

உலகம் முழுவதுமே இஸ்லாமிய அடிப்படைவாதத்தின் கோரப்பிடிக்குள் சிக்கித் தவிக்கும் காட்சிகள் தினமும் அரங்கேறுகின்றன. இஸ்லாமிய நாடுகளிலேயே தினசரி குண்டுவெடிப்புகளும் உயிர்ப்பலிகளும் இல்லாத நாள் இல்லை. பன்மைத்தன்மைக்கு ஏகபோக முதலாளிகளாக தங்களைக் கருதிக் கொண்டிருக்கும் ஐரோப்பா, அமெரிக்காக் கண்ட நாடுகளையும் இஸ்லாமிய பயங்கரவாதம் விட்டுவைக்கவில்லை. 2001ல் அமெரிக்காவின் இரட்டைக் கோபுரங்கள் தகர்க்கப்பட்டபோது, எத்தகைய பாதுகாப்புக் கெடுபிடிகளையும் தற்கொலைப் படையினரால் மீற முடியும் என்பதை உலகம் அறிந்தது. பிரான்ஸ், கனடா, பெல்ஜியம், பிரிட்டன், நார்வே என பல நாடுகளிலும் இஸ்லாமிய அடிப்படைவாதிகள் எந்த நேரத்தில் என்ன செய்வார்களோ என்று அஞ்சும் நிலைதான் நிலவுகிறது. இதில் வேடிக்கை என்னவென்றால், இந்தியாவில் ஹிந்து மத ‘அடிப்படைவாதி’களால் இஸ்லாமியர்கள் பாதிக்கப்படுவதாக இந்நாடுகள் குரல் எழுப்பியதுதான்.

இஸ்லாமியர்களைப் பொருத்த வரை, அவர்களின் புனித நூலே நாட்டின் அரசியல் சட்டங்களை விட மகத்தானது. அந்த மதப்பற்றே மதவெறியாளர்களுக்கு உதவுமாறு அவர்களைத் தூண்டுகிறது. பொதுவாகப் பேசும்போது அமைதி, சகோதரத்துவம் பேசும் இஸ்லாமியர்கள் கூட, தனித்து இருக்கையில் தனது சகமார்க்கப் போராளியின் செயலை நியாயப்படுத்துவார். ஏனெனில் அவர்களைப் பொருத்த வரை இஸ்லாம் அல்லாதது எதுவும் ‘ஹராம்’. இல்ஸாமியர் அல்லாதவர்கள் அனைவரும் காஃபிர்கள்.

கிட்டத்தட்ட இதேபோன்ற சிந்தனைப்போக்கையே அடிப்படைவாத கிறிஸ்தவர்களிடமும் காண முடியும். அவர்கள் கிறிஸ்தவர் அல்லாத அனைவரும் பாவிகள் என்று கூறுகின்றனர். தங்கள் மதத்தைப் பரப்ப முச்சந்தியில் நின்றுகொட்டு சக மனிதரைப் பார்த்து  ‘பாவிகளே மனம் திருந்துகள்’ என்று துணிச்சலாக அவர்கள் பிரசாரம் செய்ய முடியும். மதச்சார்பின்மை என்ற பெயரில் அதை நாம் இந்தியாவில் அனுமதிக்கிறோம்.

கன்னியாகுமரியில் நடந்த மண்டைக்காடு கலவரம் கிறிஸ்தவ மதவாதிகளின் கொடூரத்தை 1980களில் தோலுரித்தது. ஆனாலும், நமது ஊடகங்களும் பெரும்பாலான அரசியல்வாதிகளும் கிறிஸ்தவ மக்களின் அராஜகங்களைத் தட்டிக் கேட்டதில்லை.

மற்றொரு வினோதமான அம்சம், தமிழகத்தில் நிலவும் கிறிஸ்தவ, இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்புகளின் கூட்டணி. நாத்திகவாதிகளும், ஹிந்துவிரோத கம்யூனிஸ்டுகளும் அவர்களுடன் வெட்கமின்றிக் கரம் கோர்ப்பார்கள். வாக்குவங்கி அரசியல்வாதிகளும் அவர்களை தங்கள் கூட்டணிகளில் சேர்த்துக்கொண்டு மதச்சார்பின்மை குறித்து நமக்கு பாடம் நடத்துவார்கள்.

இன்று இலங்கையில் நிகழ்ந்துள்ள இஸ்லாமிய வெறியர்களின் வன்முறை வெறியாட்டத்தால் கிறிஸ்தவர்கள் பலியானவுடன் இவர்களது கூட்டணி கலகலத்துவிட்டது. ஆயினும், மதவெறியர்களின் கோழைத்தனமான தாக்குதலைக் கண்டிக்க முழுமையான மனம் இன்னமும் இந்தக் கயவர்களுக்கு வரவில்லை.

உண்மையில் நியூஸிலாந்தில் சென்ற மாதம் நடத்தப்பட்ட கிறிஸ்தவ மதவெறித் தாக்குதலுக்கு பதிலடியே இலங்கை தொடர் குண்டுவெடிப்பு எனக் கூறப்படுகிறது. இதனை இலங்கை நாட்டு நாடாளுமன்றத்தில் அந்நாட்டின் பாதுகாப்புத் துறை அமைச்சர் ருவான் விஜவர்தன குறிப்பிட்டிருக்கிறார்.

கடந்த மார்ச் 15ஆம் தேதி கிறைஸ்ட் சர்ச் நகரில் உள்ள அல்நூர் பள்ளிவாசலிலும், லின்வுட் இஸ்லாமிய மையத்திலும் புகுந்த கிறிஸ்வத மதவெறியன் ஒருவன் கண்மூடித்தனமாக தானியங்கித் துப்பாக்கியால் சுட்டான் பலர் பலி பலர் காயம் அதற்கான பதிலடியாக, இலங்கையில் இந்த குண்டுவெடிப்புகள் நிகழ்த்தப்
பட்டிருக்க அதிகமான வாய்ப்புகள் உள்ளன.

இந்தியாவில் உள்ள அறிவுஜீவிகள், மதச்சார்பற்ற மேதைகள் நியூஸிலாந்து தாக்குதலின்போது ஒரு கண்ணை மூடிக் கொண்டார்கள் என்றால், இலங்கை குண்டுவெடிப்புகளின்போது மறு கண்ணையும் மூடிக்கொண்டு விட்டார்கள். பூனை கண்ணை மூடிக் கொண்டுவிட்டால் உலகம் இருண்டு விடாது என்பதை இந்த புத்திசாலிகள் எப்போது உணரப் போகிறார்கள்?

அது ஒருபுறம் இருக்கட்டும். உலகை எதிர்கொள்ளும் ஆபத்தான மதவெறியர்களின்  சவாலுக்கு என்ன மருந்து?

கிறிஸ்தவ மதமும், இஸ்லாமிய மதமும் யூத மதம், என்ற மரத்திலிருந்து கிளை பிரிந்து தழைத்த இரு தனி மதங்கள். அடிப்படையில் இவ்விரு மதங்களும் ஒரே ரத்தம்தான். இவ்விரு மதங்களுமே தாய்மதமான யூத மதத்தினரையே கடுமையாக வெறுப்பவை. எனில் பிற மதங்கள் குறித்த இவ்விரு மதங்களின் கண்ணோட்டத்தைச் சொல்ல வேண்டியதில்லை.

தனது மதம் தவிர பிற மதங்கள் அனைத்துமே புனிதமற்றவை என்ற சிந்தனையே செமிட்டிக் மதங்களின் இயல்பு. ஹிந்து, பௌத்தம், சமணம், சீக்கியம், ஜொராஷ்ட்ரீயம், பார்சி போன்ற பிற மதங்களைப் பின்பற்றுவோர் அனைவரும் இவ்விரு செமிட்டிக் மதத்தவரைப் பொருத்த வரை சைத்தான்கள். அவர்களை மதத்தின் பெயரால் கொல்ல புனித மதப்போர் நடத்தலாம், தவறில்லை என்பதே இவர்களது மூளையில் புகுத்தப்பட்டிருக்கும் நச்சு. இஸ்லாமியர்களின் ஜிஹாத் போரும் கிறிஸ்தவர்களின் சிலுவைப்போரும் உலகில் குடித்த மனிதர்களின் ரத்தம் கொஞ்சநஞ்சமல்ல. ஆனால், அன்பு மதமென்று கிறிஸ்தவமும், சகோதரத்துவ மதம் என்று இஸ்லாமும் தம்மைத் தாமே புகழ்ந்து கொள்கின்றன.

இப்போது, உலகில் ஆதிக்கம் செலுத்துவது யார் என்ற போட்டி இவ்விரு செமிட்டிக் மதங்களிடையே துவங்கிவிட்டது. இதன் வடிவம் மூன்றாம் உலகப்போராகவும் உருவெடுக்கலாம். உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமிய நாடுகளும் கிறிஸ்தவ மேலாண்மையை ஏற்றுள்ள அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளும் கடந்த பல ஆண்டுகளாகவே இந்த நிலையை நோக்கித் தான் நகர்ந்து வருகின்றன. ஆப்பிரிக்கவில் உள்ள ஏழ்மையான நாடுகளைப் பங்கிட்டுக் கொள்வதில் இவ்விரு மதங்களிடையிலான போட்டி தொடங்கிவிட்டது.

இதற்கு ஒரே தீர்வு பாரதம் காட்டும் வழிமுறைதான். இந்தியர்களைப் பொருத்த வரை, அனைத்து மதத்தினரையும் சமமாக மதிக்கும் மனோபாவம் இயல்பிலேயே உள்ளது. ஆன்மனநேய ஒருமைப்பாட்டை வலியுறுத்தும் ஹிந்து மதக் கருத்துகள் உலகில் பரவும்போது மட்டுமே, பயங்கரவாதம் வேரோடு கள்ளப்படும்.

அதற்கு முன்னதாக, பாரபட்சம் இல்லாமல், கடும் நடவடிக்கை எடுக்கும் அரசு உறுதியாகச் செயல்பட்டால் குண்டுவெடிப்புகளையும் துப்பாக்கிச் சூடுகளையும் தவிர்க்க முடியும். ம்த அடிப்படைவாதிகளை கட்டுக்குள் வைப்பது எப்படி என்பதை நரேந்திர மோடி அரசிடம் உலக நாடுகள் கற்க வேண்டும். மக்களின் பேராதரவுடன் உள்ள ஆட்சி என்பதால், மோடி எடுக்கும் நடவடிக்கைகள், பயங்கரவாதிகளை கட்டுக்குள் வைத்திருக்கின்றன. உலகம் மேற்கொள்ள வேண்டிய முதல்கட்ட நடவடிக்கை இதுவே. இதில் சகிப்புத்தன்மை, மதச்சார்பின்மை போன்ற பாவ்லாக்களுக்கு சிறிதும் இடமில்லை. நாட்டு மக்களின் பாதுகாப்பா, பயங்கரவாதிகளின் மத சுதந்திரமா என்ற கேள்விக்கு பதில், (தற்போதைய) இந்திய அரசின் செயல்பாடுகளில் இருக்கிறது.

எனினும் பயங்கரவதிகளை எப்போதும் அச்சத்திலும் நெருக்கடியிலும் வைத்திருப்பது நீண்டகால நோக்கில் பயன் தராது. அவர்களுக்கு வரும் நிதியுதவிக்கான் வழிகளை அடைத்தல், சித்தாந்த ரீதியான ஆதரவுத் தளத்தை உடைத்தல், பயங்கரவாதத்துக்கு எதிரான பொதுக்கருத்தை உருவாக்குதல், இஸ்லாமிய, கிறிஸ்தவ மக்களிடையே உள்ள நல்ல மனிதர்களை அடையாளம் கண்டு அவர்களை முன்னிறுத்துதல், பெரும்பான்மை மக்கள் எப்போதும் விழிப்புணர்வுடன் இருத்தல் ஆகிய செயல்பாடுகளின் மூலமாகவே எந்த நாடும் இனிமேல் தன்னைத் தற்காத்துக் கொள்ள முடியும்.