பள்ளிகளில் மதமாற்றத் திணிப்பு

கிறிஸ்தவ மதமாற்ற அழுத்தத்தால் அரியலூரை சேர்ந்த மாணவி உயிரிழந்துள்ள நிலையில், கிறிஸ்தவ பள்ளிகளின் மதமாற்றங்கள் குறித்து பரவலாக விவாதிக்கப்பட்டு வருகிறது. தி.மு.க அரசு, இது உடல் ரீதியான துன்புறுத்துதல் மட்டுமே என வழக்கை திசை திருப்பி, மதமாற்றக் கோணத்தை மறைக்க முயல்கிறது. கிறிஸ்தவப் பள்ளிகள் மதச்சார்பற்ற கல்வியை மட்டுமே வழங்குவதாக பொய்சாயம் பூசப்படுகிறது. ஆனால் “மதச்சார்பற்ற” என்பதன் அர்த்தம் சிறுபான்மை அமைப்புகள் பார்வையில் முற்றிலும் வேறுபட்டது. அவை, மதச்சார்பின்மை என்ற பெயரில் மதத்தை பரப்புவது, ஹிந்து வெறுப்பு பிரச்சாரத்தைத்தான் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றன.

அதற்கு சில உதாரணங்கள்:

தென்காசியில் உள்ள அரசு உதவி பெறும் பாரேன் புரூக் மேல்நிலைப் பள்ளியில் 12ம் வகுப்பு படிக்கும் மாணவி கலைவாணி, திருநீறும் குங்குமமும் வைத்துக்கொண்டு பள்ளிக்கு வந்ததற்காக ஆசிரியர்களால் அவமானப்படுத்தப்பட்டார். அவற்றைத் அழிக்க மாணவி மறுத்ததால், வேறொரு மாணவியை கொண்டு கலைவாணியை அவமானப்படுத்தி அதனை அழித்தனர்.

காஞ்சிபுரத்தில் உள்ள அரசு உதவி பெறும் ஆண்டர்சன் மேல்நிலைப் பள்ளியில், திருநீறு வைத்துக்கொண்டு சென்ற சிறுவர்களை ஆசிரியர் ஜாய்சன் திட்டினார். திருநீற்றையும் ருத்ராக்ஷத்தையும் அணிபவர்கள் ரௌடிகள், தவறானவர்கள், ஒழுக்கக்கேடானவர்கள் என்று கூறினார். சிறுவர்களை ஆபாசமான வார்த்தைகளில் திட்டி அடித்தார். மற்ற மாணவர்களைக் கொண்டும் அவமானப்படுத்தினார்.

ராமநாதபுரத்தில் உள்ள அரசு உதவி பெறும் செயின்ட் ஜோசப் மேல்நிலைப் பள்ளியில் சபரிமலை செல்ல ஐயப்ப விரதம் இருந்த மாணவர்கள், திருநீறு வைத்துக்கொண்டு சென்றதால் பள்ளியில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.

திருச்சியில் உள்ள தனியார் பள்ளியான சர்வீட் மெட்ரிக் பள்ளியின் மாணவர்கள், தீபாவளியன்று பட்டாசு வெடித்ததற்காக தண்டிக்கப்பட்டனர். மெஹந்தி அணிந்ததற்காக மாணவிகளும் தண்டிக்கப்பட்டனர்.

ஈரோட்டில் உள்ள அரசு பஞ்சாயத்து தொடக்கப்பள்ளியில் 4ம் வகுப்பு ஆசிரியையான ஜோஸ்லின் கிரேஸ், பள்ளிக் குழந்தைகளுக்கு கிறிஸ்துவ மதப் புத்தகங்களை விநியோகித்து, கிறிஸ்தவ பாடல்களைப் பாட வற்புறுத்தினார். இதனைக் கண்டித்து பெற்றோர்கள் போராட்டம் செய்தனர்.

ஈரோட்டில் மற்றொரு அரசுப் பள்ளியில், மாணவர் சேர்க்கைக்கு வந்த மாணவர்களையும், பெற்றோரையும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் மதமாற்றம் செய்வது கண்டுபிடிக்கப்பட்டது. பள்ளியில் கல்வித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தியபோது, ​​இரு ஆசிரியர்களின் மேசைகளில் கிறிஸ்தவ மதப் புத்தகங்கள், குறுந்தகடுகள், போன்றவை கைப்பற்றப்பட்டது.

மற்றொரு சம்பவத்தில், அரசுப் பள்ளி ஆசிரியையான நித்யா 6, 7, 8ம் வகுப்பு மாணவர்களை மதமாற்றம் செய்தார். மாணவர்களிடம் ஹிந்து தெய்வங்கள் வெறும் கற்கள், அவற்றை வணங்குபவர்கள் இறந்துவிடுவார்கள் என்று கூறி, ஏசுவைப் பற்றிய படங்களையும் வீடியோக்களையும் காட்டி மாணவர்களை மதமாற்றம் செய்ய முயற்சித்தார்.